காரைக்குடியில் மணிசங்கர் ஐயர், திருமாவளவன் ஆகியோரை கண்டித்து பாஜகவின் நடத்திய போராட்டத்தில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, வேஷ்டியை மடித்து கட்டினால் நானும் ரவுடி தான் என கொந்தளித்துள்ளார். கடந்த 6-ஆம் தேதியை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அம்பேத்கர் நினைவு தினம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இஸ்லாமியர் எழுச்சி நாளாக கொண்டாடியது. அப்போது சென்னையில் ஒரு மாநாட்டையும் நடத்தியது அக்கட்சி. அதில் பேசிய திருமாவளவன், […]
Other News
ஜெயலலிதா போயஸ் கார்டனில் தாக்கப்பட்டிருக்கலாம் ?
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் சசிகலா குடும்பத்தின் மீது சந்தேகம் இருப்பதாகவும், ஜெயலலிதா போயஸ் கார்டனில் தாக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவரது அண்ணன் மகள் தீபா விசாரணை ஆணையத்திடம் கூறியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை. சசிகலா குடும்பத்தினர் மட்டுமே அவரோடு இருந்தனர். அவர் சிகிச்சை பெற்ற எந்த […]
அதிக விலைக்கு தேங்காய் விற்ற 28 பேருக்கு சட்ட நடவடிக்கை
மத்திய மாகாணத்தில் நிர்ணய விலையை விட கூடுதல் விலைக்கு தேங்காய் விற்பனை யில் ஈடுபட்ட 28 வியாபாரிகளுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக 9, 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் மேற்கொண்ட திடீர் சோதனையின்போதே நிர்ணய விலையை விடக் கூடுதல் விலையில் தேங்காய் விற்பனை செய்த வியாபாரிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார சபையின் […]
டி.கே.பி தசநாயக்க உள்ளிட்ட ஐவரினது விளக்கமறியல் நீடிப்பு.!
11 இளைஞர்களின் கடத்தல் மற்றும் காணாமற்போதலுடன் தொடர்புபட்டாரென்ற சந்தேகத்தின்பேரில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி தசநாயக்க உள்ளிட்ட ஐவரினதும் விளக்கமறியல் எதிர் வரும் 22ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு முதன்மை நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2008 மற்றும் 2009 ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சி.ஐ.டி விசாரணைகளின்போது வெலிசரவில் அமைந்துள்ள கடற்படைத் தளத்தில் வைத்து முன்னாள் […]
சரவணன் மீனாட்சி தொடரை பார்த்து தற்கொலை செய்து கொண்ட ரசிகர்?
சரவணன்-மீனாட்சி என்ற வெற்றிபெற்ற தொடரை இயக்கி வருபவர் பிரவீன் பென்னட். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் இயக்கிவரும் சரவணன்-மீனாட்சி, ராஜா-ராணி போன்ற சீரியல்கள் பற்றி பேசியுள்ளார். அப்போது சரவணன்-மீனாட்சியில் வேட்டையன்-மீனாட்சி திருமணத்தின் போது USAவில் இருந்து ஒரு ரசிகர் தனக்கு போன் செய்தார். அப்போது மீனாட்சி வேட்டையனை திருமணம் செய்து கொள்ள கூடாது சரவணன் தான் திருமணம் செய்ய வேண்டும். அப்படி கதையை மாற்றினால் நான் தற்கொலை செய்து […]
ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆதரவா?
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா இன்று காலை வந்தார். அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த ரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:ரஜினிகாந்த்துக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் அரசியலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. அரசியலுக்கு வந்தால் அவருக்கு நான் மனப்பூர்வமாக ஆதரவு தெரிவிப்பேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏழை, பணக்காரர்கள் […]
இன்றைய ராசிபலன் 13.12.2017
மேஷம்: தன் பலம் பல வீனத்தை உணருவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். புதியவர்கள் அறிமுக மாவார்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர் கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அர சால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் […]
சீரியல் நடிகைகளின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சினிமா நடிகைகளுக்கு இணையாக சில சீரியல்கள் நடிகைகளுக்கும் தனி மவுசு உள்ளது. சில சீரியல் நடிகைகளுக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளன. சின்னத்திரை நடிகைகளில் பலர் தற்போது பல்வேறு நடிகைகள் சீரியல்களில் கலக்கி வருகின்றனர். அவர்களது கதாபாத்திரங்களை தாண்டி பிரபலங்கள் உடைகளுக்கு பல ரசிகைகள் என்றே சொல்லலாம். சீரியல்களில் கலக்கி ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய இடம் பிடித்திருக்கும் நடிகைகளின் சம்பள விவரத்தை பார்ப்போம். அதுவும் ஒவ்வொரு எபிஸோடுக்கும் எவ்வளவு வாங்குகிறார்கள் என்ற […]
“தளபதி ஸ்டாலின் தலைமையில் கோட்டையில் தி.மு.க கொடி பறக்க வேண்டும்
சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தண்டையார்பேட்டை வ.உ.சி.நகர் சேனியம்மன் கோவில் தெருவில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு, சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு […]
மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து.!
புகையிரத சேவை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் நீடித்தால் புகையிரத பருவகால சீட்டுக்களை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்களுக்கு தனியார் பேருந்துகளில் இலவச போக்குவரத்து சேவையை வழங்க தீர்மானித்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணி பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் இடம்பெறுமானால் புகையிரத பருவகால சீட்டுக்களை வைத்திருக்கும் மாணவர்களுக்கு தனியார் பேருந்துகளில் இலவசமாகச் செல்ல சந்தர்ப்பம் அளிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் […]





