இன்று அதிகாலை மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதி செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் மன நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த வயது 65 பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
Head News
வெளிநாட்டு தூதுவர்களுடன் ரணில் விசேட கலந்துரையாடல்
இலங்கையில் 43 வருடங்களில் முதல்முறையாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு தூதர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். போதைப் பொருள் தொடர்பான குற்றம் சுமத்தப்பட்ட நான்கு பேரை தூக்கிலுடப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று பிரதமர் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். இந்த கலந்துரையாடலின்போது ஜனாதிபதியின் […]
யாழில் பெண்ணை தீ வைக்க முயற்சித்த நபர் !
யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் வீட்டுக்குள் தனித்திருந்த பெண் ஒருவரை தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால் நபர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயற்சித்துள்ளார். இந்நிலையில் பெண் கூச்சலிட்டதால் குறித்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 49 வயது குடும்பப் பெண்ணை , மதுபோதையில் இருந்த 36 வயதுடைய நபர் பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்த முயற்சித்த போது, நபரைத் தள்ளி வீழ்த்தி விட்டு பெண் அபயக்குரல் […]
முடிவில் மாற்றமில்லை மைத்திரி அதிரடி அறிவிப்பு
போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்றுவதில் தான் உறுதியாக உள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டு, நாட்டின் சுயாதீனத்தில் சர்வதேசத்தினர் தலையிட வேண்டாம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மேலும், ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னணியிலும் போதைப்பொருள் வர்த்தகர்களே இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “போதைப்பொருட்களை […]
இன்றைய ராசிபலன் 01.07.2019
மேஷம்: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனு பவம் உண்டாகும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். உற்சாகமான நாள். ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத் தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது […]
திருகோணமலையில் யுவதி சடலமாக மீட்பு
தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேம்காமம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரதிபுரம் பகுதியை சேர்ந்த கணேசபிள்ளை கார்த்திகா எனும் 16 வயது சிறுமியின் சடலமே நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட யுவதியின் சடலம் தொடர்பில் மூதூர் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு […]
இராணுவ அதிகாரிகளின் பதவியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள்!
இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரது பதவிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் உத்தரவின் பேரில் இராணுவ செயலகம் ஆகியவற்றில் பணிபுரியும் அதிகாரிகளின் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, இராணுவ தொண்டர் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே அவர் வகித்து வந்த, மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைத் தளபதி பதவியியையும் அவர் தொடரவுள்ளதாக […]
கிளிநொச்சியில் நடக்கும் அட்டூழியத்தின் உச்சம்
கிளிநொச்சி கல்லாறு பிரதேசத்தில் அளவுக்கடங்காமல் நடக்கும் சட்டவிரோத மண்ணகழ்வு தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இங்குள்ள வனம் அழிக்கப்பட்டு பாரிய அளவில் மண்ணகழ்வு இடம்பெற்று வருகின்றது. மண்ணகழ்வு இடம்பெற்று வரும் பகுதி வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான பகுதி. அதேவேளை, பறவைகள் சரணாலயமும் காணப்படுகின்றது. இந்த பகுதியில் சுமார் 5 அடிக்கு அதிகமான ஆழத்தில் தோண்டப்பட்டு மண்ணகழ்வு இடம்பெற்று வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. இந்த சட்டவிரோத மண்ணகழ்வு தொடர்பில் […]
இராட்சத சுறாவை பிடித்தவர் கதறுகிறார்
20 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் கையகப்படுத்தப்பட்டது: தானாக வந்து சிக்கியதற்கு இந்த தண்டனையா?… கதறுகிறார் புள்ளிசுறா பிடித்தவர் கிளிநொச்சி இரணைதீவு கடல் பரப்பில் அரியவகை புள்ளி சுறாவை வேட்டையாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளி நான்கு ஆட்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 13 இலட்சம் பெறுமதியான அவரது படகு, இயந்திரம், மற்றும் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் என்பன கடற்படையினரின் கட்டுபாட்டில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். புள்ளிசுறாவை வேட்டையாட […]
இன்றைய ராசிபலன் 30.06.2019
மேஷம்: இன்று பொருளாதார வளம் சீராக இருக்கும். அதே வேளையில் செலவும் அதிகரிக்கலாம். சிக்கனம் தேவை. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மனைவி வழியில் சிற்சில கருத்துவேறுபாடுகள் வரலாம். ஆனாலும் அது நொடிப் பொழுதில் சரியாகி விடும். ஆனால் உறவினர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்து வேறுபாடு வரலாம். அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருங்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5 ரிஷபம்: இன்று மனதில் நிம்மதியும் […]





