நேற்று திமுக உள்பட 15 எதிர்க்கட்சிகள் நடத்திய பந்த் மற்றும் சாலை மறியல் போராட்டத்தால் தமிழகமே ஸ்தம்பித்தது. குறிப்பாக திமுக தொண்டர்கள் தமிழகமெங்கும் முழக்கமிட்ட கோஷங்களால் தமிழக காவல்துறை திணறியது இந்த நிலையில் நேற்று வேலூர் – திருப்பத்தூர் சாலையில் அரசு பேருந்து ஒன்றை தன்னந்தனியாக திமுக கொடியை கையில் ஏந்திய ஒரு பெண் வழிமறித்து தனது எதிர்ப்பை காட்டினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. தனியொரு […]
தமிழ்நாடு செய்திகள்
நெற்றியில் சந்தனம் வைத்த மாணவிகளை துன்புறுத்தியதாக பள்ளி நிர்வாகம்
தமிழகத்தில் இயங்கி வரும் பல தனியார் பள்ளிகள், மத நோக்கத்திலும், மதங்களை பரப்புவதிலும் ஈடுபட்டு வருவதாகவும், பிற மதங்களை சார்ந்த மாணவ, மாணவிகளை துன்புறுத்தி வருவதாகவும் பல குற்றச்சாட்டுக்கள் சமீபத்தில் எழுந்து வருகின்றது. இந்த நிலையில் ஆரணியை அடுத்த தேவிகாபுரம் என்ற பகுதியில் இயங்கி வரும் குளினி மெட்ரிக் கிருஸ்துவ பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலர் இன்று காலை பள்ளிக்கு வரும்போது நெற்றியில் சந்தனம் வைத்து கொண்டு வந்தனர். அந்த […]
தனி ஆளாக பேருந்தை தடுக்கும் திமுக பெண் தொண்டர்
காவிரி மேலான்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக திமுக தீவிர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இன்று திமுக சார்பாக தமிழகமெங்கும் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகமெங்கும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணாசாலையில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வி.சி.க, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் இணைந்தன. அதன்பின் மெரினாவில் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல், அதிமுக தொழிற்சங்கத்தை தவிர […]
போராட்டம் 100 சதவீதம் வெற்றி: ஸ்டாலின் பேட்டி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவிரி மேலான்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக திமுக தீவிர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இன்று திமுக சார்பாக தமிழகமெங்கும் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் 5ம் நாளாக இன்று திமுக போராட்டத்தை கையில் எடுத்தது. சென்னை […]
ஆளுநரை சந்தித்த பூரிப்பில் முதல்வர்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆளுநரை சந்தித்தனர். இந்த சந்திப்பின் பிறகு முதல்வர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கொடுத்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைக்காமல் இருப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் […]
“திராவிடத்தை யாராலும் ஒழிக்க முடியாது” – கமல்ஹாசன்
சென்னை பொன்னேரியில் தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற கமல்ஹாசன் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், படித்து முடித்த பின் மாணவர்கள் எதிர்கொள்ள போவது அரசியலையும், ஊழலையும் தான் என்று தெரிவித்தார். மாணவர்கள் அரசியல் புரிந்தவர்களாக இருந்தால் அரசியல்வாதிகள் நேர்மையானவர்களாகி விடுவார்கள் என்று கமல்ஹாசன் கூறினார். மாணவர்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களுக்கு இருக்கும் தெளிவு, மத்திய அரசுக்கு இல்லை என்றும் […]
ஜெ.வின் மரணத்தில் விலகும் மர்மங்கள் ….
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை ஆணையம் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளது. ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சர்ச்சை காரணமாக, ஓய்வு பெற்று நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஜெயலலிதாவின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உதவியாளர் பூங்குன்றன், இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, விவேக், அண்ணன் மகள் […]
எடுபுடி வேலை பார்க்கும் அரசு : வெளுத்து வாங்கிய கமல்ஹசன்
காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் போலியானது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் இன்று மாலை திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக கமல்ஹாசன் நேற்று மாலை ரயில் மூலம் சென்னையிலிருந்து திருச்சி கிளம்பி சென்றார். இந்நிலையில், இன்று காலை திருச்சியில் செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய கமல்ஹாசன் “நீதிமன்ற உத்தரவையடுத்து, காவிரி மேலாண்மை வாரியத்தை […]
சீமானின் முகத்திரையை நார் நாராய் கிழித்த வைகோ
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் எடுத்து கொண்ட புகைப்படம் கிராபிக்ஸ் என்றும், அவருடன் புகைப்படம் எடுத்து கொள்ள பிரபாகரன் விரும்பவில்லை என்றும் கூறிய வைகோ, சீமான் தான் விடுதலைப்புலிகளின் பிரதிநிதி என்று கூறி கோடிக்கணக்கில் வெளிநாட்டு தமிழர்களிடம் பணம் பெற்றதாகவும் வைகோ கூறியுள்ளார். மேலும் பிரபாகரன் – சீமான் சந்திப்பு வெறும் 8 நிமிடங்கள் மட்டுமே நடந்தது என்றும், விடுதலைப்புலிகளின் சீருடை அணிய கூட சீமானை பிரபாகரன் அனுமதிக்கவில்லை என்றும் […]
கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி
3’ம் தேதி கடையடைப்பு… விக்கிரமராஜா. 5’ம் தேதி, கடையடைப்பு… ஸ்டாலின் 11″ம் தேதி கடையடைப்பு…வெள்ளையன்… அடுத்தது மே5 வணிகர் தினம் என்று நன்கொடை வசூல் மற்றும் கடையடைப்பு. இன்னும் பல இலட்டர் பேடு அமைப்புகள் கடை அடைப்பு போராட்டம் அறிவிப்பு. கடை அடைத்தால் காவிரி ஆணையம் கிடைத்து விடுமா? கடையே இல்லாத தலைவர்களே எங்களை கடை அடைக்க சொல்கிறீர்களே இது நீயாயமா? நாங்கள் வாங்கிய கந்து வட்டி பணத்திற்கு நீங்கள் […]





