முக்கிய செய்திகள்

Head News

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று பணிப் புறக்கணிப்பு

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். எனினும் இந்த வேலைநிறுத்தம் காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகளில் எந்தப் பாதிப்புக்களும் இடம்பெறாது எனவும், மகப்பேற்று மற்றும் சிறுவர் வைத்தியசாலைகள் வழமை போல் இயங்குமென்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை இவ்வேலை நிறுத்தம் மகரகம புற்றுநோய் வைத்தியசாலை, அனைத்து […]

131 விகாரைகள் வடக்கில்; 61 விகாரைகள் மட்டுமே பதிவு

வடக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களத்துக்குரிய 131 விகாரைகள் இருந்தபோதிலும் அவற்றுள் 61 விகாரைகள் மாத்திரமே பௌத்த அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி பதில் நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களத்துக்குரிய விகாரைகள் […]

சுமணன் படுகொலை விவகாரம்: பொலிஸ் அதிகாரிகளுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

யாழ்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஸ்ரீஸ்கந்தராஜா சுமணன் என்ற இளைஞன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில், ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிபதி எம்.இளஞ்செழியன் இத் தீர்ப்பை வழங்கியுள்ளார். அத்தோடு, ஒவ்வொருவருக்கும் தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி இளங்செழியன், அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் ஒரு வருட சிறைத்தண்டனையை […]

பாதிக்கப்பட்ட மக்களை ஐ.நா. கண்டுகொள்வதில்லை: சி.வி. விசனம்

“மத்திய அரசுடன் சிறந்த உறவினை பேணிவரும் ஐக்கிய நாடுகள் சபை, போரினால் பாதிக்கப்பட்ட எம்முடன் மந்தமான உறவை பேணிவருவது மட்டுமன்றி, பல விடயங்கள் தொடர்பில் எங்களுடன் கலந்துரையாடாமல் நடவடிக்கைகளை மேற்கொள்வது விசனத்தை ஏற்படுத்தியுள்ளது” என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் ஐ.நா. அபிவிருத்தி செயற்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பணிப்பாளர் கனி விக்னராஜாவிற்கும் இடையே முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. […]

இந்தியத் தூதரக அதிகாரிகள் ஊடக சுதந்திரத்தில் தலையீடு! – கூட்டமைப்பு எம்.பி. சரவணபவன் காட்டம்

“ஊடக சுதந்திரத்தில் இந்தியத் தூதரக அதிகாரிகள் தலையிடும் ஓர் அவல நிலை இன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ளது.” – இவ்வாறு குற்றஞ்சாட்டினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினரும் ‘உதயன்’ – ‘சுடர் ஒளி’ குழுமத் தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவன். ‘”இந்தியத்துணைதூதரகம் மிக மோசமாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்தியாவுக்கு எதிரானதாக எந்தக் கருத்தும் எமது பத்திரிகையில் வரக்கூடாது என்பதை நிலைநிறுத்தி அவர்கள் செயற்படுகிறார்கள். தமது தூதரகத்திற்குச் செல்பவர்களிடம் […]

தமிழ் அரசியல் கட்சிகள் இனவாதம் பேசுகின்றன : அதனை உடனடியாக தடுக்க வேண்டும் : கருணா குற்றச்சாட்டு

தமிழ் அரசியல் கட்சிகள் இனவாதம் பேசி நாட்டின் அமைதியை குழப்ப முயற்சிப்பதாகவும் அதனை உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கூட்டு எதிரணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ் இனவாத கட்சிகளை விரட்டியடிக்கவே தாம் புதிய கட்சியை ஆரம்பித்ததாகவும் அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் […]

‘சூழல் புனிதமானது’ நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி தலைமையில் கண்டியில் ஆரம்பம்!

சர்வதேச வெசாக் விழாவினை முன்னிட்டு ‘சூழல் புனிதமானது’ என்ற நிகழ்ச்சித்திட்டம் கண்டி தலதா மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்றையதினம் (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட மேற்படி திட்டத்தின் ஆரம்ப நடவடிக்கையாக கெட்டம்பே விளையாட்டு மைதானம் சுத்திகரிக்கப்பட்டது. ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டார். அமைச்சர்களான மஹிந்த அமரவீர, எஸ்.பீ. திஸாநாயக்க, பிரதி அமைச்சர் […]

அபிவிருத்தியை நிறுத்த மஹிந்த முயன்றால் சும்மா இருக்க மாட்டோம் – ரணில் எச்சரிக்கை

அபிவிருத்தியை நிறுத்த மஹிந்த முயன்றால் சும்மா இருக்க மாட்டோம்என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பொரள்ளை கெம்பல் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் ஆட்சிமாற்றம் பின்னர் நாட்டின் வேலையின்னை மற்றும் கடன் சுமையில் இருந்து விடுப்பட ஒரு செயற்றிட்டத்தை அமைக்க ஒரு வருட காலத்தை கோரினோம். காரணம் முன்னாள் […]

போராட்டங்களுக்கு தீர்வாக மே தினம் அமையவேண்டும்: சம்பந்தன்

”தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டம், வெற்றி மற்றும் அவர்கள் முகம்கொடுத்து வருகின்ற சவால்கள் என்பவற்றினை முன்னிலைப்படுத்தி அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரு மேடையாகவும், தொழிலாளர்களின் முயற்சிகளை நினைவுகூருவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் தமது மே தினக் கொண்டாட்டங்களை அமைத்துக் கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்” என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த […]

மஹிந்தவின் உறவினர்கள் மைத்திரியுடன் இரகசியம்! – அரசியல் அரங்கில் வெகுவிரைவில் அதிரடி மாற்றங்கள் என்கிறார் எஸ்.பி.

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினர்கள் பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இரகசியமாகப் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர்.” – இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். இதனால் அரசியல் அரங்கில் வெகுவிரைவில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மஹிந்த அணியின் மே தினக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர் என்று கூறப்படுகின்றமை தொடர்பில் வினவியபோதே அவர் […]