பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கருப்பு கொடி ஏந்தியும், கருப்பு சட்டை அணிந்தும் போராட்டம் நடத்தினார்கள். சென்னையில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். சைதாப்பேட்டையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். அப்போது அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து […]
தமிழ்நாடு செய்திகள்
பிரதமர் மோடி வருகையை எதிர்த்து தீக்குளிப்பு
ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் தர்மலிங்கம் என்பவர் வீட்டு சுவரில் மோடி வருகையை கண்டிப்பதாக எழுதி வைத்து விட்டு தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது உயிரிழந்து விட்டார்.
இந்த நிலை மாற வழி செய்யுங்கள் – காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு வகையான போராட்டங்கள் நடந்து வருகிறது. விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரலங்கள் பலரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராணுவ கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை சென்னை வந்துள்ளார். பல்வேறு தரப்பினரும் மேதடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி […]
காவிரி பிரச்சினை நீடிக்க அரசியல் கட்சிகள் விருப்பம் – நடிகர் பிரகாஷ்ராஜ்
நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில மாதங்களாக பா.ஜனதா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக பேசி வருகிறார். பா.ஜனதா நாட்டை ஆளக்கூடாது என்றும் அவர் கூறுகிறார். கர்நாடக சட்டசபை தேர்தலில் அவர் பா.ஜனதாவுக்கு எதிராக பிரசாரத்தையும் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடக மாநிலம் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காவிரி பிரச்சினையை தீர்க்காமல் அதை அரசியல் கட்சிகள் உயிரோடு வைத்திருக்கவே விரும்புகின்றன. நைல் […]
சென்னை ஐபிஎல் போட்டிகள் மாற்றம்
நேற்று சென்னையில் ஐபிஎல் போட்டி நடப்பதற்க்கு ஒருசில மணி நேரத்திற்கு முன்னர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் சென்னையே சில மணி நேரங்கள் பதட்டத்தில் இருந்தது. இருப்பினும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போட்டி அசம்பாவித சம்பவங்கள் இல்லாமல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் அடுத்த போட்டி வரும் 20ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த போட்டிக்கு நாளை டிக்கெட்டுக்கள் விற்பனையாகும் […]
சிம்புவுக்கு இருக்கும் முதிர்ச்சி ரஜினி, கமலுக்கு இல்லையே
சிம்புவுக்கு இருக்கும் முதிர்ச்சி சமீபத்தில் அரசியலில் குதித்துள்ள ரஜினி, கமலுக்கு இல்லையே என்பதை நினைத்து அதிர்ச்சி அடைந்தேன் என்று கன்னட நடிகர் அனந்தநாக் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். புதியதாக அரசியலுக்கு வந்துள்ள கமல், ரஜினியிடம் காவிரி பிரச்சனையில் வித்தியாசமான அணுகுமுறையை எதிர்பார்த்தேன். ஆனால் அவர்களும் பழைய பாணியில், ஏற்கனவே உள்ள அரசியல் தலைவர்கள் போல் அரசியல் செய்கின்றனர். கர்நாடகத்தில் தற்போது தேர்தல் நடைபெறுகிறது இன்னும் ஒரு மாதத்தில் புதிய அரசு […]
ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு: மைதானத்திற்கு பூட்டுப்போட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம்
காவிரி விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுகிறது. மும்பையுடனான போட்டி முடிந்து சென்னை அணியினர் திரும்பிய நிலையில், கொல்கத்தா வீரர்களும் நேற்றுமாலை சென்னை வந்தடைந்தனர். வீரர்கள் பலத்த பாதுக்காப்புடன் ஓட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீரர்கள் தங்குமிடத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த […]
இன்று முதல் ஈரோடு வழியாய் மாடி ரயில்(Double decker)இயக்கம் கோவைTO சென்னை
நெல்லை, தூத்துக்குடியில் மழை – வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
நெல்லை, தூத்துக்குடியில் கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மழை பெய்தது பொதுமக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
நெல்லையில் மழை – பாபநாசம், அடவிநயினார் அணைகளில் நீர்மட்டம் உயர்வு
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்ததால் கடுமையான வெப்பம் நிலவியது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்ததால் பாபநாசம், அடவிநயினார் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று நள்ளிரவில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, குண்டாறு ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் அம்பை, ஆய்க்குடி, […]





