பிரான்சில் கொரோனா தொற்றால் யாழ்.அரியாலை மூதாட்டி பலி!
பிரான்சில் கொரோனா நோய்த் தொற்றுக்கு இலக்காகி யாழ். அரியாலையைச் சேர்ந்தவரும் பொபினியில் வசித்து வந்தவருமான திருமதி இரத்தினசிங்கம் சற்குணவதி (வயது 72) அவர்கள் நேற்று முன்தினம் 29.03.2020 ஞாயிற்றுக்கிழமை இரவு பொபினி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இவர் கொரோனா அறிகுறி எதுவுமின்றி வேறு உடல் உபாதைக்காகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வீடு திரும்ப இருந்த வேளையில், திடீரென கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டுள்ளது. உடனடியாக செவ்ரோன் மருத்துவமனையில் இருந்து பொபினி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இன்றைய சூழ்நிலையில் கொரோனோ தொற்று நேரடியாக தொற்றுவதைவிட வெளியில் சென்று வருபவர்கள் மூலம் பரவுவதே அதிகமாக இருக்கின்றது.
70 வயதிற்கு மேற்பட்டவர்களை தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும் அவர்களை சந்திப்பவர்கள் வெளியில் சென்று வருபவர்கள் சந்திப்பதை தவிர்ப்பது முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டும். நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் எப்படி அவர்களுக்கு நோய் வந்தது என்பது தெரியாமல் இருக்கிறது.
வெளியே சென்று வருபவர்கள் சுகதேகியாக இருப்பதால் அவர்கள் நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகாமல் இருக்கின்றனர். இதில் ஒவ்வொருவரும் விழிப்பாய் இருப்பதன் மூலம் நம்மையும், மற்றவர்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் – என மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை
-
இலங்கையில் 129 பேர் கொரோனவால் பாதிப்பு – 2 பேர் பலி
-
A/L பரீட்சை ஒத்திவைக்க சாத்தியமில்லை – கல்வி அமைச்சு
-
நான்கு மாத குழந்தை உட்பட 5 பேருக்கு கொரோனா!
-
ஊரடங்கு உத்தரவினை மீறிய 7000 பேர் கைது
-
இலங்கை விமானபெண் பணியாளருக்கும் கொரோனா தொற்று!
-
நியூயார்க்கை தனிமைப்படுத்த அவசியமில்லை – டிரம்ப்!
-
இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 6,247 பேர் கைது!
-
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 115 ஆக அதிகரிப்பு
-
கொரோனாவால் ஸ்பெய்ன் இளவரசி மரணம்…?