தாக்குதல்தாரிகள் மூவர் சுட்டுக்கொலை நகரமெங்கும் உச்சக்கட்டப் பாதுகாப்பு உலகத் தலைவர்கள் கடும் கண்டனம் பிரிட்டனின் தலைநகரான லண்டனில் நேற்றுமுன்தினம் இரவும், நேற்று அதிகாலையும் நடத்தப்பட்டுள்ள தொடர் தீவிரவாதத் தாக்குதல்களால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 48இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதேவேளை, தாக்குதல்களை மேற்கொண்ட மூவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மூன்று மாத காலப்பகுதியில் பிரிட்டனில் இடம்பெற்றுள்ள மூன்றாவது தாக்குதல் இதுவென்பதுடன் பொதுத்தேர்தலிற்கு சில நாட்களுக்கு முன்னர் […]
முக்கிய செய்திகள்
Head News
தமிழ் அரசியல் கைதிகளை கைவிடுவதானது தமிழர் அரசியலை கைவிடுவதற்கு சமனாகும்!
தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனையுமின்றி உடன் விடுதலை செய்யுமாறு இலங்கை அரசுக்கு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமென தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு அரசியல் நோக்கங்களுக்காக மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று வெள்ளிக்கிழமை பார்வையிட்டு அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்தனர். இந்தச் சந்திப்பு […]
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொலைசெய்யப்பட்டிருக்கலாம்! – சந்திரிகா அம்மையார் கூறுகின்றார்
“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உண்மையிலேயே உயிருடன் இருக்கின்றார்களா அல்லது உயிரிழந்துவிட்டார்களா என்பதைத் தேடிப் பார்க்கவேண்டும். எனக்குத் தெரிந்தவரையில் அப்படி எவரையும் முகாம்களில் மறைத்து வைக்கவில்லை. அப்போது ராஜபக்ஷவின் ஆட்சியிலிருந்த இராணுவத்தின் பழக்கத்திற்கேற்ப அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுக் கொலைசெய்யப்பட்டிருக்கலாம். அது எனக்குத் தெரியாது. ஆனால், அப்போது அவர்களைப் பொறுப்பேற்றிருந்தால் யாவரையும் கொலை செய்வார்களே அன்றி, இவ்வளவு வருடங்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கமாட்டார்கள்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு […]
மத வெறுப்புத் தாக்குதல்களை நடத்துவோருக்குத் தண்டனை!
மத வெறுப்புத் தாக்குதல்களை நடத்துவோருக்குத் தண்டனை! – அரசிடம் வலியுறுத்துகின்றது ஐரோப்பிய ஒன்றியம் முஸ்லிம்கள் மீதான மத – இன வெறுப்புத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை அரசும் – பொலிஸாரும் உறுதிசெய்ய வேண்டும் என்று, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் மாங் தெரிவித்தார். தெவட்டகஹா பள்ளிவாசலுக்கு, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், ஆஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து, நோர்வே, தென்னாபிரிக்கா, சுவிர்சர்லாந்து தூதரகப் […]
ஈழத்தமிழரின் அறிவுக் களஞ்சியம் தீயுடன் சங்கமமாகி 36 ஆண்டுகள்!
ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ். பொதுநூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் அறிவுக் களஞ்சியமான யாழ்ப்பாணப் பொதுநூலகம் சிங்கள வன்முறைக் கும்பல்களினால் மூட்டப்பட்ட செந்தணலில் பொசுங்கி நீறாகிப்போனது. இந்தச் துயரச் சம்பவத்தைத் தாங்கமுடியாது யாழ்ப்பாண சம்பத்திரிசியார் கல்லூரி மாடியில் இருந்து அவதானித்த நடமாடும் பல்கலைக்கழகமாகக் கருதப்பட்ட பன்மொழிப் புலவர் வண.தாவீது அடிகளார் […]
பேரனர்த்தம்: 194 சடலங்கள் இதுவரை மீட்பு! 99 பேரைக் காணவில்லை!!
இலங்கையில் கடந்த வாரம் அடைமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் பெருமளவான வாகனங்களும், உடமைகளும் அழிவடைந்துள்ளன. ஆயிரத்து 402 வீடுகள் முழுமையாகவும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது. 99 பேர் காணாமல்போயுள்ளனர். இடம்பெயர்ந்துள்ள 20 ஆயிரத்து 907 குடும்பங்களைச் சேர்ந்த 83 ஆயிரத்து 224 பேர் […]
தொடர்கின்றது பேரவலம்! – பலியானோர் எண்ணிக்கை 177 ஆக உயர்வு; 109 பேர் மாயம்
இலங்கையில் அடைமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 177 ஆக அதிகரித்துள்ளது என்றும், 109 பேர் காணாமல்போயுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 392 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 57 ஆயிரத்து 505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 18 ஆயிரத்து 612 குடும்பங்களைச் சேர்ந்த 74 ஆயிரத்து 928 பேர் 366 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் […]
இயற்கைப் பேரழிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு! 111 பேர் மாயம்!! 2,035 வீடுகள் சேதம்!!! – தொடர்கிறது மீட்புப்பணி
நாட்டின் தெற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கொட்டிய கடும் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி மரணமானோரின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் இறுதியாக வெளியிட்ட அறிக்கையில், 111 பேர் காணாமல்போயுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்தங்களில் 95 பேர் காயமடைந்துள்ளனர். 24 ஆயிரத்து 735 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 218 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். […]
இயற்கையின் கோரத்தாண்டவத்தால் 100 பேர் பலி; .101 பேர் மாயம்!
* ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு; நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்* மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு; மீட்புப் பணியும் தொடர்கிறது * பாடசாலைகளுக்கு விடுமுறை; அரச ஊழியரின் விடுமுறை இரத்து * ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு; பல இடங்களில் வெள்ளம் * அவசர நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் பணிப்பு அடைமழையால் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் […]
ரவிக்கு முத்தமிட்டு மகிழ்ந்த மங்கள!
புதிய அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, நேற்று தனது புதிய அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் தற்போதைய நிதி அமைச்சருமான மங்கள சமரவீரவும் கலந்துகொண்டார். இந்நிலையில், இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட ரவிக்கு, மங்களவின் வாழ்த்துக்கள் முத்தமாகப் போய்ச் சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.





