முக்கிய செய்திகள்

Head News

கிளிநொச்சியில் திருவள்ளுவர் சிலை திறப்பு

கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முதல்வருக்கு ஆதரவாக குடா நாட்டில் ஹர்த்தால்

வட. மாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வட. மாகாணம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மருந்தகங்கள் மற்றும் சில உணவகங்கள் தவிர்ந்து ஏனைய வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, வட. மாகாணத்தில் முதலமைச்சருக்கு ஆதரவு வெளிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, போக்குவரத்தும் முழுமையாக தடைப்பட்டுள்ளதால் தூர பிரதேசங்களுக்கு பயணிக்கும் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சருக்கு எதிராக […]

என்னை பதவியிலிருந்து நீக்கும் சதித்திட்டம் கொழும்பிலேயே தீட்டப்பட்டது : சி.வி

என்னை பதவியிலிருந்து நீக்கும் சதித்திட்டம் கொழும்பிலேயே தீட்டப்பட்டதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். வடமாகாண முதலமைச்சரை பதவியிலிருந்து அகற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிக்கும் வகையிலும் இன்று குடா நாட்டில் கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது. இந்த பேரணி முதலமைச்சரின் இல்லத்தை அடைந்த போது பேரணி முன்னிலையில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். தான் வடமாகாண முதலமைச்சர் பதிவியில் நீடிக்க போவதில்லை என்பதை அரசாங்கத்தின் […]

பெரும்பான்மையை நிரூபிக்குமாறு சி.வி.க்கு அறிவுறுத்தல்

வடக்கு மாகாண சபையில் தமது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே அறிவுறுத்தல் விடுத்துள்ளார். வடக்கு முதல்வருக்கு எதிராக 22 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஆளுநரிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சரிடம் வடக்கு ஆளுநர் இவ் அறிவுறுத்தலை முன்வைத்துள்ளார். வடக்கின் அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், இருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள […]

முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – ஆளுனரிடம் கையளிப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்றிரவு வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான 16 மாகாணசபை உறுப்பினர்கள் வட மாகாண ஆளுனரை நேற்றிரவு சந்தித்தனர். அமைச்சர்கள் குருகுலராசா, டெனீஸ்வரன், சத்தியலிங்கம் ஆகியோரும் ஆளுனரைச் சந்தித்திருந்தனர். எனினும், அமைச்சர் ஐங்கரநேசன் இதில் பங்கேற்கவில்லை. இதன்போதே, வடக்கு மாகாண முதலமைச்சர் மீதான நம்பிக்கை அற்று விட்டதாக கூறியும் அவரை மாற்றக் கோரியும், வடக்கு […]

நியாயத்தைப் பெறுவதில் தமிழர்களுக்கு நெருக்கடி! – ஜெனிவாவில் அறிக்கை முன்வைப்பு

“நீதியை வழங்குதல் மற்றும் பொலிஸ் சேவையில் சிறுபான்மை இனங்களுக்குச் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்படாமை ஆகியன இலங்கையின் நீதிக் கட்டமைப்பில் பிரச்சினையை ஏற்படுத்துகின்றன. நியாயத்தைப் பெற்றுக்கொள்வதில் தமிழ் மக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.” – இவ்வாறு  ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு முன்வைத்த அறிக்கையில் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு நிபுணர் மோனிகா பின்டோ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 35ஆவது அமர்வு ஜெனிவாவில் […]

முஸ்லிம்கள் மீதான தாக்குதலின் சூத்திரதாரிகளை எமக்குத் தெரியும்! – ஹக்கீம் தெரிவிப்பு

“முஸ்லிம்கள் மீது இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தாக்குதல்கள் எங்கிருந்து வருகின்றன என்று எமக்குத் தெரியும். ஆனால், அவை வெளியில் சொல்லமுடியாத அளவுக்குப் பாரதூரமானவை.” – இவ்வாறு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “மஹிந்தவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் உச்சத்தில் இருந்ததாலேயே அவரது ஆட்சி கவிழ்ந்தது. தமிழ்  முஸ்லிம் மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய ஆட்சியாக அந்த ஆட்சி இருக்கவில்லை […]

இனவாதம் ஊடாக் சமஷ்டியை நிறுவ நல்லாட்சி முயற்சியாம்! – விமலின் கண்டுபிடிப்பு இது 

“முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதச் செயற்பாடுகளின் ஊடாக அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், சமஷ்டி தீர்வை உள்ளடக்கிய அரசமைப்பை நிறைவேற்றிக்கொள்வதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “நாடு முழுவதும் இன்று முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதச் செய்ற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதை வெறுமனே ஓர் இனவாதச் செயற்பாடாகப் பார்க்கமுடியாது. இதன்பின்னால் பெரும் அரசியல் நிகழ்ச்சி நிரலொன்று இருக்கின்றது. […]

மைத்திரி மீது மஹிந்த அணி கடுகளவேனும் விசுவாசமில்லை! – நாமல் கூறுகின்றார் 

“நாட்டின் ஜனாதிபதி என்ற அடிப்படையில் மைத்திரி மீது எமக்கு மதிப்பு உண்டே தவிர, அவர் மீது எமக்குக் கடுகளவேனும் விசுவாசம் இல்லை. இதனால்தான் மஹிந்த அணியால் அவரின் தலைமையை ஏற்று அவருடன் இணையமுடியாமல் உள்ளது.”  – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “எம்மைச் சிறையில் அடைத்ததையும் பொருட்படுத்தாது  எம்மை அமைப்பாளர் பதவியிலிருந்து […]

இன, மத கலவரக்காரர்களை அடக்க விசேட அதிரடிப் படை களமிறக்கம்!

இலங்கையில் இன, மத கலவரங்களைத் தூண்டுபவர்களையும், அக்கலவரங்களை நடத்துபவர்களையும் கைதுசெய்து சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் பொறுப்பு விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. “நாளாந்தம் அதிகரித்துவரும் இத்தகைய இனக் கலவரங்களால் நாட்டின் அமைதி குலைக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவமும் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது விசேட அதிரடிப்படையினரிடமும் கலவரங்களை அடக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை முதல் நாடுமுழுவதிலும் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது” என்று பொலிஸ் […]