திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஒரு பூஜையில் கலந்துக்கொண்டார் பாஜக தலைவர் எச்.ராஜா. இவர் எப்போதும் சர்ச்சை கிளப்பும் வகையில் பேசக்கூடியவர். தற்போதும் அதே மாதிரிதான் பேசியுள்ளார். எச்.ராஜா கூறியது பின்வருமாறு, காவிரி மேலாண்மை வாரியமோ அல்லது ஏதாவது ஒரு அமைப்போ ஏற்படுத்தும்போது, அந்த அமைப்பில் கருத்தொற்றுமையுடன் 4 மாநிலங்களும் பங்குபெற வேண்டும். ஆனால் கருத்தொற்றுமை ஏற்படவில்லை இதனால் உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகியுள்ளது. ஆனால், கடைசி நேரத்தில் ஸ்கீம் […]
Other News
சிரியாவின் கோர நிலை
சிரியாவில் அரசு தரப்பிற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் மத்தியில் போர் நடைபெற்று வருகிறது. சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டு வருகிறது. இருதரப்பினருக்கும் இடையேயான போர் காரணமாக மக்கள் காரணமின்றி தங்களது உயிரைவிட்டு வருகின்றனர். இதில் குழந்தைகள், பெண்கள் என அனைவரும் அடக்கம். சமீபத்தில் சிரியாவில் நடத்தப்பட்ட ராசாயன தாக்குதலால் பல குழந்தைகள் முச்சிதிணறி உயிர் இழந்தனர். இதனால், கோபம் அடைந்த டிரம்ப், சிரியா மற்றும் ரஷ்யா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் […]
ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் மன அழுத்தம் ஏற்படும் ஆய்வில் தகவல்
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சி பிரிவு மாணவர்கள் எரிக் பெப் தலைமையில் ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தினார்கள். 135 மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அளவுக்கு அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு தனிமை, கவலை, மனஅழுத்தம் ஆகிய உணர்வுகள் அதிகமாக இருந்தது. போதைப் பொருளுக்கு ஒருவர் எப்படி படிப்படியாக அடிமையாவாரோ அதே போன்று ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகி அதை அதிகம் பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டது. முதலில் மூளையில் உள்ள நரம்பு […]
கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மே 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு
ஏர்செல்-மேக்சிஸ் மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட ஆணையம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து அவரை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யலாம் என பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓ.பி.ஷைனி, கார்த்தி சிதம்பத்துக்கு முன்ஜாமீன் வழங்கினார். […]
அமெரிக்காவில் சீக்கிய கோவிலில் தகராறு – 4 பேர் காயம்
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள இண்டியன்போலிஸ் நகரில் சீக்கிய குருத்வாரா உள்ளது. அந்த குருத்வாராவில் தலைவரை தேர்வு செய்வதற்காக ஆலோசனை நேற்று நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர். அப்போது தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது தகராறாக மறியது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். தகவலறிந்து அங்கு போலீசார் விரைந்து சென்றனர். இந்தக் கலவரத்தில் சிக்கி காயம் அடைந்த 4 […]
இந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
இந்தோனேசியா நாடு பல்வேறு தீவுகளை கொண்டது. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. இதேபோல இன்று அதிகாலை மொலுகாஸ் பகுதியில் திடீரென பூகம்பம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 36 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த திடீர் நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வெளியே ஓடினர். இந்த நிலநடுக்கத்தால் […]
இன்றைய ராசிபலன் 16.04.2018
மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலை ச்சுமையும், அலைச்சலும் இருக்கும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச் செல்லும். மற்றவர்களுக்காக உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிகம் […]
5 வயதில் நானும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டேன்
என்னைப்போல் நிறைய பேர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார். ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். சிறுமி ஆசிபாவுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடிகைகள் உள்பட பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக நடிகை நிவேதா பெத்துராஜ் தானும் சிறு வயதில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- நானும் சிறுவயதில் பாலியல் […]
சிரியா மீதான தாக்குதல் தொடரும்
சிரியா ரசாயன தாக்குதல் நடத்தினால் மீண்டும் பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என்றும், இதற்காக அமெரிக்கா ஆயுதங்களை தயார் நிலையில் வைத்துள்ளது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்து உள்ளார். சிரியாவில் கிளர்ச்சி படைகளுக்கும் அரசு தரப்பிற்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெறுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யா மீதும் சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். […]





