விடுதலைப் புலிகளுடனான அமைதி முயற்சிகளை சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க மிகவும் இரகசியமாகவே வைத்திருந்தார் என்று நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். WION என்ற ஊடகத்துக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், சிறிலங்காவில் நோர்வேயின் சமாதான முயற்சிகள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார். அதில், “அமைதி முயற்சிகளில் ஈடுபடுமாறு எமக்கு விடுத்த அழைப்பை அப்போதைய சிறிலங்கா அதிபர் சந்திரிகா குமாரதுங்க மிகவும் இரகசியமாகவே வைத்திருந்தார். அதுபற்றி அப்போது […]
முக்கிய செய்திகள்
Head News
மஹிந்தவுடன் இணையாதீர்; மைத்திரி அணியில் சேரவும்! – விஜயதாஸவுக்கு டிலான் அழைப்பு
“நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை ஐக்கிய தேசியக் கட்சி தனது கட்சியிலிருந்து விலக்கினால் அவர் மஹிந்தவுடன் போய் இணையாமல் மைத்திரியுடன் வந்து இணையவேண்டும்.” – இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் அமைச்சர் டிலான் பெரேரா. இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமைக்கு நீதி அமைச்சர் விஜயதாஸ எதிப்புத் தெரிவித்துள்ளதால் அவருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்த விடயத்தில் விஜயதாஸவுக்கு ஆதரவு […]
அரசியல் எதிரிகளை எந்த அரசும் இந்தளவுக்குப் பழிவாங்கியதில்லை! – குமுறுகின்றார் மஹிந்த
இலங்கையில் ஆட்சி நடத்திய எந்தவொரு அரசும் தனது அரசியல் எதிரிகளை இந்தளவுக்குப் பழிவாங்கியது கிடையாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “இந்தப் பழிவாங்கலின் உச்சகட்டமாக இந்த வாரத்தில் எனது மனைவியையும், மகன்கள் இருவரையும் புலனாய்வுப் பொலிஸார் விசாரணை என்ற பெயரில் மணிக்கணக்கில் சித்திரவதை செய்திருக்கிறார்கள். எனது மனைவி ஷிராந்தியிடம் அநாவசியமான அநாகரிகமான கேள்விகளைக் கேட்டு கொடுமைப்படுத்தியிருக்கின்றனர். இந்த […]
வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்! – ஜனாதிபதியிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வேண்டுகோள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்தவேளை அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இலங்கை அரசின் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் குறித்து தங்களுக்கு நம்பிக்கையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது:- “இலங்கையில் காணாமல்போகச்செய்யப்பட்டவர்கள் குறித்து ஆராய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆணைக்குழுக்கள் தொடர்பில் நாங்கள் சந்தித்த […]
பாலச்சந்திரன் படையினராலேயே படுகொலை! – எரிக் சொல்ஹெய்ம் தெரிவிப்பு
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், படையினரால் பிடிக்கப்பட்டே படுகொலை செய்யப்பட்டார் என்று தாம் வலுவாக சந்தேகிப்பதாகவும், இது ஒரு மோசமான தீய செயல் என்றும் தெரிவித்துள்ளார் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம். விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சுக்களிலும், அமைதி முயற்சிகளிலும் நடுநிலையாளராகப் பங்கேற்ற எரிக் சொல்ஹெய்ம், சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். “பிரபாகரன் எப்படிக் […]
இலங்கை கடற்படைத் தளபதியாக தமிழர் நியமனம்
கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன வரும் 22ஆம் நாளுடன் ஓய்வுபெறவுள்ளார். அதேவேளை, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான, ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவும், வரும் 21ஆம் நாளுடன் ஓய்வுபெறவுள்ளார். இந்தநிலையில், […]
ஜெனீவா தீர்மானம் குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை: புதிய வெளிவிவகார அமைச்சர்
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் முன்வைத்த யோசனைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. இலங்கையின் நற்பெயரையும், நன்மதிப்பையும் சர்வதேச மட்டத்தில் பிரபல்யப்படுத்தும் நோக்கில் தூதுவராலயம், உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் கன்சியூலர் காரியாலயங்களை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். இன்று காலை அமைச்சில் தமது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டவேளையில் அமைச்சர் திலக் மாரப்பன இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். […]
ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் நீதியமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டு
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கொழும்பில் பிரதமர் தலைமையில் இடம்பெற்றது. கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்றைய தினம் முற்பகல் 10.30 அளவில் செயற்குழுக் கூட்டம் ஆரம்பமாகி 12.10 அளவில் முடிவடைந்துள்ளது. தேர்தலில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஊழல்,மோசடி வழக்குகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவிற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பதிலளித்த விஜேதாச ராஜபக்ச தான் எந்த […]
மஹிந்த அரசின் மோசடிகள்: ‘ட்ரயல் அட்பார்’ மூலம் விசாரணை! – இனித்தான் அதிரடி நடவடிக்கை என்கிறார் ராஜித
“மஹிந்த ஆட்சியின்போது இடம்பெற்ற பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக மேல்நீதிமன்றத்தில் “ட்ரயல் அட்பார்’ முறையில் விசாரணை நடத்துவதற்கு அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டுள்ளது” என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இதைச் செய்வதற்கு அரசமைப்பில் மாற்றம் கொண்டுவரவேண்டியதில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் செயற்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் […]
பறிபோகுமா விஜயதாஸவின் அமைச்சுப் பதவி? – இன்று கூடுகின்றது ஐ.தே.கவின் செயற்குழு
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு எதிரான குரல்கள் ஐ.தே.கவுக்குள் வலுப்பெற்றுள்ள நிலையில், அவரின் அமைச்சுப் பதவியைப் பறிப்பதற்கான தீர்மானம் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் சாத்தியம் காணப்படுகின்றது என கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் குறித்த அமைச்சரவையின் […]





