முதல்நிலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.163 கோடி பணமும், 100 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுபோக பல ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும், செய்யாதுரையின் எஸ்.பி.கே. நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளவரும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தியுமான சுப்பிரமணியை வருமான வரித்துறையினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். 4வது நாளாக இன்னும் சோதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் […]
தமிழ்நாடு செய்திகள்
பாஜகவின் கருத்தை பிரதிபலிக்கும் ரஜினி – அரசியலில் சறுக்குவாரா?
அரசியலுக்கு வருவேன் என 20 வருடங்களுக்கும் மேலாக திரைப்படங்களில் பஞ்ச் வசனங்கள் பேசிக்கொண்டிருந்தார் நடிகர் ரஜினிகாந்த். பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ‘புதிய இந்தியா பிறந்தது’ என வரவேற்றார். மத்திய அரசுக்கு எதிராக அவர் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார். கடந்த டிசம்பர் 31ம் தேதி அரசியலுக்கு வருவதாய் அறிவித்தார். குறிப்பாக ஆன்மிக அரசியலை முன்னெடுப்பதாகவும் கூறினார். நாங்கள் ஏற்கனவே ஆன்மிக அரசியலைத்தான் செய்து கொண்டிருக்கிறோம் என தமிழிசை சவுந்தரராஜன் […]
8 வழிச்சாலை தேவை தான்… ஆனால்? : ரஜினிகாந்த்
சென்னை – சேலம் இடையே மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலைத் திட்டத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் அமைய உள்ள இந்த திட்டத்தால் ஏராளமான விளை நிலங்கள் பாதிக்கப்படும் என தெரிகிறது. இயற்கை வளங்களை அழித்து அமைக்க போகும் இந்த சாலைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் தமிழக அரசோ […]
பாஜக மதவாத அரசியல் செய்கிறதா ?
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஜிஎஸ்டி யை எதிர்த்த பலர் தற்பொழுது அதனால் தமிழகத்திற்கு அதிக வருமானம் கிடைப்பதால், ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக மதவாத கட்சி என கூறும் காங்கிரஸ், திமுக ஆட்சியில் இருந்தபோது ஏராளமான ஊழல்களை செய்துள்ளனர். அப்போது தான் ஈழத்தில் தமிழர்கள் குவியல் குவியலாய் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனை ஏன் மத்தியில் இருந்த […]
சசிகலாவை நிரந்தரமாக சிறையில் வைக்க தினகரன் சதி – நமது அம்மா செய்தி
சசிகலாவை நிரந்தரமாக சிறையில் வைக்க டிடிவி தினகரன் சதி செய்து வருகிறார் என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு உணவு பொருட்கள் வழங்கும் கிறிஸ்டி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில், கடந்த 5ம் தேதி தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான 76 இடங்களில் வருமான வரித்துறையின் சோதனையை தொடங்கினர். கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் […]
நிர்மலா தேவி விவகாரம் – குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிசிஐடி: சிக்கிய இரண்டு பேராசிரியர்கள்
பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீஸார் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர். அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி, துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் ஆளுனர் […]
அமித்ஷாவால் மழை பெய்தது…குளத்தில் தாமரை மலரும் : தமிழிசை நம்பிக்கை
பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் வருகையால் தான் தமிழகத்தில் மழை பெய்தது என்றும் அந்த மழை நீரில் தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்தும், மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கவும் அமித்ஷா நேற்று சென்னைக்கு வந்தார். விமான நிலையத்திலிருந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு […]
எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை!
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சிறுவன் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, முதலமைச்சரின் இல்லத்தில் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு அந்த சிறுவன் தொடர்பை துண்டித்துள்ளார். மீண்டும் அந்த தொலைப்பேசி எண்ணுக்கு காவலர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசவே, அவரது வீட்டிலும் வெடிகுண்டு வைத்துள்ளதாக அச்சிறுவன் தெரிவித்துள்ளான். இதனை அடுத்து முதலமைச்சர் இல்லத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். […]
எந்த நடிகனும் வரட்டும், ஆனால், என் தம்பி விஜய் வந்தால், கமல் கலக்கல் பதில்
கமல் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக தைரியமாக பேசுபவர். அப்படி அவர் சமீபத்தில் பேசியது செம்ம வரவேற்பு கிடைத்துள்ளது. கமல் இன்று டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது விஜய் ரசிகர் ஒருவர் ‘விஜய் அரசியலுக்கு வருவது பற்றி கூறுங்கள்’ என்றார். அதற்கு கமல் ‘எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்’ என்று கூறி விஜய் […]
ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்படாது: செங்கோட்டையன் அறிவிப்பு!
அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூட இருப்பதாக வெளியான தகவல் குறித்து திமுக உறுப்பினர்கள், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதில் பேசிய அக்கட்சியின் உறுப்பினர் பொன்முடி, அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூடும் திட்டம் அரசிடம் உள்ளதா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேர மாணவர்களுக்கு ஆர்வம் இல்லை எனவும், 849 பள்ளிகளில் […]





