முக்கிய செய்திகள்

Head News

கிழக்கின் புதிய ஆளுநராக அதாவுல்லா?

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.எல்.எம். அதாவுல்லா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலராக கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ நாளை செவ்வாய்க்கிழமை பதவியேற்கவுள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதிலிருந்து அவரது செயலாளராக பி.பி.அபயகோன் பதவி வகித்து வந்தார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியிலிருந்து விலகினார். இதையடுத்தே, இந்தப் பதவியை ஒஸ்ரின் பெர்னாண்டோ […]

30 வருடப் போரை விட இனவாதமே கொடியது! – அமைச்சர் சந்திம வீரக்கொடி எச்சரிக்கை

“போரால் இந்த நாடு 30 வருடங்கள் மாத்திரம்தான் துன்பத்தை அனுபவித்தது. ஆனால், இனவாதத்தைத் தூண்டினால் 100 வருடங்கள் துன்பத்தை அனுபவிக்கவேண்டிவரும். பிறக்கப்போகும் குழந்தைகளைக்கூட இந்த ஆபத்து விட்டுவைக்காது.” – இவ்வாறு அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “போர் காரணமாக நாம் உயிர்களை மாத்திரம் இழக்கவில்லை. பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தையும் இழந்தோம். இனங்களிடையே நல்லுறவை இழந்தோம். அந்தப் போரை 30 வருடங்களுக்குப் பின் மிகவும் […]

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழகத்தின் உதவி அவசியம்: சுரேஷ்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஈழ மக்கள், தமிழகம் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஆகியோர் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அவர், அங்கு பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். குறித்த சந்திப்புகளின் போது, தற்போதைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளன. […]

விக்னேஸ்வரன் தன்னிச்சையாக செயற்படுகிறார் : சுமந்திரன் குற்றச்சாட்டு

வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றார் என்பதற்கு புதிய அமைச்சர்களின் நியமனம் சிறந்த சான்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரினால் வடக்கு மாகாணத்திற்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “முதலமைச்சர் இலங்கைத் தமிழரசு கட்சியுடன் ஆலோசிக்காமல் செயற்படுவதாக முதலமைச்சர் சி.வி.க்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எழுதிய இரண்டாவது கடிதத்தில் […]

சர்வதேசத்துக்கு ஆபாச காணொளி விற்பனை செய்யும் நோக்கிலேயே வித்தியா படுகொலை

சர்வதேசத்துக்கு ஆபாச காணொளி விற்பனை செய்யும் நோக்கிலேயே யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்கொடுமையின் பின்னர் கொல்லப்பட்டார் என்று பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா தெரிவித்தார். இந்தப் படுகொலை விசாரணைகளை 7 நாட்களுக்குள் முடிவுறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். வித்தியா கூட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் சாட்சியப் பதிவு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நேற்று ஆரம்பமானது. ட்ரயல் அட் பார் […]

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அமைச்சு மீதும் விசாரணை வேண்டும் : பிரேரணை சமர்ப்பிப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அமைச்சு உள்ளிட்ட 5 அமைச்சுக்கள், திணைக்களங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தெரிவுக் குழுவை அமைத்து விசாரித்து, விசாரணை அறிக்கையை மாகாண சபைக்குச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கோரும் பிரேரணை அடுத்த அமர்வில் எடுத்துக்கொள்வதற்காகப் பேரவைச் செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மீன்பிடி மற்றும் சுகாதார அமைச்சுகள் மீது மாத்திரம் விசாரணை நடத்துவதற்கு 4 பேரைக் கொண்ட […]

இரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரத்தில் தீர்வு : பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உறுதி

பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிளிநொச்சி இரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரத்துக்குள் தீர்வை பெற்றுத்தருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன உறுதியளித்துள்ளார். கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இரணைமாதா நகரில் பேரராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுடன் கலந்துரையாடினார். ஜனாதிபதியே நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக உள்ளார். என்னாள் இந்த விடயத்தில் உடனடியாக தீர்வை வழங்க முடியாது. இரண்டு வாரங்களுக்குள் தீர்வை […]

வடக்கின் புதிய அமைச்சர்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் பேச்சு

வடக்கு மாகாணத்தில் வெற்றிடமாகியுள்ள இரண்டு அமைச்சுக்களுக்கும் புதியவர்களை நியமிப்பது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் பதவி விலகியுள்ள அமைச்சர்களான த.குருகுலராசா மற்றும் பொ.ஐங்கரநேகசன் ஆகியோரின் அமைச்சுக்களான, முறையே கல்வியமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியவற்றின் செயற்பாடுகளை முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், குறித்த அமைச்சுக்களுக்கு உரியவர்களை நியமிப்பது தொடர்பாக விண்ணப்பங்கள் கிடைத்து வருவதாகவும், […]

மயிலிட்டி துறைமுகத்தை விடுவிக்க தீர்மானம்

யாழ். வலிகாமம் வடக்கின் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் காணப்படும் மயிலிட்டி துறைமுகத்தை விடுவிப்பதற்கு படையினர் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி குறித்த துறைமுகம் மற்றும் அதனை அண்டிய சில காணிகளை விடுவிப்பதற்கு படைத்தரப்பு இணங்கியுள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கை வகித்து வந்த மயலிட்டி துறைமுகமானது, கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக படையினர் வசமிருந்தது. குறித்த துறைமுகத்தையும் அதனை அண்டியுள்ள காணிகளையும் விடுவிக்கும் பட்சத்தில், அம் […]

சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. அழுத்தம் கொடுக்க வலியுறுத்தல்

யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென ஐ.நா. கூட்டத்தொடரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த 17 வயதுடைய சுந்தரராஜன் ப்ரெட்ரிக் என்ற ஈழத்து இளைஞன் இதனை வலியுறுத்தியுள்ளார். நீதியை நிலைநாட்டுவதற்கான உறுதிப்பாடு இலங்கை அரசாங்கத்திடம் இல்லையென குறிப்பிட்ட குறித்த இளைஞன், […]