நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்துக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நிதிஉதவி வழங்கி இருக்கிறார். நீட் தேர்வால் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காத வேதனையில் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதா பிளஸ்-2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். அனிதா தற்கொலையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்கு எதிராக கண்டன போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், […]
தமிழ்நாடு செய்திகள்
திருச்சியில் இன்று பா.ஜ.க பொதுக்கூட்டம்
சென்னை: நீட் க்கு எதிரான போராட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதித்துள்ளதை வரவேற்கதக்கது என பா.ஜ.க மாநில தலைவர் கூறினார். இது குறித்து பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை: சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது வரவேற்கதக்கது. இந்த கூட்டம் மக்களை திசை திருப்பும் கூட்டம். நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் எதிர்க்கட்சிகளின் எதிர்மறை அரசியலை எதிர்த்து நாளை (செப்..9) மாலை 4 மணிக்கு திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் […]
எடப்பாடிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் உட்பட மேலும் 3 எம்.எல்.ஏக்கள் கடிதம்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் உட்பட மேலும் 3 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் தனித்தனியே கடிதம் கொடுத்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருந்தனர். இந்த 19 பேரில் ஒருவரான கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார். இதனால் தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. இந்நிலையில் ஆளுநர் […]
பாஜகவின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது அனிதாவின் தற்கொலை…
சென்னை : அனிதாவின் தற்கொலை மூலம் தமிழக மக்களுக்கு பாஜக தன்னுடைய செயல்பாடுகளின் நிலையை விளக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான நடிகை குஷ்பு கடந்த ஜீலை 18ம் தேதி டுவிட்டரில் இருந்து தாம் விலகுவதாகக் கூறினார். அரசியல், சமூக பிரச்னைகளுக்கு டுவிட்டர் வலைதளம் மூலம் தனது கருத்துகளை உடனுக்குடன் பதிவிட்டு வந்தார் குஷ்பு. இந்நிலையில் […]
அதிமுக ஆட்சி கவிழும் என்ற ஸ்டாலின் கனவு பலிக்காது – முதல்வர் ஆவேசப் பேச்சு
ஈரோடு: அதிமுக ஆட்சி நிலைக்காது என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுவது ஒரு போதும் நடக்காது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். ஈரோட்டில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் உள்பட பெரும்பாலான அமைச்சர்கள் கலந்துகொண்டனர். மேலும், விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அந்த உரையில், அதிமுக அரசு […]
வீட்டுக்குள்ளும் போராட்டம் நடத்தக் கூடாது.. ஆசிரியை சபரிமாலாவுக்கு போலீஸ் எச்சரிக்கை
விழுப்புரம்: நீட்டுக்கு எதிராக அரசு ஆசிரியை வேலையை ராஜினாமா செய்த சபரிமாலா வீட்டில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுய்பட்டுக்கொண்டிருந்த போது, போலீசார் அவருடைய வீட்டுக்குள் சென்று மிரட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வைராபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை சபரிமாலா, நீட் தேர்வுக்கு எதிராகவும் அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் போராடுவதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அதையடுத்து, தனது ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்தார். மேலும் இன்று ஒருநாள் […]
பல்லாயிரக்கணக்கில் தொண்டர்கள்… போலீஸ் தடையை மீறி திமுக கூட்டம்…
சென்னை: மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டும், நீட் தேர்வு முறையை ரத்து செய்ய கோரியும், திமுக சார்பில் திருச்சியில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நீட் தொடர்பான போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இன்று தடை விதித்தது. பல ஆயிரம் தொண்டர்களும், மாணவர் அமைப்பினரும் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த பிறகு, கூட்டத்தை ரத்து செய்வது சரியா […]
திமுக கூட்டத்திற்கு தடை விதிங்க!
சென்னை: உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் திருச்சியில் திமுகவினர் நடத்தும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜ ராஜன் கூறியுள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. போராட்டம் நடத்துவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர். இதனையடுத்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் திருச்சியில் நடத்தும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று […]
நீட் தேர்வுக்கு எதிரான தமிழக போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை
டெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்து போனது. இதனால் அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் தற்கொலை தமிழகத்தை கொந்தளிக்க வைத்துள்ளது. கடந்த ஒருவாரமாக தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் உக்கிரமடைந்துள்ளது. இந்த போராட்டங்களுக்கு தடை கோரியும் அனிதாவின் தற்கொலை குறித்து விசாரிக்க வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் மணி என்பவர் […]
நானும் வருகிறேன் நீட் போராட்டத்துக்கு: சசிகலாவின் அண்ணி மகள்
சென்னை : சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தனது அறக்கட்டளையின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வருகிற 10ம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்துள்ளார். இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தனது பெயரில் கிருஷ்ணப்ரியா ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் நீட் தேர்வை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிமுக அம்மா அணியின் தணை பொதுச்செயலளார் டிடிவி. தினகரனும் நீட் தேர்வை எதிர்த்து […]





