முல்லைத்தீவு பெருங்கடலுக்கு நள்ளிரவில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இதுவரையில் கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
Head News
யாழில் வாள்வெட்டுச் சம்பவம்
யாழில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பங்களுடன் தொடர்புடைய ஆறு போ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனா். குறித்த வாள்வெட்டு குழுவினர் யாழ் வட்டுக்கோட்டை பகுதியில் தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்கு தயாரகி இருப்பதாக வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மாலை வட்டுகோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞர்கள் ஒரு தலைக் காதல் விவகாரம் காரணமாகவே வாள்வெட்டுச் சம்பவங்களில் தொடர்சியாக ஈடுபட்டு வந்துள்ளனர் என ஆரம்ப கட்ட […]
ஜெ.வை நாங்கள் பார்க்கவே இல்லை
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, அரசு தரப்பில் நியமிக்கப்பட்ட மருத்துவர்களில் 4 பேர் பார்க்கவே இல்லை என வாக்குமூலம் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு நியமித்துள்ளது. விசாரணையை தொடங்கியுள்ள ஆறுமுகச்சாமி, ஜெ.வின் மரணம் தொடர்பாக விசாரிக்க 60க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பியுள்ளார். இந்நிலையில், ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட […]
பாலஸ்தீனுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
இஸ்ரேல் நாட்டின் தலைநகர் ஜெருசலேம் என்று அங்கீகரித்து, அதற்கான அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் வாஷிங்டனில் வெளியிட்டார்.
120 முஸ்லி।ம் குடும்பங்களுக்கு முல்லைத்தீவில் புதிய வீடுகள்!
முல்லைத்தீவைச் சேர்ந்த 120 முஸ்லிம் குடும்பங்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு அடிக்கல் நடப்பட்டது. இந்த நிகழ்வு நேற்றுக்காலை முல்லைத்தீவு கிச்சிராபுரத்தில் இடம்பெற்றது. இந்தத் திட்டத்தில் ஓரிரண்டு தமிழ்க் குடும்பங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன என அறிய முடிகின்றது. வீட்டுத் திட்டத்துக்கான நிதியை ஐக்கிய அரபு ராச்சியத்தின் தனவந்தர் ஒருவர் வழங்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது. உள்நாட்டுப் போர் காரணமாக கிச்சிராபுரத்தில் இருந்து இடம்பெயர்ந்து 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீள்குடியமர்ந்த 120 குடும்பங்களுக்கே இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளன. […]
மாவீர் துயிலும் இல்லத்தில் நடப்பட்ட பெயர்ப் பலகை பிடுங்கி எறியப்பட்டது
கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த தாவரவியல் பூங்கா என்ற பெயர்ப்பலகை இனந்தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் கரைச்சிப் பிரதேச சபையினால் கடந்த திங்கட்கிழமை இந்தப் பெயர்ப் பலகை போடப்பட்டது. இந்த நிலையில், அன்றையதினம் இரவே சேதமாக்கப்பட்டு, பிடுங்கி எறியப்பட்டது. அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்ட த்தில், எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக தாவரவியல் பூங்கா எனும் பெயர்ப் பலகை குறித்த சபையால் நடப்பட்டது. குறித்த மாவீரர் துயிலுமில்லத்தில் […]
ஆர் கே நகர் தேர்தல் கருத்து கணிப்பு
[poll id=”5″]
திண்டுக்கல்லில் கார் கவிழ்ந்து விபத்து
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்த திருமணவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி காலை காரில் சென்றார். காரை அவருடைய டிரைவர் மேத்யூ என்பவர் ஓட்டினார். அவருடன் சேலத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவரும் சென்று உள்ளார். இவர்கள் சென்ற கார், திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலையில் கலெக்டர் அலுவலகத்தை அடுத்துள்ள அஞ்சலி ரவுண்டானா மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் இடதுபக்க தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்தது. இதில் […]
தொப்பி சின்னம் யாருக்கு கிடைத்துள்ளது தெரியுமா?
சென்னை ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன், தொப்பி சின்னத்தை பெற சுப்ரீம் கோர்ட் வரை சென்றும் அவரால் இந்த விஷயத்தில் வெற்றி பெற முடியவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன், அந்த சின்னம் மக்கள் மனதில் பதிய பணத்தை தண்ணீராக செலவு செய்ததாக கூறப்பட்டது. எனவே மீண்டும் அதே சின்னத்தை பெற்றால் வெற்றி பெறுவது எளிது என்பதால் அந்த […]
8 மாத கர்ப்பிணியை பலாத்காரம் செய்து தீ வைத்த ராணுவ வீரர்!!
மியான்மரின் வடக்கு பகுதியில் வசித்து வரும் ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு ஆளாகிவருகின்றனர். ராணுவத்தினரின் தாக்குதலுக்கு பயந்து நாட்டை விட்டு தப்பிச்செல்கின்றனர். பெரும்பாலான ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்திற்கு தப்பி செல்கின்றனர். இதுவரை சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில், ராணுவத்தினரின் கோரமான தாக்குதல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரோஹிங்கிய முஸ்லிம் பெண் ஒருவர் இது குறித்து கூறியதாவது, நான் 8 மாத […]





