“எமது பிள்ளைகள் உயிரோடு உள்ளதாக இராணுவப் புலானாய்வாளர்கள் தெரியப்படுத்தியபோதும் ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இதுவரை எமது பிள்ளைகள் விடுவிக்கப்படவில்லை. படையினரிடம் உயிருடன் ஒப்படைத்த எமது பிள்ளைகள் மாத்திரமே எமக்கு வேண்டும்.” – இவ்வாறு கதறி அழுகின்றனர் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுவிப்பையும் வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளே இவ்வாறு கதறி அழுகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் […]
முக்கிய செய்திகள்
Head News
ஆல்பஸ் மலையின்மீது சாகசப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிய இத்தாலி நாட்டின் பிரபல சைக்கிள் பந்தய வீரர் வேன் விபத்தில் பலி
ஆல்பஸ் மலையின்மீது சாகசப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிய இத்தாலி நாட்டின் பிரபல சைக்கிள் பந்தய வீரர் வேன் விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டின் பிரபல சைக்கிள் பந்தய குழுவான அஸ்டானா குழுவில் சைக்கிள் பந்தய வீரராக திகழ்ந்தவர், மைக்கேல் ஸ்கார்போனி(37). உள்நாட்டில் நடைபெற்ற பல்வேறு சைக்கிள் பந்தயங்களில் பங்கேற்றுள்ள இவர் அன்கோனா மாகாணத்தின் தென்பகுதியில் உள்ள பிலோட்ரானோ நகரில் வசித்து வந்தார். […]
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு – டி.டி.வி.தினகரன் டெல்லி குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசில் ஆஜராகி விளக்கம்
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக டி.டி.வி.தினகரன் இன்று டெல்லி குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை தலைமை தேர்தல் கமிஷன் முடக்கி வைத்துள்ளது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் இரட்டை இலை சின்னம் இருந்தால்தான் அதிக வெற்றியை பெற முடியும் என்று அ.தி.மு.க.வினர் கருதுகிறார்கள். இந்த நிலையில் […]
டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் – 40 வது நாளான இன்று சிறுநீரை குடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று சிறுநீரை குடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி, காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி. அய்யாக்கண்ணு தலைமையில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய இணை […]
இறக்காமம் – மாயக்கல்லி பகுதிக்கு நுழைய இடைக்காலத் தடை : அம்பாறை நீதிமன்றம் உத்தரவு
கடந்த 3 தினங்களாக இறக்காமம் – மாயக்கல்லி பகுதியில் இடம்பெற்று வரும் இனமுறுகலை அடுத்து இப்பிரதேசத்தில் எவரும் நுழையாதவாறு மே மாதம் 17ஆம் திகதி வரை அம்பாறை மேலதிக மாவட்ட நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறி மாயல்கல்லி மலையடிவாரத்தில் பள்ளியான் செய்னுலாப்தீன் என்பவருக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரைக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பமான வேளையில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினருக்கும் இறக்காமம் பிரதேச மக்களுக்கும் இடையில் […]
பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் – புதுவையில் வசிக்கும் பிரெஞ்சு குடிமக்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு
பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில் புதுச்சேரியில் வசிக்கும் பிரான்ஸ் குடிமக்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வசிக்கும் பிரான்ஸ் நாட்டு குடிமக்கள் பிரான்ஸ் அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் வாக்களிக்க அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசம், அதன் பிராந்தியங்களான […]
உலகின் மிக வயதான ராணி லிசபெத்துக்கு 91 வயது
உலகின் மிக வயதான ராணி எலிசபெத்துக்கு 91ஆவது வயது பிறந்தது. அதையொட்டி பக்கிங்காம் அரண்மனையில் தனது பிறந்த கேக் வெட்டி குடும்பத்தினருடன் கோலாகலமாக கொண்டாடினார். இங்கிலாந்து ராணி எலிசபெத் கடந்த 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி லண்டனில் பிறந்தார். இவரது முழுப் பெயர் எலிசபெத் அலெக்சாண்ட்ரா மேரி. இவரது தந்தை மன்னர் 4ஆம் ஜார்ஜ் மறைவுக்கு பிறகு 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் திகதி இங்கிலாந்து ராணியாக முடி […]
பலாலி விமான நிலையத்தை சுற்றியுள்ள 4 ஆயிரம் ஏக்கர் காணி கூட்டமைப்பு – படையினர் இடையே பேச்சு இணக்கமின்றி முடிவு
பலாலி விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 4 ஆயிரம் ஏக்கர் காணிகள் தொடர்பில், பாதுகாப்புத் தரப்பினருடனான நேற்றைய கூட்டத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்தக் காணி தொடர்பில் உயர்மட்டப் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புத் தரப்பினர், அரச அதிகாரிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இடையிலான முத்தரப்புச் சந்திப்பு, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில், பலாலி விமான நிலையம் மற்றும் அனைச் சுற்றியுள்ள […]
முள்ளிக்குளம் மக்களை சந்தித்த வடமாகாண ஆளுனர்
முள்ளிக்குளம் மக்களை நேரடியாக சந்தித்து போராட்டத்துக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தருவேன் என்று வடமாகாண ஆளுனர் உறுதியளித்துள்ளார். மன்னார் ஆயர் இல்லத்தின் அழைப்பை ஏற்று மன்னாருக்கு வருகை தந்த வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே நேற்று மாலை நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற முள்ளிக்குளம் மக்களை சந்தித்து நீண்ட நேரம் உரையாடியுள்ளார். நேற்று மாலை 5.30 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு வருகை தந்த வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே […]
தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் வேண்டுமென்றே இழுத்தடிப்பு; எம்.ஏ.சுமந்திரன்
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் துரிதமாக விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் கோரவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். புனர்வாழ்வு மூலமாவது தங்களை விடுதலை செய்யுமாறு தமிழ் அரசியல் கைதிகள் தம்மிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் நேற்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு, அரசாங்கத்திடம் விடுதலை கோரும் தமிழ் […]





