ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் செயல்படுவதால் யாரும் வதந்திகள் பரப்ப வேண்டாம் துணை முதல்வர் என ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தினகரன் ஆர்கே நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு அமோகமாக வெற்றிபெற்றார். அவரது வெற்றி பணம் கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி என பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தெரிவித்தனர். தினகரனின் வெற்றியால் எடப்பாடி அணி அதிர்ந்து போனது. தொடர்ந்து நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் […]
தமிழ்நாடு செய்திகள்
வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க தடை
ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் கங்கணம் கட்டிக்கொண்டு வைரமுத்துவுக்கு எதிராக களத்தில் இறங்கியது. எப்போதும் இல்லாத அளவுக்கு ஜீயர்கள் போராட்டத்தில் குதித்தனர். வைரமுத்துவுக்கு எதிராக ஆபாச வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டன. அவருக்கு பொதுக்கூட்டங்களில் கொலை மிரட்டல் […]
கமலும் ரஜினியும் சோளக்காட்டு பொம்மைகள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் அடுத்த மாதம் அரசியல் களத்தில் புதிய கட்சியுடன் களமிறங்கவுள்ளனர். மேலும் விஷால் மற்றும் விஜய் எந்த நேரமும் களமிறங்க காத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி பாக்யராஜ் உள்பட இன்னும் ஒருசிலரும் அரசியலில் நுழைய சரியான நேரத்தை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில் ஒருசிலர் புதிய கட்சி தொடங்குகின்றனர் என யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் புதிய கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் சோளக்காட்டு பொம்மைகள் […]
ஹிட்லருக்கு ஏற்பட்ட முடிவுதான் அவர்களுக்கு
தினகரன் அணியில் உள்ள நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஆரல்வாய்மொழியில் பேசினார். அப்போது அவர் தினகரனுக்கு இளஞர்கள் ஆதரவு இருப்பதாக பேசினார். மதிமுகவில் இருந்து வெளியேறிய நாஞ்சில் சம்பத் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்து கொள்கை பரப்பு செயலாளர் ஆனார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா அணியில் இருக்கும் நாஞ்சில் சம்பத் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக உள்ளார். பொதுக்கூட்டங்கள் போட்டு மேடைதோறும் டிடிவி […]
வைரமுத்து மன்னிப்பு கேட்டது பத்தாது
ஆண்டாள் பற்றி தெரிவித்த கருத்துகளுக்கு கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்டது பத்தாது என்றும், அவர் மேலும் ஒரு முறை மக்களிடம் மனதார மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கவிஞர் வைரமுத்து வைணவ பெண் கடவுள் ஆண்டாள் பற்றி தவறான வார்த்தையை குறிப்பிட்டு பேசியதாக சர்ச்சை எழுந்தது. அதனை தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் […]
இந்த குழந்தைக்கு தேவை நல்ல மனநல ஆலோசனை
ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து கூறிய கருத்திற்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நித்யானந்தா ஆசிரமத்தை சேர்ந்த இளம் பெண் துறவி ஒருவர் வைரமுத்துவை ஒருமையில், ஏகத்துக்கும் கொச்சையாக விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரம் சமூக வலைத்தளங்கள் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதுபற்றி மூத்த பத்திரிக்கையாளர் பா. கவிதாகுமார் தனது முகநூலில் பதிவுட்டுள்ள பதிவானது: கவிஞர் வைரமுத்துவை விமர்சித்த நித்யானந்தா பீட […]
இந்த ஆண்டு ஆண்களுக்கு ஆபத்தா?
ஒவ்வொரு ஆண்டும் ஒருசில வதந்திகள் கிளம்பி பொதுமக்களை பயமுறுத்தி வரும் நிலையில் இந்த ஆண்டு ஆண்களுக்கு ஆபத்து என்ற வதந்தி பரவி வருவதால், பெண்கள் தங்கள் வீட்டின் ஆண்களுக்காக வீட்டின் முன் விளக்கேற்றி வருகின்றனர் இந்த ஆண்டு தை மாதம் முதல் தேதியே அமாவாசையாக உள்ளதால் ஆண்களுக்கு ஆபத்து என்ற வதந்தி பரவி வருகிறது. இதன் காரணமாக தங்கள் வீட்டில் உள்ள கணவர், சகோதரர், தந்தை, மகன் போன்றவர்களுக்காக பெண்கள் […]
அதிமுகவை கைப்பற்றும் தினகரன்
ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்றுவார் எனவும், தமிழகத்தில் ஏப்ரல் 14-ஆம் தேதிக்குள் குடியரசுத்தலைவர் ஆட்சி அமையும் எனவும் டிராஃபிக் ராமசாமி கூறியுள்ளார். சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பல்வேறு பொதுநல வழக்குகள் தொடர்ந்து பிரபலமானவர். இவர் மக்கள் பாதுகாப்பு கழகம் என்ற ஒரு அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் 5-ஆம் ஆண்டு விழா கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு […]
வாயை விட்டு மாட்டிக்கொண்ட எச்.ராஜா
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தவறான தகவல் ஒன்றை கூற, அவர் தீக்குளிப்பாரா என திமுக நிர்வாகி ஒருவர் அவருக்கு டுவிட்டரில் சவால் விட்டுள்ளார். சென்னை 41-வது புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் திமுகவின் தமிழன் பிரசன்னா எழுதிய இவன் கருப்பு சிவப்புக்காரன் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அவர் புனித நூல்களை குப்பை என பேசியதால் விரட்டப்பட்டார் […]
சரியில்லாத சிஸ்டம்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கிவிட்டார். உறுப்பினர் சேர்க்கை நடந்துகொண்டிருக்கிறது. கட்சிக்கான பெயர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஆன்மீக அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளார். ஆதரவும், எதிர்ப்பும் கலந்துகட்டி தமிழக அரசியலை கலக்கி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து சிஸ்டம் சிரியில்லை என்று கூறிவருகிறார். அவர் குறித்தான தொலைக்காட்சி விவாதங்களில் இது முக்கிய கருத்தாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சிஸ்டம் சரில்லை என கூறிவரும் ரஜினி குறித்து அதிரடியான கருத்து ஒன்றை கூறியுள்ளார் மூத்த […]





