Other News

இலங்கையில் 81 சிறுவர்கள் உட்பட 2,688 பேருக்கு எயிட்ஸ்!

இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டு முடிவில் நாட்டில் மொத்தமாக 2,688 பேருக்கு எயிட்ஸ் நோய் பீடித்திருக்கின்றது எனவும், அவர்களில் 81 பேர் சிறுவர்கள் எனவும் சுகாதார அமைச்சின் பால்வினை நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த 2,688 நோயாளிகளில் ஒருவர் மாத்திரம் மரணமடைந்துள்ளார். இலங்கையில் எயிட்ஸ் நோய் வெகுவாகக் குறைந்திருந்தபோதிலும் அது இப்போது படிப்படியாக அதிகரித்துவருகின்றது. மேல் மாகாணத்திலேயே அதிகமானோர் இந்த நோய்க்கு ஆளாகியுள்ளனர். முன்பின் அறிமுகமில்லாதவர்களுடன் பாதுகாப்பற்ற உடலுறவை வைத்துக்கொள்வதே இந்த […]

ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கைக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுப்பது எவ்வாறு? – பிரிட்டன் தூதுவருடன் சம்பந்தன் பேச்சு 

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸுக்கும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்குமிடையில் நேற்று முக்கிய சந்திப்பு நடைபெற்றது. கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதுவர் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தனுடன் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியும் கலந்துகொண்டார். இந்தச் சந்திப்பு தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவிக்கையில், “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் […]

ஊடகவியலாளர் படுகொலைக்கு நீதி: சர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே சாத்தியம் என்கிறார் விக்கி!

“கடந்த அரசின் காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான உண்மையைக் கண்டறிவதற்கு இதுவரை எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கும் வகையிலான சட்டம் விடுபாட்டு நிலையில்  காணப்படுகையில் இவை தொடர்பில் விசாரணையை முன்னெடுப்பதற்கும், நீதியின்’முன் நிறுத்துவதற்கும் சர்வதேசத்தின் அழுத்தம் முக்கியமானது”  என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் கொலைகுறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்தால் நன்று என்ற கருத்தையும் முதலைமைச்சர் வெளிப்படுத்தினார். […]

கொழும்பு பீஜிங் நெருக்கத்தால் டில்லி அதிருப்தி! மஹிந்தவை இந்தியாவுக்கு ஒக். 14இல் அழைக்கிறது மோடி அரசு!!

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் – பிரசன்னம் அதிகரித்துவருவதால் கடும் அதிருப்தியில் இருக்கும் இந்திய அரசு, கொழுப்பு அரசை தம்பக்கம் வளைத்துப்போடுவதற்காக தீவிர இராஜதந்திர வியூகங்களை வகுத்துவருகின்றது. இதன் ஓர் அங்கமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை டில்லிக்கு அழைத்துள்ள மத்திய அரசு, அவருடன் முக்கிய பேச்சில் ஈடுபடவுள்ளது. இந்தச் சந்திப்பு அடுத்த மாதம் 14ஆம் திகதிக்குப் பின்னர் நடைபெறவுள்ளது. இந்து சமுத்திர வலயத்தில் கேந்திர நிலையமாக விளங்கும் இலங்கையின் வெளிவிவகாரக் […]

ரோஹிங்யா முஸ்லிம்கள் குறித்து 21இல் இலங்கை நாடாளுமன்றில் விவாதம்!

மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைக்குக் கண்டனம் தெரிவித்து எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.   இதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொண்டுவரவுள்ளது.   செப்டெம்பர் மாதத்துக்குரிய இரண்டாம் வார நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகின்றது. 21ஆம் திகதி அரசமைப்பு சபையின் வழிநடத்தும் குழுவின் இடைக்கால அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அன்றைய  தினம் சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னரே மேற்படி […]

வித்தியா கொலை வழக்கு – செப்ரெம்பர் 27 அன்று தீர்ப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு விசாரணைகள் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகின்றன. நேற்று வழக்குத் தொடநர் தரப்பு சாட்சியங்களின் தொகுப்புரை வழங்கப்பட்ட நிலையில் இன்று எதிரி தரப்பின் சாட்சியங்களின் தொகுப்புரை வழங்கப்பட்டது. அதன்பின்னர் தீர்ப்பாயம் எதிர்வரும் 27ஆம் திகதி கூடும் என்று திகதியிடப்பட்டது. அன்று தண்டனைத் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. https://www.youtube.com/watch?v=cXTIySR1QUs

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலியை கொடூரமாக கொன்றேன்

ஹைதரபாத் : தெலுங்கானா மாநிலம் மியாபூரை சேர்ந்தவர் கிஷோர் ஜெயின், இவர் மகள் சாந்தினி(17) 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை நண்பர்களை சந்திக்க செல்வதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவருடைய பெற்றோர் சாந்தினியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மடினகுடா வனப்பகுதியில் […]

அமெரிக்கா மீது வரலாறு காணாத தாக்குதல்

சுவிட்சர்லாந்து: ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள புதிய பொருளாதார தடைகளுக்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரத்தில் அமெரிக்கா நடத்திய கருத்தரங்கில் பேசிய அமெரிக்காவுக்கான வடகொரியா தூதர் ஹான் டே வடகொரியா மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தங்களை ஏற்படுத்தி வருகிறது என்றார். மீண்டும் மீண்டும் வடகொரியாவின் இறையாண்மைக்கு அமெரிக்கா கலங்கம் விளைவித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதன் பலனை அமெரிக்கா விரைவில் உணரும் என்றும் அவர் […]

​தாய்லாந்தில் தொடங்கிய ”கும்கி – 2” படப்பிடிப்பு!

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது கும்கியின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ள பிரபுசாலமன் அதற்கான கதையை தயார் செய்து வருகிறார். மதி, ஷிவானி முதன்மை வேடம் ஏற்றிருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கடந்த வாரம் முதல் தாய்லாந்தின் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. யானையை மையமாக கொண்ட படம் என்பதால் முதலில் […]

புதிய அரசமைப்பு தொடர்பில் டில்லியிடம் இலங்கை ‘கப்சிப்’! – இருதரப்பு உறவு பலமாகவே உள்ளது என்று மாரப்பன தெரிவிப்பு

“புதிய அரசமைப்பு ஏற்பாடுகள் குறித்து இந்தியப் பிரதமருக்கு நான் எதுவும் விளக்கமளிக்கவில்லை. அதற்கு இன்னமும் காலஅவகாசம் உள்ளது. ஆனாலும் பாதுகாப்பு, பொருளாதார, சிநேகபூர்வ விடயங்கள் குறித்துப் பேசினோம். பிராந்திய அரசியல் குறித்தான விடயத்தில் இந்தியா தெளிவாக உள்ளது. அதனால்தான் எங்களுடன் நெருக்கமாகவும் உள்ளது. கொழும்பை புதுடில்லி நன்கு புரிந்துவைத்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதற்கான உத்தரவாதத்தை என்னிடம் தந்தார்.” – இவ்வாறு கருத்து வெளியிட்டார் வெளிவிவகார அமைச்சர் திலக் […]