இலங்கையின் செயற்பாடுகள் மகிழச்சியளிக்கும் வகையில் இல்லை: ஐ.நா. குற்றச்சாட்டு இலங்கையில் நிலைமாறுகால பொறிமுறை தொடர்பான செயற்பாடுகளின் வேகம் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமையவில்லை எனச் சுட்டிக் காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன், தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான அடிப்படை விடயங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார். ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற […]
Other News
பிரிந்து நின்றால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது – மைத்திரி
பிரிந்து நின்றால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது – மைத்திரி பிரிந்து சென்று செயற்பட்டால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மக்கள் தமக்கிடையில் சந்தேகங்களை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது என வலியுறுத்திய மைத்திரிபால சிறிசேன, அனைத்து மக்களும் உள்ளத்தால் ஒன்றுபட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் என்ற ஒரு புதிய குறைகேள் அலுவலகமொன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள […]
ஈழ அகதிகளின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
ஈழ அகதிகளின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட ஈழத் தமிழர்களால் இந்தோனேஷியாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. ஈழ அகதிகளின் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து விரைவில் தீர்வினை பெற்றுத்தருவதாக சர்வதேச அகதிகள் நிறுவன அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்தே குறித்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட ஈழ அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தம்மை வேறு […]
ராணுவ பிடியிலிருந்த புதுக்குடியிருப்பு மக்களின் பகுதியளவு காணி விடுவிப்பு
ராணுவ பிடியிலிருந்த புதுக்குடியிருப்பு மக்களின் பகுதியளவு காணி விடுவிப்பு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காணிகள் மூன்று கட்டங்களாக விடுவிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததற்கு அமைய, தற்போது முதல் கட்டமாக ஏழரை ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதை அடுத்து அம்மக்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதன்படி மக்கள் தங்கள் சொந்த காணிகளுக்குள் செல்ல இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களுக்கு சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்ற […]
நல்லாட்சியில் தமிழ் மக்கள் பெற்ற நன்மைகள் மிகவும் குறைவு: மாவை
நல்லாட்சியில் தமிழ் மக்கள் பெற்ற நன்மைகள் மிகவும் குறைவு: மாவை தமிழ் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை இழந்து வரும் நிலையில் மிகவும் நம்பிக்கையுடனும் கனத்த மனதுடனும் உங்களை சந்திக்கிறேன். உங்களது நல்லாட்சியிலும் தமிழ் மக்கள் பெற்றிருக்கும் நன்மைகள் மிகவும் குறைவு என தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ‘ஐனாதிபதியிடம் தெரிவியுங்கள்’ முறைப்பாட்டு அலுவலகம் இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. […]
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? வவுனியாவில் பேரணி
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? வவுனியாவில் பேரணி காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? உண்மையை சொல்’ எனக் குறிப்பிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இன்று (சனிக்கிழமை) பேரணியொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இப்பேரணியின் நிறைவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாய்மார் தமது உறவுகளை எண்ணி கதறி அழுத சம்பவம் அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. வவுனியா […]
சீனாவின் 2017- ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை – ராணுவ பட்ஜெட் 7 சதவீதம் அதிகரிப்பு
சீனாவின் 2017- ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை – ராணுவ பட்ஜெட் 7 சதவீதம் அதிகரிப்பு சீனாவின் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ராணுவ பட்ஜெட்டுக்கென கடந்த நிதியாண்டைவிட கூடுதலாக 7 சதவீதம் தொகையை ஒதுக்க அந்நாட்டின் கம்யூனிஸ்ட் அரசு தீர்மானித்துள்ளது. உலகில் அதிக அளவிலான மக்கள்தொகையை கொண்டுள்ள சீனா, அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ராணுவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தற்போது 23 லட்சம் படைவீரர்களை வைத்திருக்கும் சீனா, […]
ஈராக் மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ரசாயன குண்டு வீச்சு 12 பேர் காயம்
ஈராக் மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ரசாயன குண்டு வீச்சு 12 பேர் காயம் ஈராக் மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய ரசாயன குண்டு வீச்சில் 12 பேர் காயம் அடைந்தனர். ரசாயன குண்டுகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் மறைமுகமாக தயாரித்து வந்தனர். அதை முதன் முறையாக மொசூலில் பயன் படுத்தியுள்ளனர். ஈராக்கின் மிகப் பெரிய 2-வது நகரமான மொசூல் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்தது. அதை மீட்க ஈராக் […]
பப்புவா நியூ கினியா தீவில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பப்புவா நியூ கினியா தீவில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பப்புவா நியூ கினியா நாட்டின் போகைன்வில்லி பகுதியை இன்று 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. பப்புவா நியூ கினியா நாட்டின் போகைன்வில்லி பகுதியை இன்று 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. போகைன்வில்லி பகுதியில் இருந்து சுமார் 120 கிலோமீட்டர் தூரத்தின் தெற்கே இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 […]
ரேசன் பொருட்கள் சீராக வினியோகம் செய்யப்படுகிறதா? – செல்லூர் ராஜூ மதுரையில் ஆய்வு
ரேசன் பொருட்கள் சீராக வினியோகம் செய்யப்படுகிறதா? – செல்லூர் ராஜூ மதுரையில் ஆய்வு ரேசன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் தவறான குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர் என்று செல்லூர் ராஜூ கூறினார். தமிழகம் முழுவதும் பொது வினியோக திட்டத்தின் கீழ் அரிசி, சர்க்கரை, மண்எண்ணை மற்றும் சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ் துவரை, பாமாயில் ஆகியவை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் சீராக […]





