விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் வைரல் ஹிட்டடித்த ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலின் மூலம், கேரளாவைச் சேர்ந்த ஆசிரியைகளான ஷெரில் மற்றும் அன்னா எனும் இரண்டு இளம்பெண்கள் பிரபலமானார்கள். இந்தப் பாடலின் மூலம் ஷெரிலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். சினிமாவில் நடிக்கும் எண்ணம் இருப்பதாகவும், தனக்கு நடிகர் சூர்யா நடித்த […]
Other News
நடிகர் விஜய் தமிழக முதல்வர் பழனிச்சாமியை சந்தித்துள்ளார்.
விஜய் நடிப்பில் மெர்சல் திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில், குறித்த படத்திற்கான தணிக்கை சான்றுதழ் இன்னும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், நடிகர் விஜய் தமிழக முதல்வர் பழனிச்சாமியை சந்தித்துள்ளார். எதிர்வரும் 18 ஆம் திகதி தீபாவளியன்று மெர்சல் வெளிவரவிருக்கும் நிலையில், நடிகர் விஜய் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தமிழக முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து பேசியுள்ளார். இருவருக்குமிடையில் என்ன பேசப்பட்டது என்பது குறித்த விடயம் ஏதும் வெளிவரவில்லை. எனினும் மெர்சல் படத்திற்கு இன்னும் தணிக்கை […]
வடக்கின் கலாசாரத்தை அழிப்பதற்கு சிங்கள, பெளத்த இனவாதம் துடிக்கிறது! – வடக்கின் கல்வி அமைச்சர் எச்சரிக்கை
“கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில் சிங்கள, பெளத்த இனவாதம் வடக்கில் அதிகமாகக் குடிகொண்டிருக்கிறது. எமது மக்களின் பொருளாதார வளங்களை கையகப்படுத்துவதன் ஊடாக இன்னொரு பக்க இனப்படுகொலையும் நடைபெற்று வருகின்றது.” – இவ்வாறு வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.நாவற்குழி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் நடைபெற்ற வருடாந்தப் பரிசளிப்பு நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு […]
காணாமல் ஆக்கப்பட்ட சொந்தங்கள் எங்கே? – தேடி அலையும் உறவினர்களில் ஐவர் பெருந்துயரால் மரணம்!
காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவினர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்கள் பல மாதங்களைக் கடந்துள்ள போதிலும் இது விடயம் தொடர்பில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தேசிய, சர்வதேச ரீதியில் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உறவினர்களைத் தேடிப் போராட்டத்தை ஆரம்பித்தவர்களுள் 5 பேர் கடந்த ஆறு மாத காலத்துக்குள் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினமும் தாயொருவர் மரணடைந்துள்ளார். கொழும்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெள்ளைவானில் […]
சு.கவில் உள்ள மஹிந்தவின் ஆதரவாளர்களுக்கு எதிரான மைத்திரியின் அதிரடி தொடர்கிறது! – பறிபோகிறது மேலும் சிலரின் பதவி
மஹிந்த அணியான பொது எதிரணிக்கு நேரடியாகத் தமது ஆதரவை வழங்கிவரும் ஸ்ரீலங்கா சுதத்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகள் அதிரடியாகப் பறிக்கப்பட்டிருந்த சூழலில் மேலும் சிலரின் பதவிகள் விரைவில் பறிபோகவுள்ளதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. கடந்த வியாழக்கிழமை மத்துகம மற்றும் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர்களாக இருந்த குமார வெல்கம, மஹிந்தானந்த அலுத்கமகேவின் பதவிகள் பறிக்கப்பட்டு குறித்த தொகுதிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதேவேளை, அத்தனகல தொகுதியின் புதிய அமைப்பாளராக […]
அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்துக்கு உடன் தீர்வு வழங்குக! – பிரதமரை வலியுறுத்துகிறார் சி.வை.பி.ராம்
அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துவதற்கு அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை உடன் நிறைவேற்றுதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளர் சி.வை.பி.ராம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வலியுறுத்துகின்றார். இவ்விடயம் சம்பந்தமாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “வவுனியா மேல்நீதிமன்றத்தில் நான்கு வருடங்களாக இடம்பெற்ற தமது வழக்குகளை அநுராதபுரம் மேல் […]
உதயநிதியுடன் ஜோடி சேரும் மாதவன் பட நாயகி?
மாதவன் நடித்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர், உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்திற்குப் பிறகு உதயநிதி ‘இப்படை வெல்லும்’ என்ற படத்தில் நடித்து வந்தார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். கவுரவ் இப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் இசையை சிவகார்த்திகேயன் வெளியிட்டார். விரைவில் […]
அஜித் மகளின் அதிர்ச்சி செயல்…
நடிகர் அஜித்தின் மகள் தனது மாடர்ன் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. என்னை அறிந்தால் படத்தில் வயதுக்கு மீறின ஒரு புரிதலோடு அஜித்திற்கு மகளாக நடித்து ஒரு இயல்பான கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி மக்களிடமும், சினிமாவிலும் பிரபலமானவர் பேபி அனிகா. இதை பார்த்து அதிர்ச்சியான நெட்டிசன் ஒருவர் மீம்ஸ் போட்டு தன் உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். குழந்தை நட்சத்திரமாய் வளம் வந்து கொண்டிருந்த அனிகா […]
நான் தீபாவளி கொண்டாடமாட்டேன்
அடுத்த வாரம் இந்தியாவே தீபாவளி கொண்டாடும், ஆனால் நடிகை ஓவியா கொண்டாடமாட்டாராம். அது ஏன் என அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். “எனக்கு எல்லா நாளுமே தீபாவளிதான், எல்லா நேரத்தையும் நான் கொண்டாடி கொண்டு தான் இருக்குறேன். ஒரு நாளை அதற்கென ஒதுக்கிவைத்து செய்வதில்லை” என ஓவியா தெரிவித்துள்ளார்.
இலங்கை – இந்தியா இடையே கூட்டு இராணுவப் பயிற்சி!
இந்தியா – இலங்கை இராணுவத்தினர் எதிர்வரும் 13ஆம் திகதிமுதல் 25ஆம் திகதிவரை கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். பூனேயில் நடைபெறும் இக்கூட்டு இராணுவப் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக இன்றைய தினம் இலங்கையிலிருந்து இராணுவக் குழாமொன்று இந்தியா சென்றுள்ளது. எதிர்க்கிளர்ச்சிகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு, தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்துவதற்கான கூட்டு மூலோபாயங்களை உருவாக்குவது உள்ளிட்ட பயிற்சிகள் இதன்போது அளிக்கப்படவுள்ளன. இரு நாடுகளிலும் இராணுவ நடைமுறைகளை சிறந்த முறையில் பரிமாறி, இரு இராணுவங்களுக்கிடையே ஒரு […]





