முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிரதேசத்தில் மக்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலமீட்பு போராட்டக் கோரிக்கைக்கு விரைவில் அரசாங்கம் தீர்வைப்பெற்றுக் கொடுக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன உறுதியளித்துள்ளார். கடந்த காலங்களில் காணிகள் விடுவிக்கப்படாத போதிலும் போராட்டங்கள் இடம்பெறவில்லை. ஆனால் இன்று காணிகள் இயன்றளவில் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் போராட்டங்கள் வெளிக்கிளம்ப ஆரம்பித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. […]
Other News
அமெரிக்க விமான நிலையத்தில் நாசா விஞ்ஞானியை பிடித்து வைத்து விசாரணை
அமெரிக்காவின் ஹூஸ்டன் ஜார்ஜ் புஷ் சர்வதேச விமான நிலையத்தில் நாசா விஞ்ஞானியை உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த வாரம் பிடித்து வைத்து விசாரணை நடத்தி உள்ளனர். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’வின் விஞ்ஞானிகளில் ஒருவர், சித் பிக்கான்னவர் (வயது 35). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர், அமெரிக்காவில் பிறந்தவர். அமெரிக்காவின் ஹூஸ்டன் ஜார்ஜ் புஷ் சர்வதேச விமான நிலையத்தில் இவரை உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த வாரம் பிடித்து […]
திரும்பிவாருங்கள்; ஈழ அகதிகளுக்கு ரணில் அழைப்பு
அவுஸ்திரேலியாவில் சட்டவிரோத புகலிடம்கோரி படகுகளில் சென்று அந்நாட்டிலுள்ள அகதி முகாம்களில் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாடு திரும்புமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல்லை கன்பராவில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பின் போதே அவுஸ்ரேலியப் பிரதமருக்கு அருகே நின்று, ஸ்ரீலங்கா பிரதமர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். […]
உள்ளாட்சி தேர்தல் வரும் என எதிர்பார்த்தது… சட்டசபை தேர்தலே வரப் போகுது – திமுக செயல் தலைவர் ஸ்டாலின்
உள்ளாட்சி தேர்தல் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் சட்டசபை தேர்தலே வரும் நிலை ஏற்பட்டுள்ளது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அற்ப ஆயுள் அரசு : கோவை மாவட்டம் சூலூரில் திமுக.,வின் மாநில, மாவட்ட, மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், தற்போதுள்ள நிலையில் தமிழகத்தில் இடைக்கால அரசே உள்ளது. இது நிலையான அரசு கிடையாது. இவர்களுக்கு […]
நீதிமன்றத்தில் சரணடைய புறப்பட்ட சசிகலா பெங்களூரு செல்லும் முன் ஜெயலலிதா சமாதியில் கையால் அடித்து சபதம்
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு தண்டைனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் சரணடைய புறப்பட்ட சசிகலா பெங்களூரு செல்லும் முன் ஜெயலலிதா சமாதியில் இருமுறை கையால் அடுத்து சபதம் செய்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய போயஸ் கார்டனில் இருந்து சசிகலா புறப்பட்டார். சாலை மார்க்கமாக பெங்களூரு செல்லும் சசிகலா முன்னதாக ஜெயலலிதா […]
காணிகள் விடுவிக்கும் வரை உணவுத் தவிர்ப்பு போராட்டம்
காணிகள் விடுவிக்கும் வரை உணவுத் தவிர்ப்பு போராட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது. புதுக்குடியிருப்பு பிரதேசத செயலகத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 4 ஆம் திகதி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் மக்கள் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை […]
அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் பதவி ராஜினாமா
அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் பதவி ராஜினாமா பெங்களூர் சிறையில் சரண் அடைவதற்காக சசிகலா புறப்பட்டுச் சென்ற நிலையில், அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ.க்கள், கூவத்தூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சசிகலாவுக்கு எதிராக களம் இறங்கியுள்ள முதலமைச்சர் பன்னீர்செல்வம் அணியிலும் முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் […]
சசிகலா, நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கு அவகாசம் அளிக்க முடியாது – சுப்ரீம் கோர்ட்
சசிகலா, நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கு அவகாசம் அளிக்க முடியாது – சுப்ரீம் கோர்ட் சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு தண்டனை உறுதி செய்யப்பட்ட சசிகலா, நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கு அவகாசம் அளிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துவிட்டது. தமிழகத்தின் முதலமைச்சர் பதவிக்கு வரும் வகையில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரான சசிகலா சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும்படி ஆளுநரிடம் கடிதம் கொடுத்து காத்திருந்தார். ஆனால், […]
ஜெயலலிதா ஆட்சி ஊழலாட்சி, ஊழல் முதல்வராக தொடர்வீர்களா? ஓபிஎஸ் விளக்க ராமதாஸ் வலியுறுத்தல்
ஜெயலலிதா ஆட்சி ஊழலாட்சி, ஊழல் முதல்வராக தொடர்வீர்களா? ஓபிஎஸ் விளக்க ராமதாஸ் வலியுறுத்தல் “ஜெயலலிதா ஆட்சி ஊழலாட்சி என்பது நிரூபிக்கப்பட்டு விட்ட நிலையில், அவரது அணுகுமுறையை பின்பற்ற வேண்டும், அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர வேண்டும் என்று கூறுவதன் மூலம் ஊழலாட்சி தான் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறாரா? என்பதை பன்னீர்செல்வம் விளக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட […]
அ.தி.மு.க. – தி.மு.க. ஊழல் கட்சிகள் – பொன். ராதாகிருஷ்ணன்
அ.தி.மு.க. – தி.மு.க. ஊழல் கட்சிகள் – பொன். ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க. – தி.மு.க. ஊழல் கட்சிகள் என மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசியல் சூழலில் ஆளுநர் பொறுப்பாகி செயல்பட்டு வருகிறார். இதைவிட ஆளுநர் திறம்பட செயல்பட முடியாது. […]





