உலக செய்திகள்

1000 பேரை கொன்று குவித்த இந்தோனேஷிய சுனாமி

இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் 5 அடி உயரத்தில் பயங்கர ஆக்ரோஷத்துடன் சுனாமி தாக்கியது. இதனால் பல கட்டிடங்களும், கார்களும் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது. கடற்கரை திருவிழாவில் பங்கேற்ற ஏராளமான மக்கள் சுனாமியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் சுனாமி மற்றும் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000த்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் அடிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை […]

இந்தோனேஷியாவில் அதிபயங்கர நிலநடுக்கம்! 82 பேர் பலி.. இலங்கைக்கு பாதிப்பா?

இந்தோனேஷியாவில் இன்று காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பீலி தெரிவித்துள்ளார். இந்தோனேஷியாவின் லோம்போக் தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 82 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டிருந்தது. கடலுக்கு அடியில் 15 கிலோ […]

உலகின்

உலகின் முதல் பிரதமராகும் கிரிக்கெட் வீரர்: இம்ரான்கான் முன்னிலை

பாகிஸ்தானில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று இரவே வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கப்பட்டது. இதில் ஆரம்பத்தில் இருந்தே பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகித்து வந்தது. கட்சி தொடங்கி 20 ஆண்டுகளுக்கு பின்னர் இம்ரான்கான் தற்போது தான் அதிபர் நாற்காலியை நெருங்கியுள்ளார். எனவே அவரது கட்சியினர் உற்சாகமாக வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இவர் அதிபர் பதவியை ஏற்றால், உலகில் […]

கனடாவில் பதற்றம்! பயங்கர துப்பாக்கி சூட்டுச் சம்பவம் – பலர் வைத்தியசாலையில் அனுமதி

கனடாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. டொரொன்டோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்திருக்கலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சிறுவர் உட்பட பத்துக்கும் மேற்பட்டடோர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். Danforth Avenueவுக்கு அருகில் Logan Avenue பகுதிக்கு அருகில், கனேடிய நேரப்படி இன்றிரவு 10 மணியளவில் இந்த […]

சிறையை விட்டு வெளியே செல்ல மாட்டேன் – நவாஸ் ஷெரீப் மகள் மரியம்

ஊழல் வழக்கில் சிக்கிய நவாஸ் ஷெரிப்பின் மகள் மரியம் அடியலா சிறையை விட்டு மாறிச்செல்ல மாட்டேன் என கூறியுள்ளார். இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் ஊழல் பணத்தில் சொகுசு வீடுகள் வாங்கியதாக நவாஸ் ஷரிப் மீதும், அவரது குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டதால் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரிப்பை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் நீக்கியது. அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், நவாஸ் ஷரிப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் […]

பறந்துகொண்டிருக்கையில் நடுவானில் தீப்பிடித்து எரிந்த விமானம்: 2 பேர் பலி

தென்னாபிரிக்க உள்நாட்டு விமானத்தில் இயந்திரக்கோளாறு காரணமாக அதன் இறக்கைகள் தீ பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த இரண்டு பயணிகள் இறந்துவிட்டதாக அறிக்கை வெளியாகியுள்ளது. கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சிவி-340 உள்நாட்டு விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. விமானம் பறந்துகொண்டிருக்கையில் , விமானத்தின் உட்பக்க பாகங்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. திடீர் என்று எல்லோரும் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே விமானத்தின் இறக்கை தீ பிடித்துள்ளது. […]

இவரை தெரிந்தால் உடன் அறிவியுங்கள்! அவசர கோரிக்கை

கட்டார் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவரை காணவில்லை எனவும் அவர் தொடர்பான தகவல்கள் தெரியுமெனின் உடன் அறியத்தரவும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது. கிண்ணியா பகுதியை சேர்ந்த ஏ.எம்.ரஷினா என்ற பெண் கடந்த 2003ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25ஆம் திகதி கட்டார் நாட்டிற்கு தொழில் வாய்ப்பு பெற்று சென்றுள்ளார். இந்நிலையில், அவர் சென்ற நாள் முதல் இன்றுவரை எந்தவித தொடர்புகளும் கிடைக்கப்பெறவில்லை என அவரின் […]

தோல்வியிலும் தமிழினத்திற்கு பாடம் புகட்டிய குரோசியா அணி!

வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிச் சென்ற வெற்றியை நேற்று வரை குரோசியா நாடு கொண்டாடியது. இன்று தோல்வியின் பின்னர் குரோசியாவின் புகழை உலகமே பேசுகின்றது. இறுதிப்போட்டி மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. குரோசியா வீரர்கள் ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல் வெற்றியை நோக்கி ஓடி கொண்டிருந்தார்கள். துரதிர்ஷ்டவசமாக வெற்றியை நழுவ விட்டாழும் உலகமே குரோசியா அணியை கொண்டாடுகின்றது. இதற்கு காரணம் அவர்களின் விடா முயற்சி. உலகப் பந்தில் ஒவ்வெரு […]

லண்டன் வட்பேட்டில் 18 வயது தமிழ் இளைஞரை 16 வயது தமிழ் இளைஞர் குத்திக் கொன்றார்

பிரித்தானியாவின் வட்பேட்டில் நேற்றைய தினம்(11.07.2018) அன்று, உலக கிண்ண உதைபந்தாட்டம் நடைபெற்ற வேளை, 18 வயது தமிழ் இளைஞர் ஒருவர் வீட்டில் வைத்து குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் தான் குறித்த இளைஞர், பல்கலைக் கழகம் செல்ல ஆரம்பித்ததாகவும். உலக கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளில் பிரித்தானியா மற்றும் குரோவோஷியா ஆகிய நாடுகள் மோதிய விளையாட்டை பார்க்க அவர் நண்பி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கே இருந்த 16 வயது தமிழ் இளைஞரே […]

மழை வெள்ளத்தில் மிதக்கும் ஜப்பான்; 86 லட்சம் பொதுமக்கள் வெளியேற்றம்

ஜப்பானில் 26 ஆண்டுகளுக்கு பிறகு பெய்து வரும் கன மழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. ஜப்பான் நாட்டில் 26 ஆண்டுகளுக்கு பிறகு செய்து வரும் கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஒகாயமா, ஹிரோஷிமா, யாமாகுச்சி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் […]