தமிழக முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டம், டவுன் கிராமத்தில் இன்று (3.9.2017) தனியாருக்குச் சொந்தமான அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில், இரண்டாவது தளத்தில் வசித்து வந்த கார்த்திக், அவருடைய மகன் சிறுவன் ஹரீஸ் மற்றும் பழனி, அவருடைய மனைவி ராஜாத்தி ஆகிய நான்கு நபர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன். இந்த […]
தமிழ்நாடு செய்திகள்
‘புளூவேல்’ விளையாட்டால் ரெயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை
இந்தியாவில் தற்போது ‘புளூவேல்‘ ஆன்லைன் விளையாட்டால் மாணவ–மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. தற்கொலை விளையாட்டு என்றழைக்கப்படும் இந்த விளையாட்டுக்கு மாணவ–மாணவிகள் அடிமையாகி இருப்பது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ‘புளூவேல்‘ விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தாலும், இந்த விளையாட்டு ஒழிந்தபாடில்லை. இந்தியாவில் இந்த விளையாட்டால் ஏராளமான மாணவ–மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த விபரீத விளையாட்டானது, 50 நாட்களை இலக்காக கொண்டு […]
அடுத்த கல்வியாண்டில் 800 பொறியியல் கல்லூரிகளுக்கு மூடு விழா?
கடந்த 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக 30%க்கும் குறைவான இடங்களே நிரம்பும் பொறியியல் கல்லூரிகளை அடைக்கப்பட உள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (AICTE) தலைவர் அனில் தத்தாத்ரயா கூறியுள்ளார். பெங்களூருவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற தத்தாத்ரயா நாடு முழுவதும், 2018-19 கல்வி ஆண்டில் குறைவான தரத்துடனும், முழுமையான அளவில் சீட்கள் நிரப்பப்படாத 800க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என கூறினார். தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் 10,363 […]
சமூகநீதியையும், மாநில உரிமையையும் பறிகொடுத்து விடுவோமோ!
அந்தோ அனிதா.. உன்னைப் போலவே சமூகநீதியையும், மாநில உரிமையையும் பறிகொடுத்து விடுவோமோ என்ற வேதனைத் தீ நெஞ்சில் எரிகிறது. அந்தத் தீயையே சுடராக்கி போராட்டக் களம் காண்போம். உன் உயிர்ப்பலிக்குக் காரணமான மத்திய, மாநில அரசுகளை ஜனநாயக முறையில் வீழ்த்தி, சமூகநீதியை என்றும் பாதுகாப்போம் எனத் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் அனைவரும் சூளுரை மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் […]
செப்டம்பர் 5-ல் அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம்
சென்னையில் நாளை மறுநாள் (செப். 5-ம் தேதி) அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெறுகிறது. முதல்வர் பழனிசாமி தலைமையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 12-ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடைபெறுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிமுக பொதுக்குழுவை கூட்ட சசிகலாவுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். […]
ஜெ. தனது வாரிசாக யாரையும் அடையாளம் காட்டவில்லை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது வாரிசாக யாரையும் சுட்டிக்காட்டவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர், “சாதாரண குடிமகனும் ஆட்சியில் அமர முடியும் என்பதற்கு வழிவகுத்தவர் ஜெயலலிதா. அதனால்தான், தன் வாரிசாக யாரையும் அவர் சுட்டிக்காட்டவில்லை. 27 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஒரே கட்சி அதிமுக தான். அதிமுக ஆட்சியை கவிழ்க்க துடிக்கிறார்கள், […]
மாணவர்களைப் பற்றி கவலைப்படாத அரசால் ஒரு உயிர் போயுள்ளது
சென்னை : தமிழக அரசின் மெத்தனம் காரணமாகவே விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : அரியலூர்மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கடின உழைப்பால் பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். அவர் மருத்துவம் படிக்க தகுதி பெற்றிருந்தும், நீட் தேர்வு அடிப்படையில் அவருக்கு வாய்ப்பு […]
கொன்னே போட்டுட்டீங்களேய்யா…. வயிறு எரிகிறது
சென்னை: மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து அனிதாவை கொன்றுவிட்டதாக நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கொந்தளித்துள்ளார். அனிதாவின் தற்கொலை இந்தியாவையே உலுக்கியிருக்கிறது. தொடர்ந்து அனிதாவின் தற்கொலைக்கு காரணமான மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. https://www.youtube.com/watch?v=MmELB4zk5-Q https://www.youtube.com/watch?v=MmELB4zk5-Q
ப்ளு வேல் விவகாரம்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரணை
புளூ வேல் கேம் விபரீதம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளது. புளூவேல் கேம் விளையாட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் ஒருவர் மதுரையில் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விளையாட்டில் தமிழக இளைஞர்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க அரசும் காவல்துறையினரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. […]
அசல் ஓட்டுநர் உரிம விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
வாகன ஓட்டிகளிடம் அசல் ஓட்டுநர் உரிமத்தை கேட்பதற்கு, வரும் செவ்வாய்க்கிழமை வரை சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இன்று முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்ற, தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் சுகுமார் தாக்கல் செய்த மனு, நீதிபதி துரைசாமி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டத்தின் […]





