Other News

பாஜக மதவாத அரசியல் செய்கிறதா ?

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஜிஎஸ்டி யை எதிர்த்த பலர் தற்பொழுது அதனால் தமிழகத்திற்கு அதிக வருமானம் கிடைப்பதால், ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக மதவாத கட்சி என கூறும் காங்கிரஸ், திமுக ஆட்சியில் இருந்தபோது ஏராளமான ஊழல்களை செய்துள்ளனர். அப்போது தான் ஈழத்தில் தமிழர்கள் குவியல் குவியலாய் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனை ஏன் மத்தியில் இருந்த […]

9,818 ஏக்கர் தனியார் காணிகள், பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன…

யாழ். மாவட்டத்தில் இதுவரை 2014 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையான காலப்பகுதியில் 9,818 ஏக்கர் தனியார் காணிகள் பாதுகாப்பு தரப்பிடம் இருந்து பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இதில் 2014 ஆம் ஆண்டு வரை 5,980 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 3,838 காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும் 4,000 ஏக்கர் காணிகள் இன்னும் […]

இலங்கை விவசாயிகள் வயலில் இறங்குவதில்லை

அபிவிருத்தி இலக்கை அடைய வேண்டுமாயின் இலங்கையை தொழிநுட்ப துறையில் மேலும் வலுப்படுத்த வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில், இலங்கையின் மனித வளத்தின் பலவீனம் காரணமாக வெளிநாட்டவர்களை சுற்றுலா வீசா அனுமதியில் இலங்கைக்கு அழைத்து தொழில்களில் ஈடுபடுத்துகின்றனர். எமது நாட்டில் கணனி செயலிகளை உருவாக்குபவர்கள், தேயிலை, இறப்பர், ஆடை உற்பத்தி ஆகிய […]

வடக்கில் இராணுவத்தை இலக்கு வைத்த விக்னேஷ்வரன்! அடுத்து என்ன??

வடக்கில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினருக்கு சிவில் நிர்வாகத்துடன் தொடர்புடைய தரவுகளை வழங்கத் தேவையில்லை என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரச அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளார். அதேவேளை சிறிலங்கா இராணுவத்தினர் சிவில் நிர்வாகத்துடன் தொடர்புடைய தரவுகள் உட்பட தகவல்களை கோரினால், அது குறித்து தனக்கு அறிவிக்குமாறும் வட மாகாண முதலமைச்சர் அரச அலுவலகர்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார். கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் புதிய கட்டடம் யூலை 12 ஆம் திகதியான இன்று […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 14.07.2018

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் மனஸ்தாபங்கள் வந்துச் செல்லும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம்: தைரி யமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள். […]

வடமாகாணத்தை முன்னேற்ற நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு இலங்கைஅரசு முட்டுக்கட்டை – சீ.வி.விக்னேஸ்வரன்

வடமாகாணத்தை முன்னேற்றுவதற்கு நாங்கள் எடுக்கின்ற முயற்சிகளுக்கு மத்தியஅரசு முட்டுக்கட்டைகளையும் தடைகளையும் ஏற்படுத்தி வருகின்ற போதும் நாம் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து முன்நோக்கிச் செல்வதற்கு முடிந்தவரை முயற்சிக்கின்றோம் என வடமாகாண முதலைமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய அலுவலகக் கட்டடத்திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கவே இலங்கை இந்திய ஒப்பந்தம், 13வது திருத்தச் சட்டத்திற்கு வழி வகுத்தது. அதனை முழு […]

நாளை மற்றும் நாளை மறுநாள் வடமாகாணம் முழுவதும் மின் வெட்டு

அனுராதபுரம், வவுனியா ஊடான பிரதான மின் விநியோக மார்க்கங்களில் அவசர திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் வடமாகாணம் முழுவதிலும் எதிர்வரும் (14.07.2018, 15.07.2018 சனி, ஞாயிறு) ஆகிய இரு தினங்களிலும் காலை 8 மணி தொடக்கம் மாலை 05 மணி வரை மின் விநியோகம் முற்றாக துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. வட மாகாணத்திலுள்ள முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாணம், ஆகிய மாவட்டங்களிலேயே மின் […]

லண்டன் வட்பேட்டில் 18 வயது தமிழ் இளைஞரை 16 வயது தமிழ் இளைஞர் குத்திக் கொன்றார்

பிரித்தானியாவின் வட்பேட்டில் நேற்றைய தினம்(11.07.2018) அன்று, உலக கிண்ண உதைபந்தாட்டம் நடைபெற்ற வேளை, 18 வயது தமிழ் இளைஞர் ஒருவர் வீட்டில் வைத்து குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் தான் குறித்த இளைஞர், பல்கலைக் கழகம் செல்ல ஆரம்பித்ததாகவும். உலக கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளில் பிரித்தானியா மற்றும் குரோவோஷியா ஆகிய நாடுகள் மோதிய விளையாட்டை பார்க்க அவர் நண்பி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கே இருந்த 16 வயது தமிழ் இளைஞரே […]

சசிகலாவை நிரந்தரமாக சிறையில் வைக்க தினகரன் சதி – நமது அம்மா செய்தி

சசிகலாவை நிரந்தரமாக சிறையில் வைக்க டிடிவி தினகரன் சதி செய்து வருகிறார் என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு உணவு பொருட்கள் வழங்கும் கிறிஸ்டி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில், கடந்த 5ம் தேதி தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான 76 இடங்களில் வருமான வரித்துறையின் சோதனையை தொடங்கினர். கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் […]

நிர்மலா தேவி விவகாரம் – குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிசிஐடி: சிக்கிய இரண்டு பேராசிரியர்கள்

பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீஸார் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர். அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி, துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் ஆளுனர் […]