சசிகலா அபராதம் செலுத்தாவிட்டால் மேலும் 13 மாதங்கள் சிறை தண்டனை சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு, பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, உச்ச நீதிமன்றம் விதித்த ரூ.10 கோடி அபராதத்தை செலுத்தத் தவறினால் அவர் மேலும் 13 மாதங்கள் சிறையில் கழிக்க நேரிடும் என்று சிறை அதிகாரி கிருஷ்ண குமார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். “சசிகலா நடராஜன் ரூ.10 கோடி அபராதம் செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
தமிழ்நாடு செய்திகள்
அரசுத் திட்டங்களுக்கு குற்றவாளியான ஜெயலலிதாவின் பெயரைச் சூட்டக்கூடாது: ராமதாஸ்
அரசுத் திட்டங்களுக்கு குற்றவாளியான ஜெயலலிதாவின் பெயரைச் சூட்டக்கூடாது: ராமதாஸ் “அரசுத் திட்டங்களுக்கு குற்றவாளியான ஜெயலலிதாவின் பெயரைச் சூட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம் உள்ளிட்ட திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு அரசின் பெயரில் செயல்படுத்தப்பட வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் புதிய முதல்வராக கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, நேற்று […]
சசிகலாவின் பினாமி முதல்வர் எடப்பாடி – தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்
சசிகலாவின் பினாமி முதல்வர் எடப்பாடி – தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சசிகலாவின் பினாமி முதல்வர் எடப்பாடி, பெண்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சாடினார். பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பதற்கான திட்டங்கள் ஏதும் அதிமுக அரசு எடுக்கவில்லை. பினாமி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பெண்களைக் காக்க முன்வர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் […]
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் – ஆளுநரிடம் ஜமாலுதீன் அறிக்கை
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவங்கள் – ஆளுநரிடம் ஜமாலுதீன் அறிக்கை தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவங்கள் குறித்து ஆளுநரிடம் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிக்கை அளித்துள்ளார். தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சனிக்கிழமையன்று அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது ரகசிய வாக்கெடுப்பு கோரி தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது. மேஜை தள்ளிவிடப்பட்டது. இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டன. இதன் […]
தலைமைச்செயலகத்தில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பு
தலைமைச்செயலகத்தில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பு ஜெயலலிதா பயன்படுத்திய அறைக்கு சென்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக முதல்வராக தலைமைச் செயலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமைச் செயலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய அறைக்கு சென்ற பழனிச்சாமி, அவரது உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், ஜெயலலிதா அறையில் பழனிச்சமி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஜெயலலிதா அறையை ஜெயலலிதா நாற்காலியையும் […]
மக்களிடம் எதிர்ப்பு அலைவீசுவதால் இடைத்தேர்தலை நடத்தினால், வெற்றி பெற இயலுமா? அ.தி.மு.க. மூத்த தலைவர்கள்
மக்களிடம் எதிர்ப்பு அலைவீசுவதால் இடைத்தேர்தலை நடத்தினால், வெற்றி பெற இயலுமா? அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் மக்களிடம் எதிர்ப்பு அலைவீசுவதால் இடைத்தேர்தலை நடத்தினால், வெற்றி பெற இயலுமா என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் யோசிக்கிறார்கள். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 134 பேரில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியில் 122 பேர் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. அணியில் 11 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு […]
வறட்சி நிவாரணம் விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் – எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
வறட்சி நிவாரணம் விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் – எடப்பாடி பழனிச்சாமி பேட்டி வறட்சி நிவாரண தொகை விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். தண்ணீர் பிரச்சினை குறித்து பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்முறையாக பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- 2016 சட்டசபை தேர்தலில் புரட்சித்தலைவி ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். அது படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. தேர்தல் […]
மெரீனாவில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கைது
மெரீனாவில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கைது மெரீனாவில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்த எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். அவருடன் திமுக எம்எல்ஏக்களும் கைது செய்யப்பட்டனர். சட்டசபையில் இருந்து தாக்கி வெளியேற்றப்பட்ட எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மெரீனாவில் காந்தி சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். உடனடியாக பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது […]
மு.க. ஸ்டாலின் மீது தாக்குதல் சம்பவம் தி.மு.க.வினர் சாலை மறியல்- கல்வீச்சு
மு.க. ஸ்டாலின் மீது தாக்குதல் சம்பவம் தி.மு.க.வினர் சாலை மறியல்- கல்வீச்சு சட்டசபையில் மு.க. ஸ்டாலின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர் மெரினா காந்தி சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார். தி.மு.க.வினர் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், வெளியே வந்து நிருபர்களிடம் கூறும்போது, தன்னை காவலர்கள் தாக்கியதாக கூறினார். பின்னர் ஆளுநரை சந்தித்து இதுபற்றி முறையிட்டுள்ளார். அதன்பின் […]
மு.க. ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து மெரினாவில் உண்ணாவிரத போராட்டம்
மு.க. ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் மு.க. ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து மெரினா காந்தி சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் சபாநாயகர் அதை நிராகரித்துவிட்டார். இதனால் சபையில் […]





