இளம்பெண் ஒருவர் திருமணமாகி 7 வது நாளிலே, கணவனை விட்டு தனது முன்னாள் காதலனுடன் ஒடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த புஷ்பலதா என்பவருக்கும் ஆனந்த் ஜோதி என்பவருக்கும் கடந்த மாதம் 22ந் தேதி திருமணம் நடைபெற்றது. புஷ்பலதா திருமனத்திற்கு முன்பாகவே வேறு ஒரு நபரை காதலித்து வந்துள்ளார். பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்க ஆனந்த் ஜோதியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி, புஷ்பலதாவும் அவரது […]
Other News
ஆசிரியையை ஏமாற்றி உல்லாசம்
தனக்கு திருமணமானதை மறைத்து பள்ளி ஆசிரியருடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றியவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை சேர்ந்த ஷாலினி(30) என்பவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, கடந்த 2015ம் ஆண்டு பேஸ்புக் மூலம் ராணிப்பேட்டையை சேர்ந்த கோபிநாத்(32) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். வெளிநாட்டில் வேலை செய்வதாக தன்னை காட்டிக் கொண்ட கோபிநாத், ஷாலினியுடன் நட்பாக பழகியுள்ளார். அதன் பின் அது காதலாக மாறியுள்ளது. அதைத் […]
இதுவரை தீர்மானம் இல்லை ?
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி வேறு எந்த கட்சிகளுடனும் இணைந்து உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தை முன்னெடுப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானம் ஒன்றையும் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தை முன்னெடுப்பது தொடர்பில் இன்னும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பிரதமர் பதவியா ? ஜனாதிபதியிடமே கேட்கவேண்டும் – கோத்தா
நான் அமெரிக்க பிரஜையென்பதால் என்னால் எவ்வாறு பிரதமர் பதவியை வகிக்க முடியுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அமெரிக்காவில் இருந்து இன்று காலை நாட்டுக்கு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி மீண்டும் தேவையென்பதை நாட்டு மக்கள் தேர்தல் மூலம் நிரூபித்துள்ளனர். பொய்ப் […]
வடக்கு,கிழக்கில் பெரும்பான்மை சபைகள் தமிழ் கூட்டமைப்பு வசம்
வடக்கு, கிழக்கில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பெரும்பான்மையான சபைகளை வெற்றிகொண்டுள்ள போதிலும் யாழ்.மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி இரு சபைகளை கைப்பற்றியுள்ளதுடன் பெருமளவான சபைகளில் கணிசமான உறுப்பினர்களை தன்வசப்படுத்தியுள்ளது. வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பெரும்பான்மையான சபைகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. யாழ். மாநகர சபையில் 16 உறுப்பினர்களை பெற்று அதிகூடிய ஆசனங்களை கைப்பற்றிய கட்சியாக கூட்டமைப்பு […]
பாராளுமன்றைக் கலைக்குமாறு மஹிந்த அதிரடி அறிவிப்பு !
பாராளுமன்றைக் கலைத்து விட்டு பொதுத் தேர்தலொன்றுக்கு சென்று உறுதியான அரசாங்கத்தை அமைக்க முன்வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். பத்தரமுல்லை நெலும்மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் தலைமைக்காரியாலயத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் உறுதியான அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு அரசாங்கம் உடனடியாக பாராளுமன்றைக் கலைத்துவிட்டு பொதுத்தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டும். […]
கூட்டமைப்பு- காங்கிரஸ் இணைந்தாலே ஆட்சி!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் இணையாமல் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புக்கள் வெகு குறைவாகவே உள்ளன. வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் இதைத் தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச சபையிலும், திருகோண மலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச சபையிலும் மாத்திரமே தனித்து ஆட்சி அமைக்க முடியும். ஊர்காவற்றுறைப் பிரதேச சபையில் ஈ.பி.டி.பி. தனித்து ஆட்சி அமைக்க […]
மன்னார் இளைஞன் சுவிட்சர்லாந்தில் அடித்துக்கொலை-(படம்)
மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 7 ஆம் திகதி புதன் கிழமை மாலை சுவிட்சர்லாந்தில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. -இவ்வாறு உயிரிழந்தவர் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த றெபின்சன் றொட்ரிகோ துஸான் றொன்சின்ரன் (வயது-20) என தெரிய வருகின்றது. -குறித்த இளைஞன் சுவிட்சர்லாந்தின் (ECUBLENS VD) பகுதியில் கடந்த 3 வருடங்களாக வாழ்ந்து […]
இன்றைய ராசிபலன் 12.02.2018
மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. மனசாட்சி படி செயல்படும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் வந்துப் போகும். முக்கிய கோப்புகளை கையாளும் […]
தேர்தலில் வரலாறு காணாத வெற்றி ; இரு பிரதான தலைவர்களும் படுதோல்வி
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறாயிரத்திற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்றுள்ளது. இவ்வெற்றியானது வரலாறு காணாத வெற்றியாகும். இதன் மூலம் அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு இல்லாது போயுள்ளது. ஆகவே அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாட்டு மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடனும் தாமரை மொட்டு சின்னத்துடனும் இணைந்திருக்கின்றனர். ஆகவே அரசாங்கத்தின் பிரதான தலைவர்கள் இருவரும் […]





