சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என மக்கள் செய்தி மையம் கருத்து கணிப்பு நடத்தி செய்தி வெளியிட்டுள்ளது. ஆர்.கே.நகரில் கடந்த 21ம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெற்றது. சுயேட்சை வேட்பாளர்களோடு சேர்த்து 50க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டாலும் திமுக, அதிமுக மற்றும் தினகரன் ஆகிய மூவருக்கும் இடையே மட்டுமே பலத்த போட்டி நிலவுகிறது. அந்நிலையில், தேர்தலுக்கு முன்பு அந்த தொகுதியில் யார் வெற்றி […]
முக்கிய செய்திகள்
Head News
தினகரன் வெற்றி பெற்றால் அதிமுக என்ன ஆகும்
நடந்து முடிந்துள்ள ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ஊடகங்களின் கருத்துக்கணிப்பின்படி டிடிவி தினகரன் வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஒரே ஒரு தொகுதியில் திமுகவோ அல்லது அதிமுகவோ வெற்றி பெற்றால் ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது. ஆனால் தினகரன் வெற்றி பெற்றால் அதிமுகவில் ஒரு பெரிய மாறுதல் இருக்கும் என்று கூறப்படுகிறது அதிமுகவில் இன்னும் மூன்று ஆண்டுகள் பதவியை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே பலர் ஈபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையை […]
எதிர்கட்சி தலைவர் வைத்தியசாலையில் அனுமதி!!!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலையில் வைத்து நேற்று எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் சுகயீனமுற்றதாகவும் அதன் பின்னர் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடும் கோபத்தில் சசிகலா
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டதால், தினகரன் மீது சசிகலா கடுமையான கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். 20 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்த நிலையில், பழச்சாறு பருகியபடி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார். ஜெ.வின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், முதன் முதலாக […]
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மேம்படுத்த இளநீர் விற்பனைத் திட்டம்
முல்லைத்தீவில் மாற்றுத்திறனாளிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு இளநீர் விற்பனைத் திட்டத்துக்காக மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் 5 லட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். முல்லைத்தீவில் போரால் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகளை இழந்த பலர் வறுமையில் வாடுகின்றனர். அவர்களின் அன்றாட பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக துரைராசா ரவிகரன் தனது பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீடு மூலம் குறித்த நிதி ஒதுக்கீட்டைச் செய்திருந்தார். இந்த திட்டத்துக்குள் இருபத்தியொரு […]
விகாராதிபதியின் உடலை தகனம்செய்ய அதிகாரம் கொடுத்தது யார் ?
“யாழ்ப்பாணம் – முற்றவெளியில் விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வது தமிழ் மக்களின் உணர்வுகளை மலினப்படுத்தும் ஒரு நடவடிக்கை, இவ்வாறன செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்குகிறது.” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். சமகால நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தமிழ் மக்களின் பண்பாட்டில் […]
பூநகரி பரந்தன் வீதியில் விபத்து : ஒருவர் பலி
கிளிநொச்சி – பூநகரி பரந்தன் வீதியில் நல்லூர் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியானதோடு மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரியிலிருந்து பூநகரி ஊடாக பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், பரந்தன் பகுதியிலிருந்து பூநகரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி […]
விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய நீதிமன்று அனுமதி!!
யாழ்ப்பாணம் நாகவிகாரையின் விகாராதிபதியின் பூதவுடலை யாழ்ப்பாணம் முற்றவெளியில் தகனம் செய்யத் தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பொது இடத்தில் பூதவுடலைத் தகனம் செய்வது பொதுத் தொல்லை என மனு தாரரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். அவரின் விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் பொலிஸார் தேரரின் பூதவுடலை முற்றவெளியில் தகனம் செய்ய அனுமதி கோரினர். இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்த நீதிவான், தேர்ரின் பூதவடலை தகனம் […]
2018 உள்ளூராட்சி சபை தேர்தல் : உங்கள் ஆதரவு யாருக்கு?
2018 உள்ளூராட்சி சபை தேர்தல் : உங்கள் ஆதரவு யாருக்கு? கண்டிப்பா உங்களோட வாக்கை பதிவு பண்ணுங்க..!! [poll id=”6″]
அடேய்… எல்லை மீறி போறீங்க
சமீபத்தில் வெளியான ஜெயலலிதாவின் வீடியோவில் நெட்டிசன்கள் சில சிக் ஜாக் வேலைகள் செய்து மீம்ஸ்களா இணையத்தில் உலவ விட்டுள்ளனர். மறைந்த முதவ்லர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்டது என ஒரு வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சமீபத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து ஜெயலலிதாவை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட போது அந்த வீடியோ எடுக்கப்பட்டது எனவும், சசிகலாவின் மீது சுமத்தப்பட்டிருக்கும் கொலைப்பழியை நீக்கவே இந்த […]





