“இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு மைத்திரி – ரணில் தலைமையிலான அரசுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும். இதனை இவ்வாரம் இலங்கை வரும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியாவுக்கான பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ்ஸிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரில் வலியுறுத்தவுள்ளது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் […]
முக்கிய செய்திகள்
Head News
அமெரிக்காவுக்கு எதிராக வடகொரியா களமிறக்கும் புதிய ஆயுதங்கள்!
திட எரிபொருளைப் பயன்டுத்தி இயங்கக்கூடிய ராக்கெட் எஞ்சின்களைத் தயாரிக்க வடகொரிய அதிபர் அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். கொரிய தீபகற்பப் பகுதிகளில் பதற்றம் ஏற்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுவந்த வடகொரியாவுக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்நிலையில் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பில் அமெரிக்கா கொண்டுவந்தது. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்படும் என வடகொரியா அறிவித்ததால் […]
சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட, பிரபல சீக்கிய சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது சிபிஐ சிறப்பு நீதிமன்றம். பாலியல் வழக்கில், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் குற்றவாளி என, கடந்த இரு தினங்களுக்கு முன்னர், பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. இதனை அடுத்து, அவர் ரோதக் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நிலையில், […]
தியாகத்திற்கும் துரோகத்திற்கும் இடையே யுத்தம்
தமிழகத்தில் தியாகத்திற்கும், துரோகத்திற்கும் இடையேயான யுத்தம் நடைபெற்று வருவதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தேனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 122 எம்.எல்.ஏக்களும் எங்கள் ஆதரவாளர்கள் தான். ஆனால் அதில் ஒரு சிலர் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் சுயநலத்துடன் செயல்பட்டு வருகின்றனர். வாக்காளர்கள் எந்த மனநிலையில் உள்ளனர் […]
பாதுகாப்புக் காரணங்களுக்காக 1,300 வெளிநாட்டு பயணிகளுக்கு இலங்கைக்குள் நுழையத் தடை!
கடந்த வருடம் 1,300க்கும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகளுக்கு இலங்கைக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்ததாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களுள் பெரும்பாலானோர் பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான், எகிப்து மற்றும் சிரிய நாட்டவர்களாவர். இந்த நாடுகளின் பிரஜைகள் இலங்கைக்குள் நுழைவதற்கு இலங்கை அரச புலனாய்வுப் பிரிவினர் அனுமதி வழங்கினால் மாத்திரமே குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அவர்களுக்கு விசா வழங்கும். 2014 ஆம் ஆண்டு முதல் உலகப் பாதுகாப்புக்கான வரைமுறைகள் வகுக்கப்பட்ட பின்னர் குறிப்பிட்ட சில நாடுகளின் […]
கிளிநொச்சியில் வாள்வெட்டு! குடும்பஸ்தர் படுகாயம்!!
கிளிநொச்சியில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் பாடுகாயமடைந்துள்ளார் பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த நான்கு பிள்ளைகளின் தந்தை மீது நபரொருவர் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் கிளிநொச்சி, கோணாவில் பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் நடந்துள்ளது. வாள்வெட்டில் படுகாயமடைந்த காந்தி கிராமத்தைச் சேர்ந்த 53 வயதுடைய கிருபாகரன் என்பவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். உழவு இயந்திரத்தில் வந்த […]
மாகாண சபைகள் கலைக்கப்பட்ட பின்னர் மேற்பார்வை அரசு அமைக்கப்படவேண்டும்! – விக்கி யோசனை
20 ஆவது திருத்தச் சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டு, அதன் கீழ் மாகாண சபைகள் கலைக்கப்பட்டால், அதன் பின்னர் மாகாணங்களில் மேற்பார்வை அரசு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “ஒன்பது மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கான 20 ஆவது அரசமைப்பு திருத்த வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டால், அனைத்து மாகாண […]
ஜனாதிபதி மைத்திரியின் கையில் சட்டமா அதிபர் திணைக்களம்?
சட்டமா அதிபர் திணைக்களத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவுள்ளார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நீதி அமைச்சின் கீழேயே இதுவரை காலமும் சட்டமா அதிபர் திணைக்களம் இருந்து வருகிறது. விஜயதாஸ ராஜபக்ஷ நீதி அமைச்சராக இருந்தபோது, சட்டமா அதிபர் திணைக்களம் சரியாகச் செயற்படவில்லை என்று அரசில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் […]
வடக்கில் புதனன்று மாபெரும் போராட்டங்கள்!
“வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்” என்று வடக்கு மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “போர் முடிந்த பின்னர் பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்களில் நூற்றுக்கொருவர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தை முன்னிட்டு, ஓகஸ்ட் 30 ஆம் திகதி புதன்கிழமை வவுனியாவில் பெரும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவை பிரதானப்படுத்தி முல்லைத்தீவு மாவட்ட […]
கமலோடு இணைந்து மீண்டும் வாழ்க்கை
நடிகர் கமலுடன் இணைந்து வாழ்ந்து வந்த கவுதமி, சில மாதங்களுக்கு முன் அவரிடமிருந்து பிரிந்து தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் கமலோடு கவுதமி இணைந்து வாழ முடிவெடுத்திருப்பதாகவும், அவருடன் நெருக்கம் காட்டுவதால், மீண்டும் கமலும், கௌதமியும் இணைய இருப்பதாகவும் வீடியோ செய்தி ஒன்று வெளிவந்தது. அந்த வீடியோவை வெளியிட்டு அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள்ள கவுதமி ‘முட்டாள்கள் அர்த்தமற்று பேசுகிறார்கள். நாய்கள் குரைக்கும். நான் […]





