வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் செய்திகளை நம்பி, அச்சத்துடன் இருக்கும் பொதுமக்கள், அப்பாவிகளை குழந்தை கடத்தல் கும்பல் எனக்கருதி பலரை அடித்துக்கொலை செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலையில் சாமி கும்பிட வந்த 5 முதியவர்களை பொதுமக்கள் கடுமையாக தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். அதேபோல் திருவள்ளூரில் குழந்தை கடத்த வந்தவர் என கருதி மனநோயாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. […]
தமிழ்நாடு செய்திகள்
மே 14ம் தேதி வரைவு திட்டம் தாக்கல் – மத்திய அரசு அறிவிப்பு
காவிரி நீர் விவகாரத்தில் இனிமேல் அவகாசம் கேட்க மாட்டோம் என மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் இன்று தெரிவித்துள்ளார் காவிரி நீர் தொடர்பான வழக்கில் தமிழகத்திற்கு 4 எம்.டி.சி நீரை தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மழை பற்றாக்குறையை காரணம் காட்டி தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக அரசு சமீபத்டில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. கடந்த 8ம் தேதி […]
ஒரு நடிகன் நாடகம் ஆடுகிறான்…
ரஜினி என்ற ஒரு மாபெரும் நடிகன் நாடகம் நடித்துக்கொண்டிருக்கிறார். அதன் திரைக் கதை, வசனம் யார் என்று ஊர் அறியும். நாம் அதை பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். தமிழர்களின் துன்பத்திலும், துயரத்திலும், வேதனைகளிலும் சற்றும் பங்குக்கொள்ளாத சூப்பர் ஸ்டார் ரஜினி தான் புதிய தமிழகம் பிறக்கும் என்கிறார் ! முன்பு புதிய இந்தியா பிறந்தது என்றாரே அதே ரஜினி, தான் புதிய தமிழகம் பிறக்கும் என்கிறார் ! இவர்கள் இருக்கும் வரை […]
தமிழர்களின் போராட்டம் எதிரொலி: நெடுவாசல் திட்டத்தை கைவிடுகிறதா ஜெம் நிறுவனம்?
தமிழகத்தில் உள்ள விவசாய பகுதிகளில் ஒன்றான நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அந்த பகுதி மக்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தனர். திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கொடுத்த தொடர்ச்சியான எதிர்ப்பு காரணமாக நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ஜெம் நிறுவனம் கைவிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது ஜெம் நிறுவனம் சமீபத்தில் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை […]
ஒரு பக்கம் சினிமா ; மறு பக்கம் அரசியல்
நடிகர் ரஜினிகாந்த் தனது முதல் அரசியல் மாநாட்டை கோவையில் நடத்துவது குறித்து தனது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நேற்று நடைபெற்ற ‘காலா’ இசை வெளியீட்டு விழாவில் அரசியல் குறித்த அறிவிப்பை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியல் குறித்த எந்த அறிவிப்பையும் தெரிவிக்காத ரஜினி, மீண்டும் நேரம் வரும்போது அரசியல் பேசுகிறேன் என்று கூறி தனது உரையை முடித்து கொண்டார். இது அவரது […]
தேர்தலில் தோற்றாலும் மக்கள் பணி தொடரும் – கமல்ஹாசன் பேட்டி
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் தோல்வி அடைந்தாலும், அரசியலில் இருந்து விலக மாட்டேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை தொடங்கினார். அதன் பின் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து வருகிறார். சமீபத்தில் கூட மாதிரி கிராம சபை கூட்டத்தை நடத்தினார். இந்நிலையில், இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று சென்னை […]
ஜெயலலிதா மரண விசாரணையில் திடீர் திருப்பம்!
ஜெயலலிதாவின் உடல்நிலை, 2016 மே மாதத்திலேயே மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது’ என, விசாரணை கமிஷனில், சர்க்கரை நோய் நிபுணர் ராமச்சந்திரன் கூறியது, விசாரணையில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை, 40க்கும் மேற்பட்டோரிடம், விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவல்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று, சென்னை, அப்பல்லோ டாக்டர் ஜெயஸ்ரீ கோபால், சர்க்கரை நோய் நிபுணர் ராமச்சந்திரன் ஆகியோர், விசாரணைக்கு […]
ஜெ.வின் நினைவு மண்டபத்தில் இரட்டை இலை?
மக்கள் வரிப்பணத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவரது நினைவிடத்தில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அந்த நினைவு மண்டபத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று இந்த நினைவிடம் […]
நீட் தேர்வு! மாணவியின் தந்தை நெஞ்சு வலியால் திடீர் மரணம்
நீட் தேர்வுக்காக மகளுடன் புதுவை வந்த சீனிவாசன் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலமானார். நீட் தேர்வுக்காக தமிழக மாணவ, மாணவிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்தது நாம் அனைவரும் அறிந்ததே. பல்வேறு கட்டுப்பாடுகள், மொழி தெரியாத மாநிலங்களில் தேர்வு மையம், தங்கும் வசதி, போக்குவரத்து செலவு என பல்வேறு துன்பங்களை அனுபவித்தனர் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும். எர்ணாகுளத்தில் மகனுக்காக காத்திருந்த தந்தை கிருஷ்ணசாமி உயிரிழந்த சோகம் […]
கம்மலை அடகுவைத்து நீட் தேர்வுக்கு கேரளா செல்லும் ஏழை மாணவி..!
நீட் தேர்வை எழுதுவதற்காகத் தாயின் கம்மலை அடகு வைத்துவிட்டு எர்ணாகுளம் செல்கிறார், அரியலூர் மாணவி ஹேமா. பேருந்து நிலையத்திற்கே தனியாகச் செல்லாத நான், எப்படி வெளிமாநிலத்திற்குச் சென்று தேர்வெழுதப்போகிறேன் என்று தெரியவில்லை எனப் புலம்புகிறார். நீட் தேர்வுக்கான மையங்கள் வெளி மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளதாகப் புகார் செய்யப்பட்டது. இதில், நீட் தேர்வுக்காக ஒதுக்கப்பட்ட மையங்களில்தான் நீட் தேர்வு எழுத வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, வெளிமாநிலத்தில் நீட் தேர்வெழுத மாணவர்கள் […]





