இலங்கை செய்திகள்

அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு

அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு இடமில்லை!

அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு இடமில்லை! இலங்கை அரசின் புதிய அமைச்சரவை இன்றையதினம் பொறுப்பேற்றுள்ளது. அவர்களின் சத்திய பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த அமைச்சரவையில் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றம் சென்ற ஆறுமுகன் தொண்டமானும், வட மாகாண தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்றம் சென்ற டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுள்ளனர். இதேவேளை புதிய அமைச்சரவையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவர் […]

மக்களை சந்தித்து நன்றி கூறிய சஜித்

மக்களை சந்தித்து நன்றி கூறிய சஜித் ஜனாதிபதி தேர்தலில் அடைந்த தோல்வியின் பின்னர் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சஜித் பிரேமதாச இன்றைய தினம் தனது ஆதரவாளர்களையும், பொது மக்களையும் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தனக்கு தேர்தல் காலத்தில் வழங்கிய உதவிக்கும் வாக்களித்தமைக்காகவும் நன்றிகளை தெரிவித்துள்ளார். இந்த பொது மக்கள் சந்திப்பானது இன்றைய தினம் கொழும்பு வொக்ஷால் வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது.   […]

கோட்டாபய ராஜபக்க்ஷவை சந்தித்த சீன தூதுவர்

கோட்டாபய ராஜபக்க்ஷவை சந்தித்த சீன தூதுவர்

கோட்டாபய ராஜபக்க்ஷவை சந்தித்த சீன தூதுவர் நாட்டின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை இலங்கைக்கான சீன தூதுவர் செங் ஷுயுவானை, (H.E. Cheng Xueyuan) இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. அத்துடன் இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரி ஹியூ வெய் (Hu Wei) மற்றும் அரசியல்துறை பிரதானி லோ ச்சோங் (Lou Chong) ஆகியோரும் இந்த ந்திப்பில் கலந்துகொண்டனர். மேலும் […]

கோத்தபாயவின் வெற்றி கொண்டாட்டம்

நாடளாவிய ரீதியில் கோத்தபாயவின் வெற்றி கொண்டாட்டம்!

நாடளாவிய ரீதியில் கோத்தபாயவின் வெற்றி கொண்டாட்டம்! பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து நாடளாவிய ரீதியில் அவரின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களிலும் வெற்றிக்கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, காரைதீவு, கல்முனை, சாய்ந்தமருது உள்ளிட்ட பிரதேசங்களில் வெற்றியை கொண்டாடும் முகமாக இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர பட்டாசு கொளுத்தி தத்தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மக்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்துகின்ற […]

மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதி

மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து!

மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து! இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கோத்தபாயவிற்கு பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நாளை நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள கோத்தபாய ராஜபக்க்ஷவிற்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.      

கோதுமை விலை உயர்த்த முடியாது! மங்கள

நள்ளிரவு முதல் கோதுமை விலை உயர்த்த முடியாது! மங்கள

நள்ளிரவு முதல் கோதுமை விலை உயர்த்த முடியாது! மங்கள கோதுமை மாவின் விலையினை பிரிமா நிறுவனம் அதிகரித்திருப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர அவ்வாறு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லையென விளக்கமளித்துள்ளார். நாளைய தினம் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சியே இதுவென தெரிவிக்கின்ற அவர், விலையுயர்வுக்கு முன்னால் அமைச்சரவை மற்றும் நுகர்வோர் அதிகார சபை அனுமதிகள் பெற்றிருக்க வேண்டும் எனவும் அவ்வாறு எதுவும் வழங்கப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளார். […]

மஹிந்தவின் தந்திரங்கள் - குமார வெல்கம

மஹிந்தவின் தந்திரங்கள் அப்போது புரியவில்லை

மஹிந்தவின் தந்திரங்கள் அப்போது புரியவில்லை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நிர்மூலமாக்கித் தனது குடும்பக் கட்சியொன்றை ஸ்தாபிக்க மஹிந்த ராஜபக்ச நீண்டகாலமாக வைத்திருந்த திட்டத்தை அப்போது தாம் புரிந்து கொள்ளவில்லையென தெரிவிக்கிறார் குமார வெல்கம. இப்பின்னணியிலேயே தாமரை கோபுரம், தாமரை தடாகம் அரங்கம் போன்றவற்றை மஹிந்த அப்போதே நிறுவியுள்ளதாகவும் அந்த திட்டங்களை பலர் புரிந்து கொள்ளவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மஹிந்த ராஜபக்ச அழித்து விடாமல் பாதுகாக்கும் […]

சுதந்திர ஊடகவியலாளர் மீது தாக்குதல்

சுதந்திர ஊடகவியலாளர் மீது தாக்குதல்

சுதந்திர ஊடகவியலாளர் மீது தாக்குதல் காலி – ஹபராதுவ மீபே பகுதியைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளரும் எழுத்தாளருமான லசந்த விஜேரத்ன மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த ஊடகவியலாளர் லசந்த விஜேரத்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சுதந்திர ஊடகவியலாளரான லசந்த விஜேரத்ன ஊழலுக்கு எதிரான அமைப்பின் உறுப்பினராவார். இன்று அதிகாலை 2.30 மணியளவில் […]

நாடு முழுவதிலும் தீவிர பாதுகாப்பு !

நாடு முழுவதிலும் தீவிர பாதுகாப்பு !

நாடு முழுவதிலும் தீவிர பாதுகாப்பு ! ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைக்கான காலம் முடிவடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் கலகம் அடக்கும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார். இதுதவிர பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக மேலதிக பொலிஸ் வீதித் தடைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜனாதிபதித் […]

பயங்கரவாத தடைச்சட்டத்தை

பயங்கரவாத தடைச்சட்டத்தை எந்தவொரு காரணத்திற்காகவும் நீக்கப்போவதில்லை

பயங்கரவாத தடைச்சட்டத்தை எந்தவொரு காரணத்திற்காகவும் நீக்கப்போவதில்லை பயங்கரவாத தடைச்சட்டத்தை எந்தவொரு காரணத்திற்காகவும் நீக்கப்போவதில்லை எனவும் நிபந்தனைகளின்றியே தான் வேட்பாளராக முன்நிற்பதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் கிரீன் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தனியார்மயப்படுத்தலை விரும்பாதவன் என்றும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தனியார்மயப்படுத்தும் முட்டாள்தனமான தீர்மானத்தை எடுக்கப்போவதில்லை எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். மேலும், அனைத்து அரச நிறுவனங்களையும் இலாபமீட்டும் […]