தமிழ்நாடு செய்திகள்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள்

ஜெயலலிதா போயஸ் கார்டனில் தாக்கப்பட்டிருக்கலாம் ?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் சசிகலா குடும்பத்தின் மீது சந்தேகம் இருப்பதாகவும், ஜெயலலிதா போயஸ் கார்டனில் தாக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவரது அண்ணன் மகள் தீபா விசாரணை ஆணையத்திடம் கூறியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை. சசிகலா குடும்பத்தினர் மட்டுமே அவரோடு இருந்தனர். அவர் சிகிச்சை பெற்ற எந்த […]

ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆதரவா?

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா இன்று காலை வந்தார். அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த ரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:ரஜினிகாந்த்துக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் அரசியலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. அரசியலுக்கு வந்தால் அவருக்கு நான் மனப்பூர்வமாக ஆதரவு தெரிவிப்பேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏழை, பணக்காரர்கள் […]

“தளபதி ஸ்டாலின் தலைமையில் கோட்டையில் தி.மு.க கொடி பறக்க வேண்டும்

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தண்டையார்பேட்டை வ.உ.சி.நகர் சேனியம்மன் கோவில் தெருவில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு, சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு […]

ஆட்சி அதிகாரம் உங்க கையில இருந்தா நீங்க யார வேணும்னாலும் அடிக்கலாமா?

ஆர்கே நகரில் அதிமுக பிரமுகர் ஒருவர் பண பட்டுவாடாவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதை தடுத்த தேர்தல் அதிகாரியை அந்த அதிமுக பிரமுகர் தாக்கியுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஆர்கே நகருக்கான இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஒவ்வொரு கட்சியை சார்ந்த நபர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஆர்கே நகரில் […]

கன்னியாகுமரியில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடுகிறார் முதல் அமைச்சர் பழனிச்சாமி

குமரி மாவட்டத்தில் ஒகி புயல் தாக்கியதில் ஏராளமான மீனவர்கள் மாயமானார்கள். ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. மாயமான மீனவர்களை மீட்க கோரி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. சின்னத்துறை பகுதியில் 4-வது நாளாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்ட மக்களை முதல் அமைச்சர் சந்திக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், இன்று முதல் அமைச்சர் பழனிச்சாமி […]

ஓகி புயல், மீனவர் பிரச்சனை

தமிழகத்தின் குமரி மாவட்டத்தை மிகவும் கடுமையாக தாக்கியது சமீபத்தில் வந்த ஓகி புயல். இந்த புயலின் தாக்கத்தால் பல உயிர்களை பலிகொடுத்து அதிலிருந்து இன்னமும் மீளாமல் உள்ளனர் அந்த பகுதி மக்கள். ஆனால் இந்த பிரச்சனையில் தற்போது பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மத சாயம் பூசியுள்ளார். பல ஆயிரம் பேர் இந்த புயலால் காணாமல் போய் உள்ளனர், பல நூறு பேர் இறந்துள்ளனர். பலரும் தங்கள் உடமைகளை இழந்து […]

பேனர், கட்-அவுட் வைத்து மக்களை துன்புறுத்தக்கூடாது ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர், போஸ்டர், கட்-அவுட் வைக்க தடைவிதித்து கடந்த மாதம் ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘அரசியல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் செய்யப்படும் விளம்பரங்களில் உயிர் உள்ளவர்களின் புகைப்படங்கள் இடம்பெறுகின்றன. அப்படி செய்தால்தான், […]

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 23 பேரை, 5 படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. நள்ளிரவில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்து அழைத்துச்சென்றுள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வேட்புமனு நிராகரிப்பால் விஷால் எடுத்த அதிரடி முடிவு..! ரஜினி, கமலை எல்லாம் மிஞ்சி விட்டார்…!!

ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள சென்னை ஆர்கே நகர் தேர்தல் வரும் வரும் 21ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட விஷால் மனுதாக்கல் செய்தார். ஆனால் நடிகர் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து சுயேட்சை வேட்பாளர் ஒருவரை ஆதரிக்கவிருக்கிறேன் என்று அறிவித்தார். அதனையடுத்து யாரையும் ஆதரிக்க மாட்டேன் என அறிக்கை வெளியிட்டார். எனவே இவர் விரைவில் புதிய கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் விஷால் சமீபத்தில் அவர் […]

ஆர்.கே.நகரில் ராப் ஸ்டைலில் தெறிக்கவிடும் அதிமுக தீம் சாங்

ஆர்.கே.நகரில் பிரசாத்துக்கு பயன்படுத்துவதற்காக அதிமுக சார்பில் தீம் சாங் ஒன்று உருவாக்கப்பட்டு ஒலிக்கப்பட்டு வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, டிடிவி தினகரன் ஆகிய மூவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வரும் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலின் மூலம் மக்கள் ஆதரவு யாருக்கும் என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் திமுக, அதிமுக ஆகிய இரு அணிகளும் போட்டி போட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக பிரசாரங்களில் பாடல்கள் ஒலிக்கப்படுவது […]