தமிழ்நாடு செய்திகள்

தினகரனுக்கு ஓட்டுப் போடுங்கள் – சுவாமி

ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் டிடிவி தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ள கருத்து பாஜக வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுப்பிரமணிய சுவாமி என்ன கூறினாலும் அது சர்ச்சைதான். அல்லது, சர்ச்சையான கருத்துகளை மட்டுமே அவர் கூறுகிறார் எனவும் கூறலாம். பாஜகவில் இருந்து கொண்டே அக்கட்சிக்கு எதிராக கருத்து கூறுவதை அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார். இதனால் வேறு வழியின்றி ‘அது அவரின் கருத்து’ எனக் […]

​ஆர்.கே.நகரில் இன்று மாலையுடன் நிறைவடையும் பிரச்சாரம்

ஆர்.கே.நகரில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடையும் நிலையில், அத்தொகுதியைச் சாராதவர்கள் அனைவரும் மாலை 5 மணிக்கு மேல் தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தள்ளிப்போன சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுதினம்(டிசம்பர் 21-ம் தேதி) நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஆளுங்கட்சியான எடப்பாடி அணியினரும், ஆளுங்கட்சியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என […]

செய்தியாளர்களிடம் எகிறிய எச்.ராஜா

தமிழகத்தில் பாஜக எப்போது ஆட்சி அமைக்கும் என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு எச்.ராஜா கோபமாக நக்கலா என கேட்டுள்ளார். குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்றது. குஜராத் மாநிலத்தில் 6வது முறையாக தொடர்ந்து வெற்றிப்பெற்றுள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் 10 ஆண்டுகளுக்கு தற்போது மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இதனால் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பாஜகவின் வெற்றி குறித்து தேசிய […]

ஆர்.கே.நகரில் யாருக்கு வெற்றி?

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்காக இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்து மத்திய அதிகாரிகள் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகருக்கான தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என அதிமுக அணியை சேர்ந்த வேட்பாளர் மதுசூதனன், குக்கர் சின்னத்தில் போட்டியிடும் டிடிவி தினகரன் மற்றும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் ஆகியோரிடையே பலத்த […]

வடநாட்டு வைகோ

குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளதையடுத்து நாடு முழுவதும் பாஜகவின் வெற்றிக்களிப்பில் உள்ளனர். அதிலும் தமிழக பாஜகவினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காலை முதலே படு சுறுசுறுப்பாக சமூக வலைதளங்களில் இயங்கி வருகிறார். குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்தார் பட்டேல் சமூகத்தை சேர்ந்த ஹர்திக் பட்டேல். இவரது அதிரடியான விமர்சனங்கள், பிரச்சாரங்களை பார்த்து பாஜகவே நடுங்கியது. காங்கிரஸ் […]

அம்ருதா ஜெ.வின் மகளா?

பெங்களூரை சேர்ந்த அம்ருதா ஜெயலலிதாவின் மகளா என கண்டுபிடிக்க நடிகர் சோமன்பாபுவின் டி.என்.ஏ இருந்தால் போதும் என ஜெ.விற்கு சிகிச்சையளித்த அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற பெண், தான் மறைந்த முதல்வர் ஜெ.வி மகள் என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கர்நாடகா உயர்நீதிமன்றத்தை நாடுமாறு அவரை வலியுறுத்திய நீதிமன்றம், அவரின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், […]

என் கணவரை கொலை செய்தது யார்?

ராஜஸ்தானில் சென்னையை சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியனை அவரது சக ஆய்வாளர் முனிசேகர் என்பவர் தவறுதலாக சுட்டதாக ராஜஸ்தான் காவல்துறையினர் கூறப்பட்டு வரும் நிலையில் முனிசேகர் மீது இன்று காலை வழக்குப்பதிவும் செய்துள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து பிரபல தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா, ‘எனது கணவர் உயிரிழந்த சம்பவத்தில், உரிய விசாரணை நடத்தி எனக்கு தயவு செய்து தெளிவுபடுத்துங்கள் என்றும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் […]

லஞ்சம் பெற்ற சார் பதிவாளருக்கு 8 ஆண்டுகள் சிறை

ரூ.500 லஞ்சம் பெற்ற சார் பதிவாளருக்கு ஈரோடு நீதிமன்றம் 8 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டியாளையத்தில் மேக்லீன் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதன் ஆலோசகரான புஷ்பராஜ் ஆண்டுதோறும் இல்லத்தின் வரவு-செலவு கணக்கை சார் பதிவாளரிடம் ஒப்புதல் பெற்று, மாவட்ட பதிவாளரிடம் சமர்பித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சார் பதிவாளராக இருந்த தங்கவேல் என்பவரிடம் புஷ்பராஜ் வரவு […]

13 லட்சம் ரூபாய் செலவில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடமாலை

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு 13 லட்சம் ரூபாய் செலவில் வடமாலை அணிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் கோயிலில் இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர். அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, கோயில் நிர்வாகம் சார்பில் 18 அடி […]

பெரியபாண்டியன் கொலை வழக்கில் சக ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பெரியபாண்டியன் வழக்கை தீவிரமாக ராஜஸ்தான் போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் பாலி மாவட்ட காவல்துறை அதிகாரி பார்கவி, ‘பெரியபாண்டியனின் உடலை துளைத்தது சக ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியில் இருந்து வெளிவந்த குண்டு’ என்று கூறி அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி, ‘பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சென்னை கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்த்ரன் போலீசார் […]