Other News

டெல்லி ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் டாக்டராக நடித்த வசூல் ராஜா

டெல்லி ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியானது இந்தியாவிலேயே முன்னணி மருத்துவமனையாக உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரம் பயிற்சி டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக மருத்துவ மாணவர் என்ற போர்வையில் அங்கு சுற்றிவந்த 19 வயது இளைஞர் அத்னான் குர்ராம் போலீசிடம் சிக்கியுள்ளார். வெள்ளை கோட், ஸ்டெதஸ்கோப் சகிதம் தினமும் ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் ஆஜராகும் அத்னான் குர்ராம் அனைவரிடமும் தன்னை ஒரு பயிற்சி டாக்டர் என அறிமுகப்படுத்தியுள்ளார். பயிற்சி […]

நீதித்துறைக்கு எதிரான நவாஸ் ஷரிப் கருத்துகளை ஒளிபரப்ப லாகூர் ஐகோர்ட் தடை

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக எழுந்த ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கூட்டு புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், நவாஸ் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி, அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, 28-7-2017 […]

அமெரிக்க சிறையில் கலவரம்: 7 கைதிகள் படுகொலை

அமெரிக்காவில் தெற்கு கரோலினாவில் உள்ள சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 7 கைதிகள் கொள்ளப்பட்டனர் அமெரிக்காவில் தெற்கு கரோலினாவில் லீசி என்ற இடத்தில் சிறைச்சாலை உள்ளது. அங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று சிறையில் உள்ள கைதிகள் 2 பிரிவுகளாகி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் அங்கு கலவரம் ஏற்பட்டது. அப்போது சிறையில் குறைந்த அளவே காவலர்கள் […]

ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும்: அரபு நாடுகள் வலியுறுத்தல்

சிரியாவில் ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ராணுவத்துக்கு ஆதரவாக ரஷியாவும், ஈரானும் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன. மேலும் சிரியாவின் ஒரு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறி வைத்து அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டூமா நகரில் கடந்த வாரம் […]

தான்சானியாவில் வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலி

தான்சானியா நாட்டின் தலைநகரமான டார் ஏஸ் சலாம் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அந்த நகரில் உள்ள வீடுகளிலும், சாலைகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக மீட்புப்படை அதிகாரிகள் கூறுகையில், கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையில் நகரில் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 9 பேர் […]

அமெரிக்காவில் மாயமான இந்தியர் மற்றும் அவரது மகள் உடல்கள் மீட்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வேலன்சியா நகரில் வசித்து வந்தவர் இந்தியரான சந்தீப் (42). இவர் தனது மனைவி சவுமியா (38), மகன் சித்தாந்த் (12), மகள் சாச்சி (9) ஆகியோருடன் காரில் ஒரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகருக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். ஆனால் அவர்கள் வழியில் மாயமாகினர். கடந்த 6-ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். இதில் […]

ஊடகம், இலக்கியத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் புலிட்சர் விருதுகள் அறிவிப்பு

ஹங்கேரிய அமெரிக்கப் பத்திரிகையாளரும், செய்திப் பத்திரிகை வெளியீட்டாளருமாகிய ஜோசேப் புலிட்சர் பெயரில் 1912-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஊடகவியல், இணைய ஊடகம், இலக்கியம் மற்றும் இசையமைப்பு ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்காக விருதுகள் வழங்கப்படுகிறது. மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் புலிட்சர் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அமெரிக்க ஊடகங்களான நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், நியூ யார்கெர், பிரெஸ் டெமோக்ரட், அரிசோனா ரிபப்ளிக், யு.எஸ்.ஏ டுடே, தி சின்சின்னாட்டி என்கொயர், […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 17.04.2018

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சில நேரங்களில் நன்றி மறந்த சொந்த-பந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. […]

பேராசிரியை நிர்மலா கைது

தனியார் கல்லூரியின் கணித பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளிடம் தவறாக பேசிய விவகாரத்தில் போலீசாரால் கைது செய்யபட்டார். அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி என்பவர் மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து இன்று அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். […]

கதவில்லாத கோவிலில் சிறுமியை எப்படி?

காஷ்மீரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஆஷிபா குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம், ஜம்மு காஷ்மீ மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். அந்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து சிலர் அவரை சீரழித்துள்ளனர். 7 நாட்களில் ஒரு கோவிலில் அந்த சிறுமியை அடைத்து […]