முக்கிய செய்திகள்

Head News

ஜெருசலேம் அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெறக்கோரும் ஐ.நா. தீர்மானம் வெற்றி

ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேலும், பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடி வந்தன. இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும் வகையில் ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. இதற்கு முஸ்லிம் நாடுகள் மட்டுமன்றி, பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெற வேண்டும் என்று ஐ.நா. சபை கேட்டுக்கொண்டது. ஆனால் அமெரிக்கா அதற்கு திட்டவட்டமாக மறுத்து விட்டது. இந்நிலையில் ஜெருசலேம் அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெற வேண்டும் […]

தோழிக்காக தனது உயிரை விட்ட பிளஸ்-1 மாணவி

விழுப்புரம் அருகே உடன் படித்த தோழி இறந்ததால் கவலையில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் பிரசாந்தி(16). இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். திருநாவலூரை அடுத்த ஆவலம் கிராமத்தை சேந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் ரசிகா(16). இவரும் பிரசாந்தி படிக்கும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இருவரும் […]

இன்றைய ராசிபலன் 22.12.2017

Loading… மேஷம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றி கொள்வீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். நவீன சாதனங்கள் வாங்கு வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்துப் […]

2ஜி தீர்ப்பு குமாரசாமி தீர்ப்பை போன்றது : எச்.ராஜா

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை வழக்கில் திமுகவின் அ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம். இந்த தீர்ப்பை திமுக, காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பலரும் வரவேற்று வருகின்றனர். திமுகவினர் இந்த தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த தீர்ப்பு குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியபோது இந்த தீர்ப்பு மேல்முறையீடு செய்யப்பட்டு நீதி வெல்லும் என […]

ஆர்.கே.நகர் வாக்குப்பெட்டிகள் எங்கே உள்ளன?

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தல் இன்று ஒருவழியாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று பதிவான வாக்குகள் வரும் 24ஆம் தேதி எண்ணப்படவுள்ளன. இந்த நிலையில் இன்று பதிவான மின்னணு இயந்திரங்கள் கொண்ட வாக்குப்பெட்டி பலத்த பாதுகாப்புடன் சென்னை ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் உட்பட 50க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை வீரர்கள் இரவுபகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட […]

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ ஆகிறார் தினகரன்?

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாகவே இருந்தது. மேலும் இன்று 2ஜி வழக்கின் தீர்ப்பும் சாதகமாக வந்துள்ளதால் திமுக எளிதில் வெற்றி பெறும் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர் ஆனால் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இதன் முடிவுகளின்படி பார்த்தால் டிடிவி தினகரன் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என்று தெரிகிறது. இந்த கருத்துக்கணிப்பில் […]

பரிசுப் பொருள் தொடர்பான வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா

ஜெயலலிதா தொடர்பான பல வீடியோக்கள் டிடிவி தினகரன் வசம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்பான பல வீடியோக்கள் டிடிவி தினகரன் வசம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உடல் நலக்குறைபாடு காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணமடைந்தார். அவரின் மரணத்தில் தொடர்ந்து பல சந்தேகங்களும், மர்மங்களும் நிலவுகிறது. காரணம், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணமடைந்த வரை அவரின் புகைப்படமோ, வீடியோவோ வெளியாகவில்லை. தற்போது அவரின் மரணம் குறித்து விசாரணை செய்ய தமிழக […]

2ஜி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் கனிமொழி, ஆர்.ராசா ஆகியோரை விடுவித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் ரூ.1,76,000 கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது என கணக்கு தனிக்கை குழு குற்றம்சாட்டியது. இதில் முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2011 […]

ஆர்.கே.நகரில் 7.32 சதவீத வாக்குகள் பதிவு…

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால், தொகுதி முழுவதிலும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 258 வாக்குச்சாவடி மையங்களில் 1600 மின்னணு வாக்கு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், வாக்களித்தவர்களுக்கு எந்த சின்னத்தில் வாக்களித்தோம் என்ற ரசீது கொடுக்கும் மிஷினும் தயாராகவுள்ளதாகவும் கூறப்படுகிறது இன்று […]

ஈரானில் நிலநடுக்கம்

ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் தென்மேற்கே மெஷ்கிண்டாஷ்ட் நகர் அமைந்துள்ளது. இங்கு 5.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. இந்நிலநடுக்கம் தெஹ்ரான் உள்பட ஈரானின் வடக்கே பல்வேறு நகரங்களிலும் உணரப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளுக்கு மீட்பு குழுவினர் சென்றுள்ளனர். கடந்த நவம்பரில் மேற்கு ஈரானில் 7.2 அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் 600க்கும் மேற்பட்டோர் […]