தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் யாரும் எதிர்பாராத விதமாக தெலுங்கானா ஆளுநராக நேற்றையதினம் நியமிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக தமிழிசை வகித்து வந்த தமிழக பாஜக தலைவர் பதவி தமிழகத்தில் காலியாக உள்ளது. இந் நிலையில் பா.ஜ.கவின் தமிழக அடுத்த தலைவராக எச் ராஜா வா? அல்லது பொன் ராதா ? வருவார்கள் எனப்பேசப்படுகின்ற நிலையில் , அடுத்த தமிழக பாஜக தலைவராக நியமிக்க அதிக வாய்ப்பு கொண்டிருப்பது […]
தமிழ்நாடு செய்திகள்
அத்தி வரதர் வெளியில் வந்ததால் நல்ல மழை பெய்துள்ளது
காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவம் இன்று 38 வது நாளை எட்டியுள்ளது. நின்ற கோளத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் பலரும் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று பிரேமலதா விஜயகாந்த், அத்திவரை தரிசிக்க சென்றார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : அத்திவரதர் வெளியில் வந்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம் என்று தெரிவித்தார்.
அனைத்து சிறைகளிலும் சிசிடிவி கேமரா ! முதல்வர் அதிரடி
இன்றைய நவீன உலகில் எந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதோ..அந்த அளவுள்ள குற்றங்களும் குற்றவாளிகளும் பெருகியுள்ளது துரதிஷ்டவசமானது. அதனால் உலகில் அனைத்து இடங்களிலும் போலீஸ் பாதுகாவலுக்கு இருந்தாலும் கூட.. தற்போது அதற்கும் மேலாக கடவுள் கண் போலவும், மூன்றாவது கண்ணாகவும் இந்த சிசிடிவி கேமரா உள்ளது. எத்தையோ ,கொலை, கொள்ளை, திருட்டு, போன்ற சம்பவங்களில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க போலிஸுக்கு உதவியாகவும், குற்றசம்பவங்கள் நடக்காமல் மக்களைக் காக்கவும் இந்த சிசிடிவி கேமரா உதவிகரமாக […]
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல்!
தமிழ்நாட்டில் இன்று, இந்திய நாடாளுமன்றத்தின் 38 தொகுதிகளுக்கான தேர்தலும், 18 சட்டமன்றத் தொகுதிகளுகான இடைத்தேர்தலும் சற்று முன்னர் ஆரம்பமாகி நடந்து வருகிறது. இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்களிப்பு- 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில், 96 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. இங்கு, இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானது. தமிழ்நாட்டில் வேலூர் தவிர்ந்த ஏனைய 38 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இன்று காலை வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது. […]
பாராளுமன்ற தேர்தலில் வரிசையில் நின்று வாக்களித்த சீமான்!
லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மொத்தம் 95 தொகுதிகளில் நடைபெறுகிறது. இன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அரைமணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். அதேபோன்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். அவர்களின் மகன் விஜயபிரபாகரன் மற்றும் […]
தம்பியுடன் கோபமாக பேசிய சீமான் – வைரலாகும் ஆடியோ !
நேற்று முதல் சமூகவலைதளங்களில் சீமானும் அவருடையக் கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவரும் காரசாரமாகப் பேசிக்கொள்ளும் ஆடியோ ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. அதில் களத்தில் வேலைப் பார்க்கும் நபருக்கு சீட் கொடுக்க சொல்லி அந்த நபர் கேட்க அதற்குக் கோபமாக சீமான் பதிலளிக்கும் படி அந்த ஆடியோ உள்ளதால் அதை சமூக வலைதளங்களில் பரப்பி சீமானை விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த ஆடியோவில் ’ ஏய் இந்திராங்கிற பொண்ணுக்கு சீட் […]
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியில் இணைந்த பிரபல நடிகை!
நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக அரசியலில் இறங்கிவிட்டார். இளைஞர்கள், இளம் பெண்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அவரும் இவர்களை சந்தித்து பேசி வருகிறார். தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் அவர் சுற்று பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். அண்மைகாலமாக ஆளுங்கட்சி மீதும் எதிர்கட்சி மீது தன் எதிர்ப்புகளை வெளிப்படையாக பேசிவந்தார். அவருக்கான ஆதரவுகள் பெருகி வரும் வேளையில் பிரபல காமெடி நடிகை கோவை சரளா தன்னை கமல்ஹாசன் முன்னிலையில் […]
வாரிசுகளுக்கு சீட்டு வேணுமா ? – ஸ்டாலின்
திமுக தலைமையிலானக் கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு மக்கள் தேச மக்கள் முன்னேற்றக்கழகம்மற்றும் இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்டக் கட்சிகள் ஆகியக் கட்சிகள் அடங்கிய கூட்டணி உருவாகியுள்ளது. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு திமுக 20 தொகுதிகளில் நிற்கிறது. இதையடுத்து கூட்டணி உறுதியடைந்துள்ள நிலையில் இப்போது கட்சிகள் தங்களுக்கான வேட்பாளர் தேர்வில் மும்முரம் காட்டி வருகின்றனர். […]
பாக்கிஸ்தானை முற்றிலும் அழித்தொழியுங்கள்!! மறைந்த இராணுவ வீரரின் மனைவி
’பயங்கரவாதிகளின் வெறிச்செயலால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்ப நிலைமைகளை மனதில் கொண்டாவது அவர்களை முற்றிலும் அழித்தொழிக்கவேண்டும்’ என்று மறைந்த ராணுவ வீரர் சிவச்சந்திரனின் மனைவி காந்திமதி ஆவேசமாகப் பேசியுள்ளார். ’பயங்கரவாதிகளின் வெறிச்செயலால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்ப நிலைமைகளை மனதில் கொண்டாவது அவர்களை முற்றிலும் அழித்தொழிக்கவேண்டும்’ என்று மறைந்த ராணுவ வீரர் சிவச்சந்திரனின் மனைவி காந்திமதி ஆவேசமாகப் பேசியுள்ளார். காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி […]
பாகிஸ்தானை கதற விட்ட இந்தியா! சீறிப் பாயும் கவிஞர்
பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்களை வெடிகுண்டு வீசி அழித்துள்ள இந்திய விமானப்படை வீரர்களுக்கு கவிதை வாயிலாக பாராட்டு தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “போர்மீது விருப்பமில்லை. ஆனால், தீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே! அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார். முன்னதாக, இன்று அதிகாலை 3 மணியளவில் இந்தியாவின் 12 […]




