Other News

ஒரே ஊசியில் பலருக்கும் எய்ட்ஸ் நோயை பரப்பிய மருத்துவர்..

மலிவான கட்டணம் என அறிவித்து ஒரே ஊசியை தொடர்ந்து பலருக்கும் செலுத்தி ஹெச்.ஐ.வி கிருமி தொற்றை ஒரு மருத்துவர் ஏற்படுத்திய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் உன்னோ மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஒரு தொண்டு நிறுவனம் இலவச மருத்துவ முகாமை நடத்தியது. அப்போது, அந்த கிராமங்களில் வசிக்கும் 21 குழந்தைகள் உட்பட 40 பேருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் […]

காதல் கணவர் செய்ய முயன்ற கொடூரம்!

கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்த ஒருவர் அந்த பெண்ணை ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமையாக விற்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த பெண் ஒருவர் அவரது தந்தையின் பணி ஓய்வுக்கு பின்னர் கேரளா மாநிலத்துக்கு திரும்பினார். இவருக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு முதலே ரியாஸ் என்ற நபருடன் காதல் இருந்து வந்தது. பெற்றோரின் சம்மதத்துடன் ரியாஸை அவர் திருமணம் […]

அதிமுக பொதுச் செயலாளர்

ஜெயலலிதா பிறந்த நாளில் சிறை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு!

இறந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களை அவர்களது வழக்கிற்கு ஏற்ப விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த தேர்தலின் போது ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளில் ஒன்று சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கைதிகளை விடுதலை செய்வது. இதனை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நிறைவேற்ற உள்ளது. சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் […]

ரூ. 19,592.58 கோடி பெற்று ஜி.எஸ்.டி வசூலில் இரண்டாவது இடம் பிடித்த தமிழகம்

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி(GST) கட்டுவதில் தமிழகம் இராண்டாவது இடம் பிடித்திருப்பதாக தமிழக அரசின் வணிக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு ஒரே நாடு ஒரே வரி என்பதை அடிப்படையாக கொண்டு கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி திட்டத்தை அமல்படுத்தியது. ஜிஎஸ்டி திட்டத்தை பலர் எதிர்த்து வந்தாலும் இது ஒரு சட்டமாக அமல்படுத்தப்பட்டுவிட்டதால் அனைவரும் ஜிஎஸ்டி வரியை செலுத்தி வருகின்றனர். இந்த ஜி.எஸ்.டி, வரியில் 50 சதவீதம் […]

டிரம்ப் தற்பெருமைக்கு பதிலடி கொடுத்த வடகொரியா!

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் உலக நாடுகளை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் கடும் கோபத்திற்கு உள்ளது. இதனால் பல பொருளாதார தடைகள் வடகொரியா மீது விதிக்கப்பட்டது. இருப்பினும் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. இந்நிலையில் வடகொரியாவை ஒழுக்கம் கெட்ட நாடு என அமெரிக்கா விமர்சனம் செய்ததற்கு வடகொரியா பதிலளித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை […]

இன்றைய ராசிபலன் 06.02.2018

மேஷம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாய்வழியில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் […]

சிறிலங்கா சுதந்திர கட்சிக்குப் பேரிடி!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐ.தே.க பெரும் வெற்றியைப் பெறும் என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி 7 வரையான சபைகளிலேயே வெற்றி பெறும் என்றும் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக, பல்வேறு குழுக்களும், அரசியல் கட்சிகளும், கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. இந்த கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை, உள்ளூராட்சித் தேர்தலில் ஐ.தே.கவே வெற்றியீட்டும் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளன. பல […]

​முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, வலது கண்ணில் புரை இருந்ததால், அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், முதல்வர் பழனிசாமிக்கு இன்று கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  சுமார் 2 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின் போது கண்ணில் புரை அகற்றப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இன்னும் 4 நாட்கள் […]

அனுஷ்காவுக்கு குவியும் பாராட்டு!!

‘பாகமதி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை அனுஷ்காவை நடிகர்கள் உட்பட பலர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரைப் பாராட்டி உள்ளார். ”அவருடைய பாராட்டை என்னுடைய வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது ”என்று அனுஷ்கா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியான ‘பாகமதி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆந்திரா, தெலங்கானா, தமிழகம் மட்டுமின்றி இந்தத் திரைப்படம் உலகமெங்கும் திரையிடப்பட்டுள்ளது. […]

போதையில் இளம் பெண்களுடன் ஆட்டம் போட்ட பாரதிராஜா

தமிழ் சினிமாவுல தண்ணி அடிக்காத மனுஷன பாக்கவே முடியாது போல. எல்லா விஷயங்களுக்கும் வியாக்கனம் பேசும் இயக்குனர் பாரதிராஜா செம குத்தாட்டம் ஒன்னு போட்ருக்காரு. அதாங்க செமய்யா சரக்கு அடிச்சிட்டு பொண்ணுங்க கூட குத்தாட்டம் போட்ருக்காரு. அந்த வீடியோ எப்படியோ நெட்ல வர, நம்ம பசங்க சும்மா விடுவாங்களா. தாறுமாறா டிரண்ட் ஆகிடுச்சு.