மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோரின் 68 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்கிற நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த கர்நாடக நீதிமன்றத்தின் நீதிபதி டி குன்கா, வழக்கில் சம்பந்தப்பட்ட 128 சொத்துகளில், 68 சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தவிட்டிருந்தார். ஆனால், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமராசாமி […]
தமிழ்நாடு செய்திகள்
என்னை வற்புறுத்தி காதலிக்க வைத்தார் அஸ்வினி – அழகேசன் வாக்குமூலம்
சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரிக்கு வருகே மாணவி அஸ்வினி கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை 2.45 மணியளவில் மீனாட்சி கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வரும் அஸ்வினி என்கிற மாணவியை, அழகேசன் என்ற வாலிபர் கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொலை செய்தார். அவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே அஸ்வினி […]
இருளை நீக்கும் ஒளி விளக்காக பெண்கள் விளங்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி மகளிர் தின வாழ்த்து
இருளை நீக்கும் ஒளி விளக்காக பெண்கள் விளங்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் இடர்களை கண்டு அஞ்சாமல் உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும், இருளை நீக்கும் ஒளி விளக்காக பெண்கள் விளங்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- பெண்களின் சிறப்பினையும், மாண்பினையும் போற்றும் வகையிலும், சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பினை உலகிற்கு […]
காவிரி விவகாரத்தை திசை திருப்பும் செயல் – கமல்ஹாசன் காட்டம்
பெரியார் சிலை விவகாரத்தில் ஹெச்.ராஜாவின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என சர்ச்சைக்குரிய ஒரு பதிவை பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு கடும் கண்டங்கள் எழவே, அந்த பதிவை அவர் சில மணி நேரங்களில் நீக்கிவிட்டார். அந்நிலையில், வேலூர் மாவட்டம்திருப்பத்தூர் […]
தினகரனை குறி வைக்கும் கமல்ஹாசன்
ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரனின் ஊழலை அம்பலப்படுத்துமாறு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் மய்ய நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அரசியல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே நடிகர் கமல்ஹாசன் அதிமுக அரசை தொடர்ந்து விமர்சித்து வந்தார். அந்நிலையில்தான், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இதனால், பொதுமக்கள் மத்தியில் அவரின் இமேஜ் உயர்ந்தது. ஆனால், ஆர்.கே.நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து, தினகரன் தரப்பு […]
ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் – ஹோட்டலில் நடந்தது என்ன?
ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மயங்கி நீரில் மூழ்கி மரணமடைந்தார். இந்நிலையில், துபாயில் என்ன நடந்தது என அவரின் கணவர் போனி கபூர் கூறிய விஷயங்களை திரைத்துறை வர்த்தக விமர்சகர் கோமல் நாஹ்தா தனது இணையதள ப்ளாக்கில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது: துபாயில் தனது உறவினரின் திருமணம் முடிந்த பின், தனது மகள் ஜான்வி விரும்பிய சில […]
தமிழக எம்பிக்கள் ராஜினாமாவா?
விவகாரம் குறித்து நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆலோசனை செய்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, காவிரி விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக எம்பிக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வது குறித்த திட்டம் ஒன்றை கூறினார். மு.க.ஸ்டாலினின் இந்த திட்டத்திற்கு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். திமுகவுக்கு மக்களவையில் ஒரு எம்பி கூட கிடையாது. மாநிலங்களவையில் நான்கு எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். மக்களவை […]
ஜெயலலிதா நினைவிடத்தில் நடந்த தற்கொலை
மறைந்த முன்னாள் முதல்வரின் நினைவிடத்தில் மதுரையை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மெரினா முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் 24 மணி நேரமும் பாதுகாப்புக்கு போலீசார் இருக்கும் நிலையில் இன்று காலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அருள் என்ற போலீஸ்காரர் திடீரென தனது கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டு […]
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் திடீர் அனுமதி
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவொரு வழக்கமான சோதனை தான் என்றும், முதல்வருக்கு நெருக்கமானவர்கள் சென்னை அப்பல்லோவில் பணிபுரிவதால் அவர் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய உடல்நலத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]
கேரள முதல்வருடன் கமல்ஹாசன் சந்திப்பு
கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் இன்று அதிகாலை சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருந்ததாக முதலில் தகவல் வந்தது. ஆனால் அப்பல்லோ மருத்துவமனை கேரள முதல்வருக்கு வருடாந்திர மருத்துவ சோதனை செய்ததாக அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில் மருத்துவ சோதனைக்கு பின்னர் கேரள முதல்வர் பினராயி விஜய், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார். அப்போது […]





