காவிரி தொடர்பான எழுச்சி தமிழகத்தில் வலுத்து வரும்போது ஐ.பி.எல் போட்டிகளைச் சென்னையில் நடத்துவது மக்களை திசை திருப்பிவிடும் என்ற நோக்கில் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம், தங்கர் பச்சான், கெளதமன் எனத் திரையுலகைச் சார்ந்த பலரும் சேர்ந்து ‘தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை’ சார்பில் சென்னை அண்ணா சாலையில் சென்ற வாரம் போராட்டம் நடத்தினர். பல அமைப்பினரும் இந்த போராட்டத்தில் இருந்தனர். போராட்டக் குழுவில் ஒருவர் போலீஸாரைத் தாக்குவது […]
தமிழ்நாடு செய்திகள்
இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்படும் போது வாய்திறக்காத ரஜினிகாந்த் காவிரிக்கு போராடுவதை வன்முறை என்கிறார்
இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்படும் போது குரல் கொடுத்தீர்களா? என நடிகர் ரஜினிகாந்தை நோக்கி இயக்குநர் பாரதிராஜா கேள்வியெழுப்பியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) பாரதிராஜா வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் மேற்படி கேள்வியை தொடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் மூலம் பாராதிராஜா மேலும் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். நியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் இறங்கி போராடினீர்களா? இல்லை ஒரு அறிக்கையாவது விட்டீர்களா? மீத்தேன் குறித்து ஒரு வார்த்தையாவது பேசினீர்களா? என்பது பாரதிராஜாவின் கேள்விகளாக உள்ளன. தொடர்ந்தும் […]
கோவையில் ரூ.18½ கோடிக்கு சூதாட்டம் – ஆன்லைன் லாட்டரி கும்பலை சேர்ந்த மேலும் ஒருவர் தலைமறைவு
கோவையின் ஆன்லைன் மூலம் லாட்டரி சூதாட்டத்தில் ஈடுபடும் கும்பல் குறித்து போத்தனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வெள்ளளூரை சேர்ந்த கார்த்திகேயன், கனகராஜ், ரங்கராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8½ லட்சம் ரொக்கப்பணம், ஒரு கார், 2 லேப்டாப், 8 செல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் இந்த கும்பல் கடந்த 1 […]
பேராசிரியை நிர்மலா கைது
தனியார் கல்லூரியின் கணித பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளிடம் தவறாக பேசிய விவகாரத்தில் போலீசாரால் கைது செய்யபட்டார். அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி என்பவர் மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து இன்று அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். […]
கங்கை அமரனிடம் அடித்து பிடுங்கிய பங்களாவை ஒப்படை: தினகரனுக்கு எச்.ராஜா
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஒரு பூஜையில் கலந்துக்கொண்டார் பாஜக தலைவர் எச்.ராஜா. இவர் எப்போதும் சர்ச்சை கிளப்பும் வகையில் பேசக்கூடியவர். தற்போதும் அதே மாதிரிதான் பேசியுள்ளார். எச்.ராஜா கூறியது பின்வருமாறு, காவிரி மேலாண்மை வாரியமோ அல்லது ஏதாவது ஒரு அமைப்போ ஏற்படுத்தும்போது, அந்த அமைப்பில் கருத்தொற்றுமையுடன் 4 மாநிலங்களும் பங்குபெற வேண்டும். ஆனால் கருத்தொற்றுமை ஏற்படவில்லை இதனால் உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகியுள்ளது. ஆனால், கடைசி நேரத்தில் ஸ்கீம் […]
பாஜகவிற்கு அடிபணிந்தாரா தினகரன்?
அமமுக கட்சியின் தலைவர் தினகரன், பாஜகவிற்கு அடிபணிந்துவிட்டார் என்று வெளியான செய்திக்கு, தினகரன் பதில் அளித்துள்ளார். கடந்த 12 ந் தேதி தமிழக வந்த பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் நடத்தினர். இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், என்னதான் இருந்தாலும் மோடி இந்தியாவின் பிரதமர் என்றும் அவருக்கு கருப்புக்கொடி காட்டுவது தவறு என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இதனால்ன் […]
சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்திற்கு பாராட்டு விழா
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் திரைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆகிய நிலையில் இன்று அவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் பாராட்டு விழா நடைபெறுகிறது. 150 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் கேப்டன் விஜயகாந்த், 1978 ஆண்டு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். மதுரையில் இருந்து சினிமா ஆசையோடு வந்த விஜயகாந்த் இயக்குநர் எம்.ஏ கஜாவின் இனிக்கும் இளமை படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆரம்பத்தில் இவரது படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. பின்னர் […]
தீக்குளித்த வைகோவின் உறவினர் மரணம்
சமீபத்தில் தீக்குளித்த வைகோவின் உறவினர் சரவண சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சமீபத்தில் அவருக்கும், சீமான் தரப்புக்கும் ஒரு மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலரும் வைகோ தரக்குறைவாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை பதிவு செய்து வந்தனர். காவிரி விவகாரம் மற்றும் வைகோவை பற்றிய அவதூறு மீம்ஸ்களை கண்ட வைகோவின் உறவினர் சரவண சுரேஷ் மனமுடைந்து தீக்குளித்தார். அதன்பின், சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையில் […]
நிலைமை சரியில்லை
தமிழ்நாட்டில் தற்போது தனக்கு சாதகமில்லாத சூழ்நிலை நிலவுதால், அரசியல் அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் தள்ளிப்போட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆன்மீக அரசியலை முன்னெடுப்பதாக அறிவித்த ரஜினி காவிரி நீர், ஸ்டெர்லைட், மீத்தேன், திருச்சி உஷா மரணம் உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளில் பெரும் அமைதி காத்தார். அதனால், அவர் எதற்கும் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், தான் இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை என ரஜினி பதில் கூறி […]
ஊடகங்கள் தான் எங்களை குற்றவாளியாக சித்தரித்துவிட்டனர்
நாங்கள் கலவரத்தில் ஈடுபடவில்லை எனவும், ஊடகங்கள் தான் எங்களை குற்றவாளி போல் சித்தரித்து விட்டது எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் மக்கள் போராடி வருகின்றனர். தமிழ் சினிமா துறையினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற […]





