சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த ஒருசில நிமிடங்களில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகனும் இலங்கை பாராளுமன்ற எம்பியுமான நமல்ராஜபக்சே தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார் இந்த நிலையில் இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு எப்போதும் என்னுடைய ஆதரவு உண்டு என்று […]
தமிழ்நாடு செய்திகள்
ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் எவ்வளவு?
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் அறிவிப்பது வழக்கம். அரசு ஊழியர்களின் பதவியை பொருத்து இந்த போனஸ் தொகை வேறுபடும் இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு 3,000 ரூபாய் போனஸ் என்றும், தற்காலிக ஊழியர்களுக்கு 1,000 ரூபாய் போனஸ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி […]
தமிழக அரசு காலண்டரில் மோடி
தமிழக அரசு தயாரித்து வெளியிட்டுள்ள 2018-ஆம் ஆண்டுக்கான மாதாந்திர காலண்டரில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றுள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் மாதாந்திர காலண்டர் வெளியிடப்படுவது வழக்கம். இந்த காலண்டரில் முதல்வரின் படம் இடபெறும். மேலும் தமிழகத்தின் முக்கியமான சில இடங்களும் இடம்பெறும். தமிழக அரசு சார்பாக அச்சிடப்பட்ட இந்த காலண்டர்கள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பப்படும். […]
நான் செய்த வேலையால் கண்டிப்பாக ரஜினி என் மீது கோபத்தில் இருப்பார்- பிரபல நடிகர்
ரஜினியுடன் ஒரு புகைப்படம் என்றால் யாருக்கு தான் ஆசை இருக்காது. ரசிகர்களை தாண்டி பிரபலங்கள் நிறைய பேர் அண்மையில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் ரஜினியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படங்களும் நிறைய சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. அப்படி ஆதவ் கண்ணதாசன், ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து அந்த நிகழ்வு நடக்க காரணமாக இருந்த சாந்தனுக்கு நன்றி என்று தெரிவித்திருந்தார். அதைப் பார்த்த சாந்தனு பதிலுக்கு, […]
சட்டசபைக்கு பூட்டு போட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!
புதுச்சேரியில் இலவசம் வழங்கப்படாததை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது இலவச பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். நிதி நெருக்கடி காரணமாக ஆளுநர் கிரண் பேடி தீபாவளிக்கு இலவச சர்க்கரை வழங்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை. தற்போது பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச பொருட்களும் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் இலவச பொருட்கள் […]
அரசியலும், ஆன்மீகமும் வேறு வேறு துருவங்கள்
அரசியல் மற்றும் ஆன்மீகம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் முன்பு தெரிவித்திருந்த கருத்து தற்போது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது. 1995ம் ஆண்டு ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட போது, தூர்தர்ஷனில் அவர் தொடர்ந்து சில நாட்கள் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, ஆன்மீகம் – அரசியல் ஒப்பிடுக? என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரஜினி “அந்த இரண்டையும் ஒப்பிடக்கூடாது. ஒப்பிடவும் முடியாது. இரண்டும் பாம்பும், கீரியும் போல் வெவ்வேறு […]
பட்டப்பகலில் மகள் கண் முன்னே தந்தை வெட்டிக் கொலை
தன்னுடைய மகளை கல்லூரிக்கு அழைத்து சென்ற நபரை பட்டப்பகலில் மர்ம கும்பல் வெட்டி சாய்த்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் கந்தன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரின் மகள் கீர்த்தனா சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலை 7 மணியளவில் கீர்த்தனாவை கல்லூரியில் விடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் […]
ஆட்சியை கலைக்க குதிரை பேரம்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க சில எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க தினகரன் தரப்பு குதிரை பேரம் நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழக சட்டபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன் இந்த கூட்டத்தில் முதல் முறையாக கலந்து கொண்டுள்ளார். ஆளுநர் தன்னுடைய உரையை தொடங்கியதுமே, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் […]
சசிகலா அடித்த அடியில் ஜெ. கன்னத்தில் ஏற்பட்ட அந்த புள்ளிகள்
சசிலா ஜெயலலிதாவை ஆணிக்கட்டையால் அடித்ததே அவர் கன்னத்தில் ஏற்பட்ட புள்ளிகளுக்கு காரணம் என அதிமுக முதன்மை செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பீதியை கிளப்பியுள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆறுமுகசாமி தலைமையில் நடந்து வருகிறது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பொன்னையன் கூறியுள்ளது புதிய கண்டுபிடிப்பாக உள்ளது. அவர் கூறியதாவது:- ஜெ.கன்னத்தில் உள்ள புள்ளிகள் என்பார்மிங்கிற்கு அப்பாற்பட்ட புள்ளிகள் என்று அரசு மருத்துவர் சுதா சேஷையன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். […]
தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
தமிழக சட்டசபையின், இந்த ஆண்டுக் கான முதல் கூட்டத் தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது. அவை மரபுப்படி, இன்றைய கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். இதற்காக, காலை 9.55 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்திற்கு வரும் அவரை, சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் பூபதி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள். சட்டசபைக்குள் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. சபாநாயகர் […]





