தமிழ்நாடு செய்திகள்

நாளை வெளியாக உள்ள முக்கிய அறிவிப்பு

ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்குவது குறித்து நாளை அறிவிக்க உள்ளதாகவும், நாளை முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு கிடைத்ததால் அதிமுக கட்சியையும் அவர்கள் கைப்பற்றிவிட்டனர். இதனால் பல எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அவர்கள் பக்கம் உள்ளனர். தினகரன், சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கி, ஒதுக்கி வைத்துள்ளனர். ஆனாலும் தினகரன் தனன்னுடைய […]

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஆனால் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தி பெற்றவை. நேற்று அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து, மாட்டுப் பொங்கலான இன்று மதுரை பாலமேட்டில் கோலாகலமாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் […]

அதிமுகவை எவராலும் அழிக்க முடியாது

ரஜினியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் ஆட்சி மாற்றம் வரும் என்று குருமூர்த்தி பேசியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். தமிழக அரசியலில் பா.ஜ.க.வும் ரஜினியும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என துக்ளக் இதழின் பத்திரிக்கை ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி துக்ளக் ஆண்டு விழாவில் பேசியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் ரஜினியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் ஆட்சி மாற்றம் […]

பிரபல எழுத்தாளர் ஞானி காலமானார்

பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞானி சங்கரன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் (64) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். இவர் செங்கல்பட்டில் பிறந்தவர். இவரது இயற்பெயர் வே. சங்கரன். ஆங்கில இதழாளர் வேம்புசாமியின் மகன் ஆவார். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ஞானிக்கு இன்று அதிகாலை திடீரென்று முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் ஞானியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே […]

பொங்கல் திருநாளை முன்னிட்டு தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி

பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று திமுக தலைவர் கருணாநிதி தனது கட்சி தொண்டர்களை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளில் கட்சி தொண்டர்களை சந்திப்பது கருணாநிதியின் வழக்கம். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் தொண்டர்களை சந்திக்கவில்லை. இந்நிலையில் டாக்டர்களின் ஆலோசனைக்கு பிறகு கருணாநிதி இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதியை சந்திக்க வரும் தொண்டர்கள் அவருக்கு பூங்கொத்து கொடுப்பதை […]

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி

வரும் 16-ந் தேதி நடைபெறவுள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக முதல்வரும் துணை முதல்வரும் தொடங்கிவைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் இன்று மகிழ்ச்சியாகக் கொண்டாடடப்படுகிறது. வீடுகள் தோறும் புத்தாடை உடுத்தி பொங்கலிட்டு அண்டை வீட்டாருடன் பகிர்ந்துகொண்டு கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஆனால் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய […]

பெரியபாண்டியன் கொலை வழக்கில் கொள்ளையன் நாதுராம் கைது

தமிழகத்தை அதிர வைத்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நாதுராம் கைது செய்யப்பட்டார். சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க சென்ற பெரியபாண்டியன் என்ற ஆய்வாளர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் சுட்டு கொல்லப்பட்டார். பெரியபாண்டியன் முதலில் கொள்ளையர்களால் சுடப்பட்டதாக செய்திகள் பரவிய நிலையில், முனிசேகர் என்ற காவலர் சுட்ட போது தவறி பெரியபாண்டியன் மீது பட்டதால் அவர் மரணமடைந்தது தெரிய […]

பாஜக ஒரு கீழ்த்தரமான கட்சி

கவிஞர் வைரமுத்து குறித்து ஹெச்.ராஜாவின் கீழ்த்தரமான பேச்சுக்கு தற்போது வரை அந்த கட்சி எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை என்று திருமுருகன் காந்தி கூறியுள்ளார். மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி திருப்பூரில் இஸ்லாமியர்களின் சார்பில் மத்திய பாஜக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது, இஸ்லாமிய மக்களின் அடிப்படை உரிமைகள் மீதே கை வைக்கும் போக்கை பாஜக அரசு கடை பிடித்து வருவதாக கூறினார். இத்தனை […]

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் சசிகலா

புதிய கட்சி?

முடக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதில் இருந்து அதிமுக அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனையடுத்து தினகரன், சசிகலா ஆகியோர் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் அதிமுகவில் குறிப்பிட்ட தரப்பினர் தினகரனுக்கு ஆதரவாகவே உள்ளனர். இரட்டை இலையையும், கட்சியையும் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் கைப்பற்றியதை அடுத்து தினகரன் புதிய கட்சி ஆரம்பிக்க போவதாக தகவல்கள் பரவின. ஆனால் தினகரன் அதிமுக இருக்கும் போது […]

விண்வெளியிலிருந்து பார்த்தா தமிழகம் புகை மூட்டமா இருக்காம்!

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று தமிழகம் முழுவதும் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலே போகிப்பண்டிகை. இதனால் வீட்டில் உள்ள பழைய பொருட்களை முற்றத்தில் வைத்து தீயிட்டு எரிப்பது வழக்கம். தீயிட்டு எரிப்பதால் அதிலிருந்து வெளியாகும் புகை காற்றை மிகவும் மாசுபடுத்துகிறது. இதனால் பிளாஸ்டிக் முதலியவற்றை தீயிட்டு எரிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஆனாலும் மக்கள் அதை செய்யத்தான் செய்கிறார்கள். நகரங்களில் போகிப்பண்டிகையின் போது காற்று மிகப்பெரிய […]