முக்கிய செய்திகள்

Head News

இலங்கைக்குள் மீண்டும் இந்தியப்படை நுழையும்! – இப்படிக் கூறுகின்றார் சரத் வீரசேகர

முஸ்லிம் தீவிரவாதிகளை ஒழிப்பது என்ற போர்வையில் இந்திய இராணுவம் மீண்டும் இலங்கைக்குள் நுழையும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “எரிபொருள் பாவனையில் இந்தியா உலகின் மூன்றாமிடத்தில் உள்ளது. இந்த எரிபொருளை அடிப்படையாக வைத்தே அந்த நாடு இலங்கைக்குள் நுழைந்து முக்கிய பகுதிகளைக் கைப்பற்றுவதற்கு முற்படுகின்றது. திருகோணமலையில் இருக்கின்ற 99 எண்ணெய்க் குதங்களையும் இலங்கை இந்தியாவுக்குக் கொடுத்துவிட்டது. […]

அ.தி.மு.க. அம்மா அணியுடன் இணைவதா? வேண்டாமா? – ஓ.பன்னீர் செல்வம் இன்று இறுதிகட்ட ஆலோசனை

அ.தி.மு.க. அம்மா அணியுடன் இணைவதா? வேண்டாமா? என்று ஓ.பன்னீர்செல்வம் இன்று இறுதிகட்ட ஆலோசனை நடத்திவருகிறார். மாலையில் இறுதிமுடிவு தொடர்பான அறிவிப்பை ஓ.பன்னீர் செல்வம் வெளியிடுகிறார். அ.தி.மு.க. அம்மா அணியுடன் இணைவதா? வேண்டாமா? என்று ஓ.பன்னீர்செல்வம் இன்று இறுதிகட்ட ஆலோசனை நடத்துகிறார். பிளவுபட்டு கிடக்கும் அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் தனித்தனியாக கூடி ஆலோசனை நடத்தி […]

முள்ளிக்குளம் மக்கள் காணிகள் விடுவிக்கப்பட்டன

கடற்படையினர் வசமிருந்த முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு காணிகள் இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கடற்படையின் கட்டளைத் தளபதி தலைமையில் முள்ளிக்குளம் கடற்படை முகாமில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற காணி விடுவிப்பு குறித்த உயர்மட்ட கலந்துரையாடலை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “கடந்த வாரம் […]

முஸ்லிம்களுக்கு விமோசனம் கிடைக்கப்போவதில்லை

முஸ்லிம்களுக்கு ஒருபோதும் இந்த ஆட்சியில் விமோசனம் கிடைக்கப்போவதில்லை இன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார். மே தின நிகழ்வையொட்டி அதன் ஏற்பாடுகள் தொடர்பில் அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தற்போது நாட்டு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், நான் 10 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்தேன் எனது காலத்தில் காலத்தில் இனவாதம் […]

அ.தி.மு.க. அம்மா அணியுடன் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி இணையக்கூடாது: ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

அ.தி.மு.க. அம்மா அணியுடன் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி இணையக்கூடாது, நாம் தனித்தே செயல்பட்டு நம்முடைய பலத்தை நிரூபிக்க வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ.செம்மலை தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி, முன்னாள் எம்.பி. […]

ஜீ.எஸ்.பி. இலங்கைக்கு மீண்டும் கிடைக்குமா? – இன்று வாக்கெடுப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி வரிச்சலுகையான ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில், மிக மோசமான மனித உரிமை மீறல்களால் இழந்த இவ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்களை சந்தித்து அரசாங்கம் மேற்கொண்டுவரும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் குறித்து தெளிவூட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் […]

வடக்கு, கிழக்கில் உலகத் தரம்வாய்ந்த மூன்று வீதிகளை அமைக்க இந்தியா இணக்கம்

சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உலகத் தரம்வாய்ந்த வீதி உட்கட்டமைப்பு அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்தியாவின் மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நடத்திய பேச்சுக்களின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுக்களின் போது, மூன்று பிரதான வீதி அமைப்புகளை அபிவிருத்தி செய்து தருமாறு […]

பூரண ஹார்த்தாலால் இன்று முடங்கியது தமிழர் தாயகம்!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று பூரண ஹர்த்தால் போராட்டம் நடத்தப்படுகின்றது. இந்தப் போராட்டத்துக்குப் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தங்கள் ஏகோபித்த ஆதரவைத் தெரிவித்துள்ளன. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கிலும், கிழக்கிலும் இரவு பகலாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்களில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டங்கள் […]

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே? – வடக்கு, கிழக்கு ஹர்த்தாலுக்கு வலுக்கின்றது பேராதரவு!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலியுறுத்தி தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு சிவில் அமைப்புகள், பொது அமைப்புகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் ஆகியன தமது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன. அத்துடன், ஏனைய சகல தரப்புகளையும் இந்தப் போராட்டத்துக்கு ஒத்துழைக்குமாறும் அவை கோரியுள்ளன. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கடந்த இரண்டு மாத காலத்துக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற […]

சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்புடன் தொடர்புடைய புதிய பதவி

சிறிலங்காவின் முப்படைகளுடனும் இணைந்து செயற்படும் வகையில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு புதியதொரு பதவியை உருவாக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியின் இந்த யோசனைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதாக, அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடிய வகையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள பதவியை பீல்ட் மார்ஷல் சரத் […]