முக்கிய செய்திகள்

Head News

டெனீஸ்வரனைப் பதவி நீக்க ரெலோவோ, வடக்கு முதல்வரோ என்னுடன் ஆலோசிக்கவில்லை! – சம்பந்தன் தெரிவிப்பு 

“வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரனைப் பதவிநீக்குவதற்கான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ரெலோவோ அல்லது வடக்கு மாகாண முதலமைச்சரோ என்னுடன் கலந்தாலோசிக்கவில்லை.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ரெலோ அமைப்பு வடக்கு மாகாண முதலமைச்சருக்குக் கடந்த 13ஆம் திகதி கடிதம் அனுப்பியிருந்தது. தமது கட்சி சார்பான  தங்கள் அமைச்சரவையிலுள்ள பா.டெனீஸ்வரனை […]

எம்.கே.சிவாஜிலிங்கம்

டெனீஸ்வரனுக்குப் பதிலாக விந்தனா? சிவாஜிலிங்கமா? – ரெலோவுக்குள் குழப்பம்

வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனுக்குப் பதிலாக ரெலோவின் சார்பில் அமைச்சரவைக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தை நியமிப்பதற்கு அந்தக் கட்சிக்குள்ளேயேஎதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதனால் அந்தக் கட்சியினுள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வடக்கு மாகாண அமைச்சரவையில் ரெலோவின் சார்பில், மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பா.டெனீஸ்வரன் 2013ஆம் ஆண்டு போக்குவரத்து, மீன்பிடி, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார். வடக்கு மாகாண சபையில் அண்மையில் எழுந்த சர்ச்சையில், […]

டெனிஸ்வரனிடமுள்ள அமைச்சுப் பதவியை விந்தனுக்கு வழங்க டெலோவின் அரசியல் உயர்பீடம் முடிவு

வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தை வட மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிப கிராம அபிவிருத்தி மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராக நியமிக்க டெலோவின் உயர் பீடம் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்குப் பரிந்துரைக்கவுள்ளது. முதலமைச்சருக்கு எதிராகச் செயற்பட்டதன் மூலமும் நீதிவிசாரணைக்குழு முன் தோன்ற மறுப்பதன் மூலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் டெலோ சார்பில் வடக்கு மாகாண அமைச்சராகவுள்ள பா.டெனிஸ்வரன் கட்சியின் முடிவுகளை மீறியிருந்தார். இந் நிலையில், கடந்த […]

கூட்டு அரசாங்கத்துக்குள் பிளவு – ஒட்டவைப்பதற்கு மைத்திரி தீவிர முயற்சி

பங்களாதேஷ் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கூட்டு அரசாங்கத்தில் பிளவுகளை ஏற்படுத்தக் கூடிய- சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ள புதிய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார். பங்களாதேசுக்குப் புறப்படுவதற்கு முன்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் பலர், இந்த ஆண்டில் நடத்தப்படும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சி […]

நவம்பர் கடைசி வாரத்தில் கலப்பு முறையில் தேர்தல்: சிறு கட்சிகளின் போராட்டம் வெற்றி : அமைச்சர் மனோ கணேசன்

நாடு முழுக்க உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் இறுதி வாரத்தில் நடைபெறுவதற்கான சாத்தியம் இன்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளான அமைச்சர்கள் நிமல் சிறிபால சில்வா, ரவுப் ஹகீம், மனோ கணேசன், ரிசாத் பதுதின், கபீர் ஹசிம், பைசர் முஸ்தபா, லசந்த அழகியவன்ன, அஜித் பெரேரா, அனுரகுமார திசாநாயக்க, […]

7 நாடுகளின் பயணிகளின் விசாவை உன்னிப்பாக கண்காணிக்க இலங்கை தீர்மானம்

பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை உன்னிப்பாக கண்காணிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக உள்நாட்டு விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்புக் கரிசனைகளைக் கருத்தில் கொண்டே இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. சிரியா, பாகிஸ்தான், எகிப்து, ஐவரிகோஸ்ட், கானா, நைஜீரியா, கமரூன் ஆகிய ஏழு நாடுகளில் இருந்துவரும் பயணிகளுக்கு நுழை விசைவு வழங்கப்படுவதற்கு முன்னர், முழுமையான ஆய்வுக்குட்படுத்தப்படும். ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பாக சிரியா […]

‘சமஷ்டி’ என்ற பெயரின்றி அதிகூடிய அதிகாரப் பகிர்வு! – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு 

“காணி, சட்டம் ஒழுங்கு, பொலிஸ், கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், கடற்றொழில், எல்லாவிதமான கைத்தொழில், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், தொழில்வாய்ப்பு உட்படச் சகல சமூகப் பொருளாதார விடயங்களையும் தாமே தமது பிரதிநிதிகள் ஊடாகக் கையாளக் கூடிய வகையில் – சமஷ்டி என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் அதிகூடிய அதிகாரங்கள் பகிரப்படுமாக இருந்தால் அது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாதகமாகப் பரிசீலிக்கும்.” – இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் […]

ஐ.நா. அறிக்கையாளர் எமர்சன் அடிப்படை நாகரிகம் இல்லாதவர்! – சாடுகின்றார் விஜயதாஸ

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் எந்வொரு இராஜதந்திர தகைமையையோ, அடிப்படை நாகரிகத்தைக் கொண்டவரோ அல்லர் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கூறியுள்ளார். ஐந்து நாள் பயணமாக இலங்கை வந்திருந்த மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன், கடந்த வெள்ளிக்கிழமை தனது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியிருந்தார். இவர் இலங்கையில் விஜயத்தை மேற்கொண்டிருந்தபோது நீதி அமைச்சர் […]

ஐ.நா. சிறப்பு அறிக்கையாளருடன் விஜயதாஸ கடும் வாக்குவாதம்!

இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு விடயத்தில் ஐ.நாவின் தலையீடுகள் தொடர்பாக, கொழும்பு வந்திருந்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளருக்கும் நீதி அமைச்சர் விஜயதாஸ  ராஜபக்ஷவுக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. ஐந்து நாட்கள் பயணமாக மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு  குறித்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரான பென் எமர்சன், ஐந்து நாட்கள் விஜயமாக கடந்த 10ஆம் திகதி இலங்கைக்கு […]

போர்க்குற்ற விசாரணை இலங்கையில் படுதோல்வி! – அரசின் போக்குக் குறித்து ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் காட்டம்

ஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற விடயத்தில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் முடக்க நிலைக்குள்ளாகியுள்ளதாகத் தெரிகின்றதென இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மனித உரிமைககள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் பணிமனையில் நேற்று மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய நாடுகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் […]