பா.ஜனதா இளைஞர் அணி மாநில தலைவர் வினோஜ் செல்வம் தலைமை தாங்கினார். மாநில இளைஞ ரணி பொதுச் செயலாளர் வசந்தராஜன், மாவட்ட தலைவர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டு வைகோவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். உடனே அங்கு வந்த போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய வசந்தராஜன் உள்பட 40 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டம் […]
Other News
பிரதமர் மோடி வாக்குறுதியை மீறிவிட்டார் – சந்திரபாபுநாயுடு தாக்கு
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதனால் தெலுங்கு தேசம் கட்சி பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகியது. முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். வாக்குறுதியை காப்பாற்றாத பிரதமர் மோடிக்கு ஆந்திர மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பேசுகையில் மீண்டும் பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்தார். […]
சென்னையில் வைகோ – திமுகவினர் கருப்பு கொடி போராட்டம்
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கருப்பு கொடி ஏந்தியும், கருப்பு சட்டை அணிந்தும் போராட்டம் நடத்தினார்கள். சென்னையில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். சைதாப்பேட்டையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். அப்போது அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து […]
பிரதமர் மோடி வருகையை எதிர்த்து தீக்குளிப்பு
ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் தர்மலிங்கம் என்பவர் வீட்டு சுவரில் மோடி வருகையை கண்டிப்பதாக எழுதி வைத்து விட்டு தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது உயிரிழந்து விட்டார்.
சூப்பரான வெண்டைக்காய் கார குழம்பு
தேவையான பொருட்கள் வெண்டைக்காய் – 150 கிராம் பெரிய வெங்காயம் – ஒன்று தக்காளி – 2 மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி தனியா தூள் – ஒரு தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு புளி தண்ணீர் – கால் கப் தாளிக்க எண்ணெய் – 4 மேசைக்கரண்டி கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு கறிவேப்பிலை, கொத்தமல்லி செய்முறை […]
காமன்வெல்த் – இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை தேஜாஸ்வினி வெள்ளி பதக்கம் வென்றார்
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் காமன்வெல்த் கேம்ஸ் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் ப்ரோன் துப்பாக்கி சுடுதல் நடைபெற்றது. இந்தியா சார்பில் தேஜாஸ்வனி சவந்த், அன்சும் மவுட்கில் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தேஜாஸ்வினி சவந்த் 6 சுற்றுகள் முடிவில் 618.9 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். சிங்கப்பூர் வீராங்கனை மார்டினா லின்ட்செ வெலோசோ 621 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். ஸ்காட்லாந்து வீராங்கனை 618.1 […]
ரன்வீர் சிங், அனுஷ்கா சர்மா விருதுகளில் குழப்பம்
ரன்வீர் சிங்கும், அனுஷ்கா சர்மாவும் இந்தி திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக உள்ளனர். ரன்வீர் சிங் சமீபத்தில் வெளியான பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜியாக நடித்து இருந்தார். இவருக்கும் தீபிகா படுகோனேவுக்கும் காதல் என்றும், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என்றும் பேச்சு உள்ளது. அனுஷ்கா சர்மா கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை மணந்த பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் தாதா சாகிப் பால்கே விருதுக்கு தேர்வு […]
இந்த நிலை மாற வழி செய்யுங்கள் – காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு வகையான போராட்டங்கள் நடந்து வருகிறது. விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரலங்கள் பலரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராணுவ கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை சென்னை வந்துள்ளார். பல்வேறு தரப்பினரும் மேதடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி […]
காவிரி பிரச்சினை நீடிக்க அரசியல் கட்சிகள் விருப்பம் – நடிகர் பிரகாஷ்ராஜ்
நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில மாதங்களாக பா.ஜனதா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக பேசி வருகிறார். பா.ஜனதா நாட்டை ஆளக்கூடாது என்றும் அவர் கூறுகிறார். கர்நாடக சட்டசபை தேர்தலில் அவர் பா.ஜனதாவுக்கு எதிராக பிரசாரத்தையும் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடக மாநிலம் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காவிரி பிரச்சினையை தீர்க்காமல் அதை அரசியல் கட்சிகள் உயிரோடு வைத்திருக்கவே விரும்புகின்றன. நைல் […]
இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 27 பேர் காரைக்கால் வந்தனர்
புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்கள், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 19 மீனவர்கள், என மொத்தம் 27 மீனவர்கள் கடந்த ஜனவரி மாதம் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை எல்லையில் நுழைந்து மீன் பிடித்ததாக கூறி 27 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர். மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால், 27 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் சமீபத்தில் விடுதலைச் செய்தது. இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் […]





