ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மீது நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தஷ்ட்-இ-ஆர்சி என்ற மாவட்டத்தை தாலிபான் பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்ற ரானுவம் தாக்குதல் நடத்த திட்டம் போட்டது. அதன்படி நேற்று தாலிபான் உறுப்பினர்கள் அனைவரும் மசூதியில் ஒன்றாக இருந்தனர், அதனால் ரானுவம் அவர்கள் மீது குண்டுவீசி வான்வழி தாக்குதல் நடத்தியது. அப்போது ரானுவத்தினர் குண்டுகளை குறி தவறி அங்கிருந்த பள்ளியின் மீது வீசினர். அப்போது […]
உலக செய்திகள்
இன்று பூமியை மோதும் விண்வெளி நிலையம் எங்கு விழும்?
சீனாவின் லட்சிய விண்வெளி திட்டத்தின் ஒரு பகுதிதான் தியன்கொங்-1 சீன விண்வெளி நிலையம் என்கிற விண்கலன். 2022 ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதரை அனுப்புகின்ற திட்டத்தின் மாதிரியாக தியன்கொங்-1 விண்கலன் இருந்தது. 2011 ஆம் ஆண்டு இது விண்வெளிக்கு அனுபப்பட்டது. 5 ஆண்டுகால பணிகளை நிறைவேற்றிய பின்னர், பூமியில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது கட்டுப்படுத்த படாமல் உள்ளதால், எங்கு, எப்போது விழும் என்று கணிக்க முடியாமல் இருந்து வந்த […]
செயற்கைக்கோள் தொடர்பை இழந்த இஸ்ரோ!
கடந்த மாதம் 29ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 29ஆம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகளால் ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. தொலைத்தொடர்பு மேம்பாடு உள்ளிட்ட பலவற்றிகும் உதவும் ஜிசாட்-6ஏ அதிநவீன செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இன்று பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஜிசாட்-6ஏ உடனான தொடர்பு இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. […]
இஸ்ரேல் போராட்டத்தில் துப்பாக்கி சூடு- 16 பேர் பலி
இஸ்ரேல் நாட்டில் எல்லையில் உள்ள காசா பகுதியில் போராட்டம் நடத்தி வந்த ஹமாஸ் அமைப்பினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் 16 பேர் பலியாகியுள்ளனர். காசா பகுதி இஸ்ரேல்- பாலஸ்தீன எல்லையில் உள்ளது. நேற்று, இங்கு பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை அடக்க இஸ்ரேல் படையினர் முயற்சித்து வந்தனர். ஆனால், அவர்களால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. […]
சாக்லெட் திருவிழாவில் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் சாக்லெட் சிலைகள்
ஐரோப்பாவில் நடைபெற்று வரும் சாக்லெட் திருவிழாவில் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் சாக்லெட் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் பெல்ஜியம் நகரில் சாக்லெட் திருவிழா தொடங்கியுள்ளது. இந்த விழாவில் 40க்கும் மேற்பட்ட சிற்ப கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட சாக்லெட்டால் செய்யப்பட்ட விலங்குகளில் சிலைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. சாக்லெட்டால் ஆன மிருகங்களின் உருவ சிலை பார்ப்பதற்கு தத்ரூபமாய் காணப்பட்டது. யானை, குரங்கு, முயல் உள்ளிட்ட சாக்லெட் சிலைகளை 30 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்து […]
வடகொரிய அதிபர் சீனாவிற்கு ரகசிய பயணம்?
வடகொரிய அதிபர் கிம் சீனாவிற்கு சென்றுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதிசெய்யப்பட்டால் இந்த சந்திப்பின் பின்னணியில் உள்ள ரகசியங்களும் வெளியே வரும். வடகொரியாவின் அதிபர் அந்நாட்டின் முக்கிய பிரதிநிதிகளுடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு வருகை தந்துள்ளதாகவும், இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இது குறித்து வடகொரிய தரப்பில், எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஒருவேளை கிம்மின் […]
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு – தேசிய அளவில் அஞ்சலி நிகழ்வு!
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ஜோந்தாம் லெப்டினன்ட் கேணல் அதிகாரி Arnaud Beltrame க்கு சர்வதேச அளவில் அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் என் இம்மனுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை, எலிசே மாளிகையில் வைத்து ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இதனை அறிவித்துள்ளார். ‘வெள்ளிக்கிழமை பயங்கரவாத தாக்குதலின் போது ‘ஹீரோ’ வாக செயற்பட்ட லெப்டினன்ட் கேணல் Arnaud Beltrame க்கு சர்வதேச அளவில் அரச மரியாதை செலுத்தப்படும்!’ என் மக்ரோன் குறிப்பிட்டார். ஆனால் […]
தெற்கு பிரான்சின் பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த பயங்கரவாதி! மூவர் பலி
தற்போது தெற்கு பிரான்சின் Trèbes (Aude) இல் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் பயங்கரவாதி ஒருவன் நுழைந்துள்ளான். பல்பொருள் அங்காடியைச் சுற்றி GIGN, RAiD மற்றும் CRS படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக குறித்த பயங்கரவாதி Trèbes பகுதியில் நடை பயிற்சியில் ஈடுபடுக்கொண்டிருந்த CRS படையினரை மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதாகவும், இதன்போது நான்கு அதிகாரிகள் காயமடைந்ததாகவும் அறியமுடிகிறது. அதைத் தொடர்ந்து காவல்துறையினர், பயங்கரவாதியை துரத்திச் செல்ல, பயங்கரவாதி தப்பி ஓடி 11.30 மணி […]
கடலுக்கடியில் உணவகம்; அசத்தும் நார்வே
நார்வே நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று கடலுக்கடியில் உணவகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. பொதுவாக அனைவருக்கும் பிடித்த ஒன்று கடற்கரை உணவங்கள். நார்வே நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று கடலுக்கடியில் உணவகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. கடலுக்கு அடியில் 5 மீட்டர் ஆழத்தில் இந்த உணவகம் அமைந்திருக்கும். அடுத்த ஆண்டு இந்த உணவகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 100 வரை அமர்ந்து உணவருந்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]
ரஷ்யாவில் வைர மழை பொழிந்த விமானம்!
ரஷ்யாவில் புறப்பட்ட சரக்கு விமானத்தில் இருந்து வைர மற்றும் தங்கம் மழை போல் பொழிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் யாகுதியா பகுதியில் இருந்து புறப்பட்ட சரக்கு விமானத்தில் இருந்து சில நொடிகளில் தங்க கட்டிகள், பிளாட்டினம் மற்றும் வைரம் குவியல் குவியலாக மழை போன்று பொழிந்துள்ளது. உடனே விமானம் அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த சரக்கு விமானம் சுமார் 265 மில்லியன் பவுண்ட்ஸ் மதிப்பிலான […]





