எதிர்வரும் 2018ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டம் பாராளுமன்றில் சற்று முன் நிறைவேற்றப்பட்டது. 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த மாதம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் சபையில் வாசிக்கப்பட்டது. இதையடுத்து, உத்தேச வரவு-செலவுத் திட்டத்தின் மீதான விவாதங்கள் கடந்த சுமார் ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தது. உத்தேச வரவு-செலவுத் திட்டத்தின் மீதான மூன்று கட்ட வாக்கெடுப்பின் இறுதி வாக்கெடுப்பு சற்று முன் பாராளுமன்றில் நடைபெற்றது. இதில், வரவு-செலவுத் […]
முக்கிய செய்திகள்
Head News
ஆர்.கே.நகரில் இரட்டை இலை தினகரனிடம் தோல்வி அடையும்; கருத்துக்கணிப்பில் தகவல்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் டிடிவி தினகரனிடம் இரட்டை இலை சார்ப்பில் போட்டியிடும் மதுசூதனன் தோல்வி அடைவார் என பண்பாட்டு மக்கள் தொடர்பகம், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து பண்பாட்டு மக்கள் தொடர்பகம், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு 7 வார்டுகளில் இளைஞர்கள், இளம்பெண்கள், பெரியவர்கள் என பல தரப்பிலிருந்தும் […]
8 கோடி ரூபா பெறுமதியான சிகரட்டுகள் பறிமுதல்!
சட்டவிரோதமாக நாட்டுக்குள் எடுத்துவரப்பட்ட ஒரு தொகை வெளிநாட்டு சிகரட்களை சுங்க அதிகாரிகள் நேற்று (8) மாலை பறிமுதல் செய்தனர். மொத்தமாக பதினாறு இலட்சம் சிகரட்டுக்கள் அடங்கிய இந்தத் தொகையின் பெறுமதி சுமார் எட்டுக் கோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிகரட்டுகள் டுபாயில் தயாரிக்கப்பட்டவை என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருமாவளவன் தலைக்கு ரூ.1 கோடி பரிசு
சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டப்படுவதை ஏற்றுக்கொண்டால் அனைத்து இந்து கோவில்களையும் இடித்துவிட்டு பெளத்த விகார்களாக மாற்ற வேண்டும் என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறினார். திருமாவளவனின் இந்த கருத்துக்கு இந்து அமைப்புகளும், பாஜக தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் திருப்பூரைச் சேர்ந்த இந்து முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவர் திருமாவளவன் தலையை […]
சட்டவிரோதமாக கள் விற்ற ஒன்பது பேருக்குத் தண்டம்
சட்டவிரோதமான முறையில் கள் விற்பனை செய்த மற்றும் அளவுக்கதிகமாக கள் வைத்திருந்த ஒன்பது பேருக்கு நேற்றுத் தண்டம் விதிக்கப்பட்டது. மதுவரித் திணைக்களத்தால் பருத்தித்துறை நீதிமன்றில் தொடுக்கப்பட்ட குறித்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்போதே நீதிவான் நளினி சுபாகரனால் 13 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் கள் விற்பனை செய்த மூவருக்கு தலா 2 ஆயிரம் ரூபாவும், ஒருவருக்கு ஆயிரம் ரூபாவும் விதிக்கப்பட்டது. அளவுக்கதிகமாக கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் […]
8-வது நாளாக மீனவர்களை தேடுகிறார்கள்
தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், கடந்த 30-ந்தேதி தாக்கிய ‘ஒகி’ புயலில் சிக்கி மாயமானார்கள். இதில் ஏராளமானோர் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர் களை தேடும் பணியில் கடற்படை, கடலோர காவல்படை மற்றும் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். மாயமான மீனவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி இன்று (சனிக்கிழமை) 8-வது […]
8-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீவைத்து எரிப்பு
மத்திய பிரதேசத்தில் 8-ம் வகுப்பு மாணவியை இரண்டு கொடூரர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அச்சிறுமியை தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் சாகர் மாவட்டம் தேவல் கிராமத்தில் 8ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட 2 இளைஞர்கள் அவரது வீட்டிற்குள் புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை சிறுமி மீது ஊற்றி […]
இன்றைய ராசிபலன் 09.12.2017
மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். கனவு நனவாகும் நாள். ரிஷபம்: நட்பால் ஆதாயம் உண்டு. வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் […]
போராளிகளை தாழ்த்தி பேசிய சுமத்திரன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் , துளசி
இடர்பாடுகள் நிறைந்த இன்றைய தாயகஅரசியல் களத்தில் நாவடக்கம் பிரதானமானது. தமிழர்கள் ஆயுதமேந்தியது இன்னுமோர் இனத்தின்மீது மேலாதிக்கத்தை செலுத்துவதற்காக அல்ல எங்களது தமிழினம் கொல்லப்படுவதில் இருந்து தமை பாதுகாத்துக்கொள்வதற்காகவே ஆயுதமேந்தினோம். அந்தவகையில் உயிரையும் உதிரத்தையும் கொடுத்து தமிழ்த்தேசியத்தை உருவாக்கி அதன் காவலர்களாக கவசங்களாக காத்துநின்றவர்கள் போராளிகள்தான். நாம்உருவாக்கிய தேசியத்தில் பதவிகள் தருகின்ற இதமானசூடுகளை அனுபவித்து ஆள்கின்றவர்கள், விடுதலைக்கனவுடன் ஆயுதமேந்தியோரை மலினப்படுத்தும்விதமாக ஆயுததாரிகள் என விளித்துநிற்பது அறத்திற்கு அப்பால்பட்டது. ஒவ்வொருதேர்தல்காலத்திலும் நீங்கள் அடிக்கின்ற […]
ராஜபக்சவின் பாதுகாப்பை அதிகரிக்க தினேஷ் குணவர்தன கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டார். நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கும் நடவடிக்கைகளில் மஹிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவுள்ளதாகவும் அதன்போது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சுட்டிக் காட்டியே தினேஷ் குணவர்தன இந்தக் கோரிக்கையை விடுத்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய பிரதமர், 154 பாதுகாப்பு அதிகாரிகள் ராஜபக்சவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருப்பதாகவும் உயிராபத்து குறித்த […]





