தமிழ்நாடு செய்திகள்

எடியூரப்பா விவகாரத்தை சிறப்பாக கையாண்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு வணக்கங்கள்

ரஜினி மக்கள் மன்ற பெண் நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்த நாடுகள் முன்னேறி இருக்கின்றன. ரஜினி மக்கள் மன்றத்திலும் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும். 150 தொகுதிகளில் செல்வாக்கு இருப்பதாக வெளியான செய்தி உண்மையாக இருந்தால் மகிழ்ச்சியே. கர்நாடகாவில் ஜனநாயகம் வென்றுள்ளது. எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் 15 நாட்கள் கொடுத்தது கேள்விக்கு உரியது. இதனை […]

பிளஸ் 2 தேர்வில் தற்கொலை செய்து கொண்ட நெல்லை மாணவரின் மதிப்பெண்கள்

தந்தையின் குடிப்பழக்கத்தால் மனம் நொந்து போன நெல்லை மாணவர் தினேஷ் என்பவர் கடந்த 2ஆம் தேதி நெல்லை அருகே உள்ள பாலம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த மாணவர் பிளஸ் 2 தேர்வில் 1024 மதிப்பெண்கள் எடுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. தந்தை குடிப்பழக்கத்தால் தனது குடும்பம் வறுமையில் வாடுவதாகவும், தனது குடும்பம் போன்று பல குடும்பங்கள் சீரழிந்து […]

விபத்தில் சிக்கிய பெண்ணை தனது வாகனத்தில் அனுப்பி வைத்த கமல்ஹாசன்…

சாலை விபத்தில் சிக்கி, ஆம்புலன்சுக்காக காத்திருந்த ஒரு பென்ணை நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது வாகனத்தில் அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து வருகிறார். தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள கமல்ஹாசன் இன்று தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பேசினார். இன்று முழுவதும் அவர் கன்னியாகுமாரி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் […]

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளது. முதல்முறையாக இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் மட்டுமே வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை சரியாக […]

காவிரி விவகாரம் குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை!

காவிரி விவகாரம் குறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறினார். காவிரிக்கான தமிழகத்தின் குரல் என்ற தலைப்பில் மக்களை சென்று சந்திக்க உள்ளதாக கூறிய கமல்ஹாசன், மே 19-ஆம் தேதி விவசாயிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். மேலும், மக்கள் பிரச்னைக்காக […]

காவிரி வரைவு அறிக்கை தாக்கல்: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கருத்து

இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றத்தில் வரைவறிக்கையை தாக்கல் செய்துள்ள மத்திய அரசு அதனை எப்போது முழுமையாக நடைமுறைப்படுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்களும் – காவிரி டெல்டா விவசாயிகளும் எதிர்பார்ப்பது, நடுவர்மன்றத்தின் இறுதித்தீர்ப்பின் அடிப்படையிலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், முழுமையான அதிகாரமிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான். அதனை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் கொண்ட […]

தமிழக அரசு செய்தது பச்சைத் துரோகம் – வைகோ பேட்டி (வீடியோ)

காவிரிக்காக அனைத்து கட்சிகளும் போராடி வரும் நிலையில் மத்திய அரசிற்கு சொந்தமான பெட்ரோலிய ரசாயண துறையின் முதலீட்டு மண்டலமாக்க 55 ஆயிரம் ஏக்கர் நிலத்தினை மத்திய அரசிற்கு கொடுத்தது பச்சைத்துரோகம் என வைகோ பேட்டியளித்துள்ளார். கரூர் அருகே உள்ள அரவக்குறிச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் உயர்நிலைக்குழு கூட்டம், அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்றது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ இக்கூட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது., தமிழகத்தில் […]

தைரியம் இருந்தால் கைது செய்து பாருங்கள்: எஸ்.வி.சேகர்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது முகநூலில் பதிவு செய்த நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் எந்த நேரத்திலும் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. மேலும் அவரது முன் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டதால் அவரது கைது நிச்சயம் என்றே கருதப்பட்டது. இந்த நிலையில் எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை கைது செய்ய அமைக்கப்பட்டுள்ள தனிப்படைகள் அவரை தேடி வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் […]

அன்னையர் தினத்தன்று தாயுடன் செல்பி எடுத்துக் கொண்ட ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அன்னையர் தினமான இன்று தனது அன்னையை நேரில் சந்தித்து இன்று ஆசி பெற்றார். உலகம் முழுவதும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று நாடு முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோபாலப்புரத்தில் உள்ள தனது தாயை நேரில் சந்தித்து அவருக்கு புது புடவையைப் பரிசாக வழங்கி, இனிப்பு ஊட்டி, […]

எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை

எஸ்.வி சேகர் மீது ஒடுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். எஸ்.வி.சேகர் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் எஸ்.வி.சேகர் தலைமறைவானார். மேலும், முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரை […]