அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 3 லட்சம் இந்தியர்கள் உட்பட 1.1 கோடி வெளிநாட்டினரை வெளியேற்ற திட்டம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 3 லட்சம் இந்தியர்கள் உட்பட 1.1 கோடி வெளிநாட்டினரை வெளியேற்றுவது தொடர்பாக அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அதிரடி நட வடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் சட்டவிரோத […]
Other News
பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி அனுமதி அளிக்க முடியாது
பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி அனுமதி அளிக்க முடியாது பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் அடிக்கடி சந்திப்பதற்கு அனுமதி அளிக்க முடியாது என கர்நாடக சிறைத் துறை டிஐஜி சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. […]
பூமியின் அளவை கொண்ட ஏழு கிரகங்களை வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
பூமியின் அளவை கொண்ட ஏழு கிரகங்களை வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு ஒரு நட்சத்திரத்தை சுற்றிக்கொண்டிருக்கும் பூமியின் அளவை கொண்ட ஏழு கிரகங்களை வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அக்கிரகங்களில் உள்ள பிற பண்புகளை பொறுத்து அவைகளின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், ஏழு கிரகங்களில் மூன்றில் மட்டுமே, வழக்கமாக வாழக்கூடிய மண்டலங்களுக்குள் வருகின்றன. அதில்தான் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகக் கருதப்படுகிறது. பூமியிலிருந்து 40 […]
இரவில் அதிகமாக தூங்கத் தொடங்கும் வயது வந்தவர்கள் அல்சைமர்ஸ் மனநோய் ஏற்பட வாய்ப்பு – ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
இரவில் அதிகமாக தூங்கத் தொடங்கும் வயது வந்தவர்கள் அல்சைமர்ஸ் மனநோய் ஏற்பட வாய்ப்பு – ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை வழக்கமாக அதிக நேரத்தூக்கம் தேவைப்படாமல், இரவில் ஒன்பது மணி நேரங்களுக்கும் அதிகமாக தூங்கத் தொடங்கும் வயது வந்தவர்கள் அல்சைமர்ஸ் எனப்படும் நினைவாற்றல் பாதிப்பு நோயின் ஆரம்ப அறிகுறிகளை வெளிக்காட்டலாம் என புதிய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அறுபது வயதை கடந்தவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஒன்பது மணி நேரங்களுக்கும் அதிகமாக வழக்கமாக தூங்கியவர்களுக்கு இந்த […]
ஹாங்காங்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஏழு போலீஸாருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் ஆதரவு பேரணி
ஹாங்காங்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஏழு போலீஸாருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் ஆதரவு பேரணி ஹாங்காங்கில் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட ஏழு போலீஸாருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் ஆதரவு பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். 2014 ஆம் ஆண்டில் ஜனநாயக ஆதரவு போராட்டங்களின் போது கைவிலங்கிடப்பட ஆர்ப்பாட்டக்காரரை அடித்ததற்காக கடந்த வாரம் ஏழு போலீஸாருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை பல அதிகாரிகள் […]
ஒபாமா அதிபராக இருந்த போது திருநங்கை மாணவர்களுக்கு தரப்பட்ட வழிகாட்டல்கள் டிரம்ப் நிர்வாகத்தால் ரத்து
ஒபாமா அதிபராக இருந்த போது திருநங்கை மாணவர்களுக்கு தரப்பட்ட வழிகாட்டல்கள் டிரம்ப் நிர்வாகத்தால் ரத்து அமெரிக்காவில் திருநங்கை மாணவர்களுக்கு ஆதரவாக ஒபாமா அதிபராக இருந்த போது தரப்பட்ட வழிகாட்டல்கள் டிரம்ப் நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஒபாமா அதிபராக இருந்த போது, திருநங்கை மாணவர்கள் தங்கள் பாலின அடையாளத்தை கொண்டு கழிவறைகளை பயன்படுத்த அனுமதிக்குமாறு அரசு பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த வழிகாட்டல் அரசு தேவையற்ற […]
மனித உரிமை கரிசனைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புகிறோம் – அலோக் சர்மா
மனித உரிமை கரிசனைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புகிறோம் – அலோக் சர்மா ஸ்ரீலங்காவின் வட மேற்கு பகுதியில் கடந்த ஜனவரி மாதம் தேவாலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரித்தானிய அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. மத ரீதியில் சிறுபான்மையாக உள்ளவர்களுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களையும் பிரித்தானிய கண்டிப்பதாக பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலக கனிஷ்ட இராஜாங்க அமைச்சர் அலோக் சர்மா கூறியுள்ளார். செயற்பாட்டு சுதந்திரம், நம்பிக்கை […]
கேப்பாபுலவு காணி மீட்பு போராட்டம் : கொள்கையில் மாற்றமில்லை
கேப்பாபுலவு காணி மீட்பு போராட்டம் : கொள்கையில் மாற்றமில்லை எமது உறவுகள் என்ற எண்ணம் இளைஞர்களுக்கு இருக்குமானால் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க கேப்பாபுலவில் 25 ஆம் திகதி ஒன்றுகூடுமாறு இன்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பில் இடம்பெற்றுவரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புலவுக்குடியிருப்பு இராணுவ முகாமிற்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. விமானப்படையினர் நிலைகொண்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் […]
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைப்பு
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைப்பு வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போரளிகள் நால்வர் சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நிகழ்வு புனர்வாழ்வு நிலையப் பணிப்பாளர் கேணல் ஹமில்டோன் தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் புனர்வாழ்வு நிலைய பயிற்சிப் பொறுப்பாளர் கேணல் சித்திரகுணதூங்க, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த குணசேகர, புனர்வாழ்வு நிலைய பின்னாய்வு அதிகாரி ஏகன் பெர்ணான்டோ, […]
இராணுவத்தினர் தவறிழைத்திருந்தால் தண்டிக்கப்படுவர்: சந்திரிகா
இராணுவத்தினர் தவறிழைத்திருந்தால் தண்டிக்கப்படுவர்: சந்திரிகா போரின்போது குற்றம் இழைத்த இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு மிகவிரைவில் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் அலுவலகத்தின் ஊடாக நிச்சயம் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உறுதியளித்துள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அலுவலகம் இந்த வருட இறுதிக்குள் செயல்பட ஆரம்பித்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் மாலை இடம்பெற்ற […]





