3 வயதுக் குழந்தை வெட்டிக் கொலை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கோடாரியால் வெட்டியதில் மூன்று வயது பெண்குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்ததுடன், கொலையாளி தானும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று இன்று காலை யாழ்.வண்ணாா் பண்ணை பகுதியில் இடம்பெற்றது.

வண்ணாா் பண்ணை பத்திரகாளி வீதியில் உள்ள குணரத்தினம் என்பவருடைய வீட்டிலேயே மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில்,

கொலையாளியின் தாயும் அவருடைய இளைய மகனுடைய மகளும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அவருடைய மூத்த மகன் ஈஸ்வர் என்பவர் வீட்டில் இருந்த தாய் மற்றும் தம்பியாரின் குழந்தை மீது கொடூரமாக கோடாரியால் வெட்டி தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளதுடன்,தாய் கழுத்து மற்றும் தலையில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்

குறித்த கொலையாளியான ஈஸ்வர் நஞ்சை அருந்தி தானும் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளாா்.

தனுசன் நிக்சையா ( வயது 03), ஈஸ்வர் (வயது 33) ஆகியோரே இந்த சம்பவத்தில் உயிரிழந்ததுடன் பலமேஷ்வரி (55) என்பவர் படுகாயமடைந்துள்ளார்

சம்பவம் தொடா்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *