தேமுதிக தலைவர் விஜய்காந்த சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படைங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் செல்வது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கடந்த 28 ஆம் தேதி சென்றதாக தகவல் […]
தமிழ்நாடு செய்திகள்
அம்ருதா ஜெ.வின் மகளா? – தீபா பரபரப்பு பேட்டி
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்பவர் கூறியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அம்ருதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார். மேலும், அதே பெங்களூரில் வசிக்கும் ஜெ.வின் அத்தை மகளான லலிதா என்பவரும் அம்ருதா கூற்றில் உண்மையிருக்கிறது எனக்கூறி பரபரப்பிற்கு வலு சேர்த்துள்ளார். ஜெயலலிதாவிற்கும், நடிகர் சோபன்பாபுவிற்கும் ஒரு […]
அம்ருதா ஜெ.வின் மகள்தான் – ஜெ.வின் தோழி கீதா பரபரப்பு பேட்டி
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள்தான் அம்ருதா என ஜெ.வின் நீண்ட நாள் தோழி கீதா பரபரப்பு பேட்டியளித்துள்ளார். தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அம்ருதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார். மேலும், அதே பெங்களூரில் வசிக்கும் ஜெ.வின் அத்தை மகளான லலிதா என்பவரும் அம்ருதா கூற்றில் உண்மையிருக்கிறது எனக்கூறி பரபரப்பிற்கு வலு சேர்த்துள்ளார். இந்நிலையில் இதுபற்றி சென்னையில் வசிக்கும் […]
விடிய விடிய கனமழை: 7 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முதல் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருவதால் தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். திருச்சி, தஞ்சை, திருவாரூர், நெல்லை, கன்னியாகுமர், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய ஏழு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவித்துள்ளனர். மேலும் கனமழை காரணமாக இன்று நடைபெறவிருத […]
அடுத்த 36 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கனமழை
அடுத்த 36 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில் கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். குறிப்பாக தென் தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். 45 கி.மீ., முதல் 55 கி.மீ., வரை காற்று வீசக்கூடும். கடல் அதிக சீற்றத்துடன் […]
அம்ருதாவின் தாய் ஜெ.வின் சகோதரிதானா?
பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்பவரின் தாய் சைலைஜா, ஜெயலலிதாவின் சகோதரி அல்ல என கர்நாடக அதிமுக செயலாளரும், தினகரனின் ஆதரவாளருமான புகழேந்தி தெரிவித்துள்ளார். தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அம்ருதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார். மேலும், அதே பெங்களூரில் வசிக்கும் ஜெ.வின் அத்தை மகளான லலிதா என்பவரும் அம்ருதா கூற்றில் உண்மையிருக்கிறது எனக்கூறி பரபரப்பிற்கு வலு சேர்த்துள்ளார். இந்நிலையில், தினகரனின் […]
செவிலியர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஜூலி
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் கடந்த மூன்று நாட்களாக செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று முதல் போராட்டம் நடத்தி வரும் செவிலியர்கள் உண்ணாவிரதமும் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் செவிலியர்கள் போராட்டம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில் பிக்பாஸ் புகழ் ஜூலி நேரில் வந்து போராட்டம் செய்து வரும் செவிலியர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளார். இந்த போராட்டம் குறித்து ஜூலி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: […]
ஆர்.கே. நகரின் அதிமுக வேட்பாளர்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் யார் போட்டியிடுவது என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தரப்பிற்கிடையே பலத்தை போட்டி நிலவுகிறது. இரு அணிகளும் இணைந்துவிட்டாலும், ஓபிஎஸ் மற்றும் அவரின் அணியில் இருந்தவர்களுக்கு எடப்பாடி தரப்பு உரிய முக்கியத்துவத்தை அளிப்பதில்லை எனக் கூறப்படுகிறது. இதை, மைத்ரேயன் எம்.பி மற்றும் ஓபிஎஸ் அணி ஐ.டி.பிரிவு ஆஸ்பயர் சுவாமிநாதன் ஆகியோர் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தினர். அதன் பின் நடைபெற்ற […]
கல்லூரி மாணவி மிரட்டி கற்பழிப்பு ; நண்பனுக்கும் விருந்தாக்கிய காதலன்
சென்னையில் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி கற்பழித்ததோடு, தனது நண்பருக்கும் அப்பெண்ணை விருந்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவிக்கு, 4 வருடத்திற்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த மோனி என்பவருடன் பேஸ்புக்கில் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. எனவே, பேஸ்புக்கில் அவர்கள் இருவரும் காதலை பரிமாறி வந்தனர். அந்நிலையில், அப்பெண்ணை மோனி மிரட்டத் தொடங்கியுள்ளார். பேஸ்புக்கில் தன்னுடன் […]
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 6 முனைப்போட்டி
தி.மு.க. சார்பில் மருதுகணேசும், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயமும் மீண்டும் போட்டியிடுவார்கள் என்று அவர்களது கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதேபோல், அ.தி.மு.க. வேட்பாளர் யார் என்பது இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும், மதுசூதனனுக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. அதேபோல், அப்போது அ.தி.மு.க. (அம்மா) சார்பில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன், இப்போது சுயேச்சை வேட்பாளராக களம் இறங்க இருக்கிறார். டிசம்பர் 1-ந் தேதி மதியம் 1 மணிக்கு […]





