அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துவிட்ட நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து அவர் வாழ்த்து பெறுகிறார். தான் அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து விட்டார். மேலும், தனிக்கட்சி தொடங்கி, அடுத்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். தற்போது அவரது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 5 நாட்கள் தனது ரசிகர்களை சந்தித்து உரையாடிய […]
தமிழ்நாடு செய்திகள்
ஒரே நாளில் 50 லட்சம் உறுப்பினர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 31ஆம் தேதி அரசியல் அறிவிப்பை அறிவித்துவிட்டு, பின்னர் அடுத்த நாளே இணையதளம் மற்றும் செயலி மூலம் மன்றத்தின் உறுப்பினர் ஆக்கும் வசதியை கொண்டு வந்தார். இந்த மன்றம் தான் விரைவில் கட்சியாக மாற போகிறது. இந்த நிலையில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட மன்ற உறுப்பினர்களின் சேர்க்கையில் ஒரே நாளில் ஐம்பது லட்சம் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். இன்னும் பலர் பதிவு செய்து கொண்டே வருவதால் […]
ரஜினியின் முடிவு தவறாகத்தான் முடியும்
சென்னை ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் புத்துணர்ச்சியுடன் களமிறங்குவார். அதிமுகவை தோற்கடித்து, திமுகவை டெபாசிட் இழக்க செய்த தினகரனுக்கு இந்த இரு கட்சிகளையும் தமிழக அளவில் அனைத்து தொகுதிகளிலும் எதிர்ப்பதில் பெரிய பிரச்சனை இருக்காது. இந்த நிலையில் திடீரென ரஜினி களத்தில் இறங்கியுள்ளதால் அவருக்கு இன்னொரு போட்டியாளர் உருவாகியுள்ளார். தற்போது அவரையும் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்போதிருந்தே ரஜினியை […]
ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சபாஷ்
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ரஜினியின் இந்த அறிவிப்புக்கு அவர் சபாஷ் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் காந்திருந்து, காத்திருந்து 20 வருடங்களுக்கு பின்னர் அது நடந்திருக்கிறது. பல்வேறு கால கட்டங்களில் அரசியல் குறித்த கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் சொல்லிவிட்டு நழுவிய ரஜினிகாந்த் நேற்று தனது அரசியல் அறிவிப்பை […]
ஜெயலலிதாவின் மரணம் குறித்து ராகுல்காந்தியிடம் விசாரணை
உடல்நிலை சரியில்லாமல் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது, அவரை சந்தித்த அரசியல் தலைவர்களை விசாரணைக்கு உட்படுத்த விசாரணை கமிஷன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்த செப்டம்பர் 25ம் தேதி தமிழக அரசால் அமைக்கப்பட்ட நிலையில் இந்த ஆணையம் தற்போது விறுவிறுப்பாக […]
முரசொலி இணையதளம் முடக்கம்
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் இணையதளம் இன்று திடீரென முடக்கப்பட்டுள்ளது. இதனால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முரசொலி பத்திரிக்கை திமுக தலைவர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. திமுகவின் முரசொலி பத்திரிக்கை கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற முரசொலி நாளிதழின் பவள விழாவில் கருணாநிதியின் புத்தகங்கள், புகைப்படங்களின் தொகுப்பு, மெழுகு சிலை என கண்காட்சிக்கு வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் முரசொலி நாளிதழின் இணையதளம் இன்று […]
10 ஆண்டுக்கு மேல் சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனை கைதிகள் விடுதலை
மறைந்த முதல்-அமைச்சரின் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே அங்குவிலாஸ் மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவில் ரூ.681 கோடி மதிப்பில் 115 கட்டிடங்களை திறந்து வைத்தும், ரூ.187 கோடி மதிப்பில் 105 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் உள்பட அனைவரும் எப்படி வாழ வேண்டும் என்று அவர்களை நெறிப்படுத்தும் வகையில் எம்.ஜி. […]
பிரச்சனைகள் வந்தபோது எங்க போனார்?
ரஜினி அரசியலுக்கு வந்தால் கடுமையாக எதிர்ப்போம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரசிகர்களிடம் மத்தியில் தனது அரசியல் நிலைபாடு குறித்து அறிவித்தார். அதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:- தமிழ் நாட்டில் மட்டும்தான் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் […]
ரஜினியுடன் கூட்டணி வைத்தால் அவ்வளவுதான்
எனது எதிர்ப்பையும் மீறி ரஜினியுடன் கூட்டணி வைத்தால் வேறு மாநிலத்துக்கு சென்றுவிடுவேன் என சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று இன்று காலை அறிவித்தார். தனி கட்சி தொடங்க உள்ளதாகவும், 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி […]
ரஜினி அரசியலுக்கு வருவதால் அதிமுகவிற்கு பாதிப்பு இல்லை
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அரசியலுக்கு வருவதை இன்று உறுதி செய்த நடிகர் ரஜினிகாந்த், வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக கூறியுள்ளார். பல்வேறு அரசியல் நிகழ்வுகளால் ஓராண்டாக தமிழ்நாட்டுக்கும், தமிழ்மக்களும் பெரும் அவமானம் நிகழ்ந்திருக்கிறது. மக்கள் பெரிதும் துயரப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலில் இறங்குகிறேன் என்று […]





