கேப்பாபுலவு காணி மீட்பு போராட்டம் : கொள்கையில் மாற்றமில்லை எமது உறவுகள் என்ற எண்ணம் இளைஞர்களுக்கு இருக்குமானால் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க கேப்பாபுலவில் 25 ஆம் திகதி ஒன்றுகூடுமாறு இன்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பில் இடம்பெற்றுவரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புலவுக்குடியிருப்பு இராணுவ முகாமிற்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. விமானப்படையினர் நிலைகொண்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் […]
Other News
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைப்பு
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைப்பு வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போரளிகள் நால்வர் சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நிகழ்வு புனர்வாழ்வு நிலையப் பணிப்பாளர் கேணல் ஹமில்டோன் தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் புனர்வாழ்வு நிலைய பயிற்சிப் பொறுப்பாளர் கேணல் சித்திரகுணதூங்க, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த குணசேகர, புனர்வாழ்வு நிலைய பின்னாய்வு அதிகாரி ஏகன் பெர்ணான்டோ, […]
இராணுவத்தினர் தவறிழைத்திருந்தால் தண்டிக்கப்படுவர்: சந்திரிகா
இராணுவத்தினர் தவறிழைத்திருந்தால் தண்டிக்கப்படுவர்: சந்திரிகா போரின்போது குற்றம் இழைத்த இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு மிகவிரைவில் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் அலுவலகத்தின் ஊடாக நிச்சயம் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உறுதியளித்துள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அலுவலகம் இந்த வருட இறுதிக்குள் செயல்பட ஆரம்பித்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் மாலை இடம்பெற்ற […]
ஒற்றையாட்சியில் கடுகளவும் மாற்றமில்லை: எஸ்.பி.திஸாநாயக்க
ஒற்றையாட்சியில் கடுகளவும் மாற்றமில்லை: எஸ்.பி.திஸாநாயக்க அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பேச்சுநடத்தி வருகின்றதெனவும் புதிய அரசியலமைப்பு குறித்து பேசப்படவில்லையென்றும் தெரிவித்துள்ள அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, அரசியலமைப்பு திருத்தத்தின் போது ஒற்றையாட்சி என்ற நிலைப்பாட்டில் கடுகளவும் மாற்றம் செய்யப்பட மாட்டாதென தெரிவித்துள்ளார். தமது அமைச்சின் காரியாலயத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்தோடு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் முழுமையாக நீக்கப்பட மாட்டாதென […]
கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டனப் போராட்டம்
கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டனப் போராட்டம் ஸ்ரீலங்கா விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 18ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டம், யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று காலை 09 […]
அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி தெரிவிப்பு
அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி தெரிவிப்பு அமெரிக்காவுடனான உறவுகள் குறித்து திருப்தி கொள்வதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதனை மேலும் வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கை வந்துள்ள அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். இச் சந்திப்பில், குடியரசுக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் ரொஸ்கம் தலைமையில் ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர்களான டேவிட் பிரைஸ், […]
யுத்தக் குற்ற விவகாரம் : தண்டனை வழங்காதிருக்க ஸ்ரீலங்கா பிடிவாதம்
யுத்தக் குற்ற விவகாரம் : தண்டனை வழங்காதிருக்க ஸ்ரீலங்கா பிடிவாதம் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேச சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட போர் குற்றங்களுக்கு சட்டவிலக்களிப்பை வழங்குவதில் ஸ்ரீலங்கா அரசாங்கம் பிடிவாதமாக உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. 2016/2017 ஆம் ஆண்டுக்கான 159 நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் மனித உரிமை விடயங்கள் குறித்த சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தின் […]
எதிர்ப்பு தெரிவித்த இலங்கை பேட்ஸ்மேன் நிரோஷன் டிக்வெல்லாவிற்கு 30 % அபராதம்: 2 போட்டியில் தடை
எதிர்ப்பு தெரிவித்த இலங்கை பேட்ஸ்மேன் நிரோஷன் டிக்வெல்லாவிற்கு 30 % அபராதம்: 2 போட்டியில் தடை நடுவரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இலங்கை பேட்ஸ்மேன் நிரோஷன் டிக்வெல்லாவிற்கு 30 சதவீதம் அபராதமும், 2 போட்டியில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற 2-வது போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை […]
சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியல் – இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே தொடர்ந்து முதலிடம்
சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியல் – இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே தொடர்ந்து முதலிடம் சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியலில் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஜோகோவிச் (செர்பியா) 2-வது இடத்திலும், வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 3-வது […]
தமிழ் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது இந்தியாவிடம் எடுத்துரைத்தது இ.தொ.க.
தமிழ் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது இந்தியாவிடம் எடுத்துரைத்தது இ.தொ.க. புதிய அரசியலமைப்பை விட தேர்தல் முறை மாற்றமே மலையக மக்களிடையே அதிக தாக்கத்தை செலுத்துமென்றும் ஆகவே தமிழ் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் தேர்தல் முறை மாற்றம் இடம்பெறவேண்டுமென்பதை இலங்கைக்கு இந்தியா எடுத்துரைக்க வேண்டுமெனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கரை கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) சந்தித்த இ.தொ.க. இக்கோரிக்கையை முன்வைத்தது. […]





